English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
tallyman
n. புள்ளிவெட்டுக் கணிப்பு வரிக்கோலர், கணிப்புக் கோல் வைத்திருப்பவர், தவணைக் கடனீட்டுக் கடைவணிகர் படிமுகவர், மாதிரிகளைக் காட்டிச் சரக்குகளை விற்பவர், வைப்பாட்டியுல்ன் வாழ்பவர்.
talmi-gold
n. பொன் மெருகுக்கட்டி, மெல்லிய பொன் முலாம் பூசிய பித்தளை.
Talmud
n. யூத வேதம், சட்டம்-மரபு வழிக்கதை ஆகியவற்றில்தொகுப்பு, பாபிரேலானிய யூத திருன்றை.
Talmudist
n. யூதர் சட்டம்-மரபு வழிக்கதை ஆகியவற்றின் தொகுப்பு நுலறிஞர், யூத வேதப் பயிற்சி மாணவர், ஆய்வறிஞர், யூதவேத அறிஞர், யூதவேதத் தொகுப்பாளர்.
Talmudistic
a. யூதவேதஞ்சார்ந்த.
talon
n. வள்ளுகிர், கொடும்பறவையின் கூர்நகம், சீட்டாடத்தில் சீட்டு வழங்கீட்டுக்குப் பிறகு எஞ்சியிருக்கும் சீட்டுகள், தாழ்க்கடை, பூட்டில் திறவுதள்ளும் தாழ்க்கூறு, (க-க) வங்கிவளைவு பாம்பு வடிவ இரட்டை வளைவுச் சித்திர வேலைப்பாடு, வாள் அலகின் பின்னடி அலகு.
taluk
n. வட்டம், தாலுகா, தனியுடைமைப் பெரும்பரப்பு.
talukdar
n. வட்டகை வரியாட்சியாளர், பெருநில உரிமையளார்.
talus
n. கணுக்கால், கணுக்கால் எலும்பு, கோணக் கால் வகை, மேல்நோக்கி ஒடுங்கிச் சொல்லுஞ் சுவர்ச்சரிவு (மண்) மலையடிக்குவியல்.
tamandua, tamanoir
எறும்பைத் தின்னுந் தென்னாப்பிரிக்க கரடியின உயிர்வகை.
tamarack
n. அமெரிக்க ஊசியிலை மரவகை.
tamarin
n. மயிரடர்ந்த வாலுடைய சிறு தென் அமெரிக்க குரங்கு.
tamarind
n. புளி, புளியமரம்.
tamarind-fish
n. புளியிட்டடு ஆக்கிய மீன்கிற.
tamarisk
n. இறகுபோன்ற கிளைகளையுடைய நெய்தல்நிலை செடிவகை.
tamasha
n. வேடிக்கைக்காட்சி, காட்சிக்கோலம் பொழுதுபோக்கு விளையாட்டு.
tambour
n. தம்பட்ட வகை, ஒருகட் பெருமுரசு, துன்னல் வட்டு, பூவேலைக்குரிய இருவட்டிணை சட்டம், பூவேலைப் பட்டுத்துகில்., தூணின் நடுப்பகுதியிலுள்ள வட்டுருளைக் கல், கட்டுமானங்களின் வட்டப்பகுதி, திருக்கோயில் முகமண்டபத்தின் மடக்குத் தலைவாயில், முரசொலிர யெழுப்பும் மீன்வகை, முரசுவடிவ மீன்வகை, கோட்டைப்பாதை வேலியரண் காப்பு, கோட்டைவாயில் அகழரண் காப்பு, (வினை) இணைவட்டுச் சட்டத்தில் பூ வேலை செய், பூ வேலைத் துன்னல் செய்.
tambourin
n. சேண்டை, பிரான்சிலுள்ள பிரவென்சு பகுதியின் வழக்காற்றிலுள்ள நீண்டொடுங்கிய முரசுவகை, சேண்டை நடனவகை, சேண்டைநடன இசையமைப்பு.
tame
a. பழகிய, நன்கு பழக்கப்படுத்தப்பட்ட, படிமானமான, வசப்படுத்தப்பட்ட, சொற்கேட்டு நடக்கும்படி செய்யப்பட்ட, முரட்டுத்தன்மையற்ற, மூர்க்கத்தன்மை குறைக்கப் பெற்ற, (பே.வ) நில வகையில் பயிர் செய்யப்பட்ட, செடிவகையில் பயிர் செய்து உண்டாக்கப்பட்ட, பணிந்து போகிற, ஊக்கமற்ற, துடிப்பற்ற, கிளர்ச்சியற்ற, செயலாற்றலற்ற, பண்பு முனைப்பற்ற, (வினை) பழக்கு, பணியவை, படிமானமுடையதாக்கு, வசப்படுத்து, மூர்க்கத் தன்மை குறை, அடக்கு, பழக்கி இணக்குவி, கீழ்ப்படுத்து, தடுத்து நிறுத்து, செருக்குக் குலை.