English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Tanagra
n. பண்டைக் கிரேக்க நகரம் ஒன்றின் பெயர், டனாக்கராவில் செய்யப்பட்ட செந்நிறமான சிறு சுட்டகளிமண் உருவச் சிலை.
tandem
n. வரியிணைக் குதிரை வண்டி, ஒன்றன்பின் ஒன்றாக இணைத்த இரட்டைக் குதிரை வண்டி, வரியிணை இருக்கை மிதிவண்டி, வரியிணை இருக்கை முச்சக்கர மிதிவண்டி, (பெயரடை) மிதிவண்டி வகையில் இருக்கைகள் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்துள்ள, குதிரைகள் வகையில் ஒன்றன்பின் அன்றாகப் பூட்டப்பட்ட.
tandstickor
n. உராய்வதால் தீப்பற்றும் ஸ்வீடன் நாட்டுத் தீக்குச்சி.
tang
-1 n. முனை, விளிம்பு, நுதி, கொடுக்கு முனை, உந்து பகுதி, கொழுமுனை, கவர்முள் முகடு, கத்திவால் மீன், கைப்பிடிக்குள் இருக்கும் உளியின் பகுதி, உறைப்பான சிறப்புச் சுவைநயம், காரப்பண்பு, தனி நெடி, வேற்றுவாடை, நீடுசுவை, விடா நெடுமணம், தனிச் சிறப்பியல்பு, சாயல், சார்பெச்சப் பண்பு, (வினை) நீள்முனை அமைத்துக்கொடு, உறைப்புச் சுவையினால் அல்லது நெடியினால் தாக்கு.
tangency
n. தொடுவரை நிலை, வட்டத்தின் ஒருபுள்ளி தொட்டுப்பின் தொடாது விலகிச் செல்லுங் கோட்டு நிலை, தொட்டுத் தொடாநிலை, மீண்டிணையாத் தொடுநிலை, மீண்டணையாகத் தொடுநிலை, வெட்டாது சறுக்கிச் செல்லும் நிலை.
tangent
n. தொடுவரை வட்டத்தின் ஒரு தடவை மட்டும் தொட்டுப் பின் விலகிச் செல்லுங்கோடு, (கண) இடுக்கை செங்கோண முக்கோணத்தில் செங்குத்து வரைக்கும் கிடைவரைக்கும் இடையேயுள்ள வீதம், (பெயரடை) வெட்டாமல் தொடுகிற.
tangent-balance
n. வெள்ளிக்கோல், அளவுக்கூறுகள் குறிக்கப்பெற்ற தண்டின் நிலையினால் எடைகாட்டும் நிறை கோல்.
tangential
a. தொடுவரை சார்ந்த, தொடுவரையின் திசையில் செல்கிற, தொடுவரைபோற் சென்ற, ஒரு தடவை தொட்டு மீண்டுந் தொடாத, விலகிச் செல்கிற, விட்டு விலகிச் செல்கிற.
tangentially
adv. தொடுவரையின் திசையில், விலகித் தன் தனிப்போக்கிலே செல்லும் நிலையில், விலகிச் செல்லும் நிலையில்.
Tangerine
n. மொராக்கோவில் உள்ள டாங்கியர் நகரவாணர், தட்டையான சிறிய கிச்சிலிப்பழ வகை, (பெயரடை) டாங்கியர் நகரஞ் சார்ந்த.
tanghin
n. மடகாஸ்கர் என்னும் தீவுக்குரிய நச்சுக்கொட்டையினையுடைய மரவகை.
tangible
a. தொட்டுணரத்தக்க, பிழம்பியலான, திட்பமுடைய, தௌிவான, உறுதியான, தௌிவாகப் புரியக் கூடிய, ஐயமற்ற, மருட்சி தராத, நிலையான, மாயத் தோற்றமாயிராத, (சட்) உருப்படியான.
tangle
-1 n. கடுஞ்சிக்கல், சிக்கல் வாய்ந்த களம், கந்தறு கோலம், தாறுமாறான பின்னல் கூளம், கடுமுடிச்சு, குழம்பிய நிலை, கடும்புதி, அள்ளடிக்கரண்டி, மிக நுண்ணிய கடல்வாழுயிரிகளை அள்ளி மேலே கொண்டு வருவதற்கான அமைவு, (வினை) பின்னிச் சிக்கப்படுத்து, சிக்கிக்கொள், சிக்கலில் அகப்பட்டுக்கொள், பொறியில் அகப்படுத்து, சிக்க வை, இடர்களில் தொடர்பு படுத்து, மாட்டிவை.
tanglefood
n. வெறிச் சாராயம், வெறியூட்டுங் குடி வகைகள்.
tangly
a. ஒன்றோடொன்று பின்னிச் சிக்குற்ற, குழம்பிய குழப்பமடையும் பாங்குள்ள.
tango
n. தென் அமெரிக்க நடனவகை, (வினை) தென் அமெரிக்க நடனவகை ஆடு.
tangram
n. புதிர்வெட்டுக் கட்டம், ஏழு துண்டுகளாக வெட்டப்பட்டு வெவ்வேறு வடிவங்களிற் பொருத்தக்கூடிய சீன சதுரக்கட்ட விளையாட்டுப் பொருள்.
tanist
n. கெல்டிக் இனத்தலைவருக்குச் சட்டப்படி நிலையிறுதியான பின்னுரிமை யுடையவர், ஆளுபவருக்கு அடுத்தபடியான இனத்தின் தலைமூத்த வீரர்.
tanistry
n. கெல்ட்டிக் இனத் தலைமைவகையில் மரபுத் தேர்வுரிமை முறை, குடும்பததைச் சேர்ந்தவர்களில் முன்பே தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் பின்னுரிமை யடையும் ஏற்பாடு.
tank
n. குளம், நீர்த்தேக்கத் தொட்டி, தொடர்வண்டி, நீச்சேமிப்புக்கலம், வெடிக்கோட்டை, இயங்கும் பீரங்கிப் படை வண்டி.