English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
talapoin
n. இலங்கை-தாய்லாந்து நாட்டுப் புத்த துறவி, குரங்கு வகை.
talaria
n. pl. சிறகு மிதியடி.
talbotype
n. நிழற்பட எடுப்புமுறை, டால்பட் கண்ட நிழற்பட எடுப்புமுறை.
talc
n. வெளிமக் கன்மகி,(பே-வ) காக்காய்ப்பொன் வகை, (வினை) காக்காய்ப் பொன்வகை பயன்படுத்திப் பதஞ்செய்.
talcite
n. ஆப்பிரகம் கட்டிக் காகாய்ப்பொன்.
talcum
n. வெளிமக் கன்மகி, காக்காய்ப்பொன் வகை.
tale
n. கடடுக்கதை, கற்பனை வருணனை, உருக்கமிக்க மெய் வரலாறு., கதை, கோள், புறங்கூற்று, தீக்குறளை, கூற்று, விரிவுரை, கூற்றுமுறை, (செய்) எண்ணிக்கை, மொத்தம்.
talent
n. தனித்திறமைக்கூறு, செயற்றிறம், மனத்திறன், தனித்திறலாண்மைக்குழுமம், அறிவாற்றல்களிற் சிறந்தவர்கள் தொகுதி, பண்டைக் கிரேக்க-ரோம-அசீரிய வழக்கில் எடை அலகு, பணக்கணிப்பு அலகு.,
talent-money,
n,. ஆட்டப் பரிசூதியம், மிகச்சிறந்த ஆட்டத்திற்காக மரப்பந்தாட்டத் தொழிலருக்கு அளிக்கப்படும் நல்லுதியம்.
talented
a. செயற்றிறம் வாய்ந்த, மனத்திறம் உடைய.
tales
n. (சட்) ஆய அழைப்பாணை, முறைகாண் ஆத்தினர்களை அழைப்பதற்கான எழுத்தாணை, எண்ணிக்கைக் குறை நிரப்புதற்காக அழைக்கப்படும் முறைகாண் ஆயத்தினர் பட்டியல்.
talesman
n. (சட்)அழைப்பாயர்., முறைகாண் ஆயத்தினர் எண்ணிக்கைக் குறையை நிரப்புதற்காக அழைத்து அமர்த்தப்படுபவர்.
taleteller
n. கதைசொல்பவர், புறங்கூறுபவர்.
Taliacotian
a. டக்ளியாகோசி என்னும் இத்தாலிய அறுவை மருத்துவருக்குரிய, உடலிலிருந்தே கூறெடுத்துப் புதுமூக்கு ஆக்கும் அறுவைமுறை சார்ந்த,.
taliped
n. கோணற்காலர், கோணற்கால் விலங்கு, (பெயரடை) கோணற் காலுடைய, (விர) கரடியின விலங்கு வகையில் இயல்மீறிய திருகுமுறுகலான கால்களையுடைய.
talipes
n. கோணற்கால், கோணற்காலுடைமை, கால்கள் திருகுமுறுகலாக அமைந்திருத்தல்.
talipot, taliput
தாளிப்பனை, விசிறி வடிவ இலைகளையுடைய பனைவகை.
talisman
n. தாயத்து, மந்திரக்காப்பு, இரட்சை, மந்திரக் கவசம், மந்திரச்சக்கரம்.
talk
n. உரையாடல், நேர்முகப்பேச்சு, மேடையுரை, உரையாடல் முறைச் சிறு சொற்பொழிவு, கலந்துரையாட்டு, வானொலிப்பேச்சு, பேச்சு, வம்பளப்பு, வாயாடல், உரையாடற் செய்தி, வழ்ந்திக்குரிய செய்தி, (வினை)உரையாடு, கலந்துபேசு, பேச்சுமுறைச் சிறு சொற்பொழிவாற்று, சொல்லாடு, கருத்துத்தெரிவி, பேசு, உரை, கூறு, வாயாடு, விவாதி, பேச்சுப்பயில், பேச்சுத்திறம் உடையவராயிரு, குறிப்பிட்ட மொழியில் பேசுபவராயிரு, கம்பியில்லாத் தந்திச் சைகை மூலம் செய்தி அனுப்பு, ஓயாது பேசு, பேசிக் குறிப்பிட்ட நிலைக்கு ஆளாக்கு, பேசி அமைவி, பேசிக் குறிப்பிட்ட நிலை உண்டுபண்ணு.