English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Tamil
n. தமிழ்மொழி, தமிழர்.
Tamilian
n. தமிழர், (பெயரடை) தமழ்மொழி சார்ந்த, தமிழர் சார்ந்த.
Tammany
n. நியூயார்க் நகரிலுள்ள அமெரிக்க ஒன்றிய அரசின் குடியாட்சி கட்சி மைய அமைப்பு, அரசியல் ஊழலுக்குரிய இடம்.
Tammuz
n. பண்டைப் பாபிலோனியரின் ஞாயிற்றுத் தெய்வம், யூத ஆண்டின் பத்தாம் மாதம் (சூன்-சூலை).
tammy
-1 n. அரிப்பு, பளபளப்பான கம்பிளித் துகில்வகை.
tammy(2), tam-o-shan,ter
-2 n. குவட்டுத் தொப்பி, வடட அடிப்பகுதியினையுடைய விரிமுகட்டுத் தொப்பி.
tamp
v. வெடிப்பாற்றல் பெருக்கும்படி வெடிச்சுரங்க வாயில் களிமண் திணித்துவை, பாட்டைச் சல்லியை அடித்திறுக்கு.
tampan
n. தென் ஆப்பிரிக்க கால்நடை நச்சு உண்ணிவகை.
tamper
-1 n. பாட்டையினை அடித்து நிரப்பாக்குபவர், அடித்து இறக்குபவர், பாட்டைச் சம்மட்டி, சஜ்ளைகளை அடித்திறுக்கும் குத்துக்கட்டை, வெடிச்சுரங்கம் நிரப்பி வெடிவைப்பதற்கு ஆவனசெய்பவர், அடிசம்மட்டி, கொல்லத்துக்காரரின் கருவி.
tamping
n. வெடிக்குழியில் களிமண் இட்டு நிரப்புதல், வெடிக்குழியில் இட்டு நிரப்படும் பொருள்.
tampion
n. துப்பாக்கி வாய்முகப்பின் மரக்கட்டை அடைப்பான், இசைப்பேழைக் குழலின் உச்சி அடைப்பு.
tampon
n. குருதிப்போக்கினை நிறத்துவதற்கான அடைப்பு, தலைமுடிச் செருகு திண்டு, (வினை) அடைப்பான் கொண்டு துளைஅடை.
tamponade, tamponage, tamponment
அடைப்புப் பயனீடு, அறுவை மருத்துவத்தில் அடைப்பானைப் பயன்படுத்துதல்.
tan
-1 n. இடுக்கை, செங்கோண முக்கோணத்தில் செங்குத்து வரைக்கும் கிடை வரைக்கும் இடையேயுள்ள வீதம்.
tan-balls
n. ஆவாரந் தட்டை, ஆவாரச் சக்கை.
tan-liquor
n. தோல்பதச்சாறு, தோல் பதனிடுவதில் பயன்படுத்தப்படும் நீர்மம்.
tan-yard
n. பதனீட்டுச்சாலை, தோல் பதனீட்டகம்.
tana
n. படைத்துறைத்த தளம், காவல் நிலையம்
tanadar
n. படைத்துறைத் தளத் தலைவர், காவல்நிலையத் தலைவர்.
tanager
n. தென் அமெரிக்க ஒண்சிறைக் குருவி வகை.