English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
tapestry
n. சுவரின்மீதான திரைச்சீலை, தட்டுமுட்டுக் கல மீதான சித்திரத் தொங்கலாடை, ஓவியத்திரை, ஓவியத்திரைச்சுருள்.
tapeworm
n. நாடாப் புழு, ஒட்டுயிரான வயிற்றினுட் புழு வகை.
tapeze
n. ஊசுதண்டு, உடற்பயிற்சிக்காக ஊசலாடும் சலாகை, விரித்த அடிப்பகுதியினையுடைய பெண்டிரின் உடைவகை.
tapioca
n. மரவ்ளிளச் செடி, மரச்சீனி, எழிலைக் கிழங்கு.
tapotement
n. சதைப்பிடிப்புத் துறையில் அழுத்தித் தட்டுதல் முறை.
tappet
n. தட்டியக்கப் பிதுக்கம்.
taprate
n. அரசியற் பொருளக முறியின் நடைமுறைக் கட்டணம்.
taproom
n. தேறல் விற்பனைக் கூடம், தேறல் பருகும் அறை.
taps
n. pl. படைவீரர் குடியமைப்பில் உணவுக்கான மணியோசை, படைவீட்டில் விளக்கணைப்பாணை அடையாள முரசறைவிப்பு.
tapster
n. தேறல்மனைப் பணியாள், சாராயக் கடையில் தேறல் வடித்தெடுப்பவர்.
tar
-1 n. கீல், கரிஎண்ணெய், (வினை) கீல், பூசு, கரிஎண்ணெய் தடவு, கீல்போர்த்து, கரி, எண்ணெயாட்டு,
tar-board
n. புத்தகக் கட்டட வேலைப்பாட்டிற் பயன்படும் கீல்பசை ஒட்டு அட்டை.
tar-brush
n. கீல்பூசு துரிகை.
tar-water
n. மருத்துக் குளிர்நீர், மருந்தாகப் பயன்படும் காரெண்ணெய் வளிநீர்.
taradiddle
n. புளுகு, பொய்.
tarafern
n. உணவாகப் பயன்படும் நியூசிலாந்துநாட்டுச் சூரல்வகை.
tarantantara, taratantelle
n. எக்காள ஒலி, கொம்பு முழக்கொலி.
tarantass
n. ருசிய நாற்சக்கர வண்டி வகை.
tarantella, tarantelle
n. இத்தாலியில் விரை சுழலாட்ட நடனம்., விரை சுழலாட்ட இசை, பெருஞ்சிலந்திக் கடிக்கு மாற்றெனக் கருதப்பட்ட விரை சுற்றாட்டம்.
tarantula
n. பெருஞ்சிலந்தி வகை.