English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Tantalus-cup
n. மாய ஏங்குருச் சாடி, தாடையளவு உறிஞ்சு தாழ்கவிகைக் குழாய் பொருத்தப்பெற்ற மணி உருவமைந்த நீருறிஞ்சிக்குழாய்த் தத்துவத்தை விளக்கு விளையாட்டுக் கலம்.
tantamount
a. சரி ஒப்பான, ஒப்பமைவாயுள்ள, உடனொப்பான.
tantar a
n. அடுத்தடுத்த எக்காள முழக்கம், தொடர்ந்த கொம்பு முழக்கம்.
tantivy
n. கூவிளி, வேட்டைக் கூக்குரல், விரைவியக்கம் நாலுகாற் பாய்ச்சல், வேகப்பாய்வு, தாவு குதி, (பெயரடை) விரைவான, வேகமான, (வினை) பாய்ந்து செல், பரபரப்புக்கொன்று அவசரங்காட்டு, (வினையடை) விரைவாக, வேகமாக,
tantra
n. தெய்வ பூசனைக்குரிய மந்திரதந்திரங்கூறு, ஏடு, விதி, சடங்கு.
tantrism
n. தந்திர சாத்திரக் கோட்பாடு.
tantrist
n. தந்திர சாத்திரக் கோட்பாளர், தந்தி சாத்திர முறை பின்பற்றுவர், தந்திர சாத்திர ஆர்வலர்.
Taoism
n. தாவ் நெறி, சீன மெய்விளக்கியலாரான லாவ்-தசே என்பாரின் சமயக் கோட்பாடு.
tap-borer
n. மிடாத் துளைப்புத துறப்பணம்.
tap-dancing
n. காற் கொட்டுத் தாள நடனவகை.
tapa
n. மரவுரி, பசிபிக் தீவுகளில் ஆடையாகவும் விரிப்பாகவும் பயன்படுத்தபடும் மரப்பட்டை.
tape
n. தளைப்புப் பட்டை வார், சிப்பங்கட்டியிறுக்குரிய நீண்டொடுங்கிய பட்டை, வார்க்கச்சை, பந்தய இலக்குக் கம்பங்களிடையே மாட்டிவிடப்படும் இழைப்பட்டை, வார்ப்பட்டை, இயந்திரக் கப்பிகளில் சுழலும் திஐ துகில் வார், வாரிழைத்தாள்., தந்திப் பதிவுக்குரிய தொடரிழைத் தாள்பட்டை, முடி ஒப்பனை வாரிழை, தொலைத் தந்திப் பதிவுக் குரிய நீள்சுருள் வார்த்தாள், நீட்டளவை வார் (இழி) வடிதேறல், புத்தகக் கட்டட வேலையில் பூட்டுத்தளை வார், (வினை) தளைவாரால் கட்டு, கட்டுவார் வழங்கு, புத்தகக் கட்டட வேலையில் தாள்பூட்டுக்களைத் தைளைவாரால் பிணி, ஆள் வகையில் நீட்டளவை வாரால் அள, ஆளின் பண்புக் கூறுகளை மொத்தமாக மதிப்பிட்டள, இயந்திர வார்ப்பட்டைகள் இணை, இயந்திரங்களுக்கு வார்ப்பட்டைகள் இணைவு, தந்திப்பதிவு முதலியவற்றிற்கான வாரிழைத்தாள் இணைவி.
Tape recorder
வார்ப் பதிவான், நாடாப் பதிவு, ஒலிப்பதிவுக் கருவி, ஒலிப்பதிவன்
tape-line, tape-measure
n. நீட்டளவை வார், நெகீழ்வடைய உலோகம் அலிரலது துணிப்பட்டையாலான அளக்கும் நாடா.
tapeless
a. வார்பட்டையில்லாத, அளவைவாரில்லாத.
tapen
a. வார்ப்பட்டையாலான, இழைக்கச்சை வடிவான, நாடாபோன்ற.
taper
-1 n. மெழுகுதிரிப்பட்டை, மெழுகுத் துணியாலான மெல்லிய வாரிழைத்திரி, மெழுகு தோய்ந்த விளக்குத்திரி, (பெயரடை) (செய்) தேய்ந்து தேய்ந்து செல்கிற, (வினை) நுனி நோக்கிச் சிறுத்துச் செல்கிற, (வினை) நுனிநோக்கிச் சிறுத்துச்செல், தேய்ந்து தேய்ந்து செல்லுவி.