English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
suspensive
a. தற்காலத் தடையாய் நிலவுகிற.
suspicion
n. ஐயுறவு, அயிர்ப்பு, அரைகுறை நம்பிக்கை, அரைகுறை எண்ணம், அரைகுறை எண்ணச்சாயல், அவநம்பிக்கை, ஐய உணர்வு, ஓயா ஐயுறவுப்பழக்கம், சமுசய மனப்பான்மை, ஐயத்திற்கு ஆட்படுநிலை, ஐயங் கொள்வதற்குரிய நிலை, ஊகம், ஐயுறவச்சம், வேண்டா நிலைபற்றிய ஐயுறவு, அரைகுறை அச்சநிழல், ஆதாரமற்ற எண்ணம், சிறிதளவு, சிறு சாயற்கூறு, (வினை.) (பே-வ) ஐயுறு, ஐயுறவு கொள்.
suspiration
n. நெடுமூச்சு, பெருமூச்சு விடல்.
suspire
v. (செய்.) ஆழ்ந்த மூச்சுவிடு, பெருமூச்சு விடு.
sustain
v. பளுத்தாங்கு, தாங்கிப்பிடி, விழாமல் தடுத்துநில், அமிழாமல் தடுத்து நிறுத்து, ஆதாரமாயிரு, ஆதாரங்கொடுத்து நிறுத்து, நிலைகுலையாது தாங்கு, காத்துப்பேணு, ஊக்ளுதலளி, ஆதரி, ஏற்றாதரவு காட்ட, உரமூட்டு, எதிர்ப்பதற்கான வலிமை வழங்கு, நிலைநாட்டு, உறுதிசெய், வாத ஆதாரங்கொடு, வாத ஆதாரங்களால் வலியுறுத்து, மெய்ப்பி, எண்பித்துக் காட்டு, ஆதரவாகத்தீர்ப்பளி, ஏற்றுப் பாராட்டு, பாராட்டி ஆதரி, மேவிக்கொண்ட செல், தொடர்ந்து நடத்து, நீடித்து நடக்கச் செய், நீடித்து உழைக்கச் செய், தளராமல் தொடரச்செய், விடாது ஊக்கு, தளராமற் கொண்டுசெலுத்து, மேற்கொண்டு நடத்திச் செல், திறம்படி நடத்திக்காட்டு, படு, கொள்ளு, அடை, எய்து, ஆளாகு, முறைமன்ற ஆணைவகையில் சட்டப்படி ஏற்றமைவுறு.
sustained
a. தொடர்ந்த, விடா உறுதி வாய்ந்த, தளராது நீடித்த.
sustaining
a. தாங்கிப் பிடிக்கிற, வலுவாதாரமான, வலுக்கொடுக்கிற, வலுவூட்டுகிற.
sustainment
n. நீடிப்பு, தொடர்வு, ஆதரவு, ஊட்டம்.
sustenence
n. உடலோம்பல், வாழ்வாதாரம், ஊட்டப்பண்பு, உள்ள ஊட்டம், அறிவூட்டம்.
sustentation
n. வாழ்க்கை ஆதரவு.
susurration
n. குசுகுசுவெனல், முணுமுணுப்பு.
sutler
n. பாசறை அங்காடியர்.
Sutra
n. நுற்பா, சூத்திரம், சூத்திரத்தொகுதி.
suttee, sati
உடன்கட்டை, உடன்கட்டையேறல்.
suture
n. பொருத்துவாய், மண்டையோட்டுப் பொருத்துவாய், எலும்புப் பொருத்துவாய், அறுவை மருத்துவத்தில் தையல், (வினை.) காயத்துக்குத் தையலிடு.
suzerain
n. ஆண்டை, பண்ணை நிலவுரிமை மேலாளர், ஆட்சி மேலாளர், உச்ச உயர் ஆட்சி உரிமையாளர், மேலாட்சியாளர், மேலாட்சி அரசு, (பெ.) உச்ச உயர் மேலுரிமையுடைய, மேலாட்சிக்குரிய, மேலரசு நிலையான.
suzerainty
n. மேலாதிக்க உரிமை, மேலாட்சி நிலை, மேலரசு நிலை.
svelte
a. மெல்லிழைவான, உடல்வகையில் மென்கட்டான, பெண்டிர் உடல்வல் ஒசிந்த, துவள்கிற, மொழிநடைவகையில் திண்ணிழைவான, கலைவகையில் எளிமையுந்திட்பமும் வாய்ந்த.
swab
n. துடைப்புத்துண்டு, கப்பல் துணித்துடைப்பம், ஒத்துபட்டை, அறுவை மருத்துவத்தில் பயன்படும் உறிஞ்சு பஞ்சுறை, நோய் நுண்ம ஆய்வெடுப்புக் கசவு நீர்மம், (இழி.) கப்பல் அலுவலாளரின் தோளணிக்கச்சை, அருவருக்கத்தக்க ஆள், (வினை.) துடைப்புத் துண்டால் துடை, ஒத்து பட்டையால் ஒத்தியெடு.