English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
swabber
n. துடைப்புத்துண்டு பயன்படுத்துபவர், துடைக்கும் பஞ்சுறை, சீட்டாட்ட வயல் பந்தய உரிமைப் பங்குச்சீட்டு.
swabbers
n. pl. பந்தய உரிமைப் பங்குச் சீட்டுடைய சீட்டாட்ட வகை.
Swabian
n. ஸ்வேபிய நாட்டவர், (பெ.) ஸ்வேபியா நாட்டிற்குரிய.
swaddle
v. வரிந்து சுற்றிப்பொதி, கெட்டியான மேலுடைபோர்த்து.
swaddling-bands, swaddling-clothes
n. அணையாடை, குழந்தை பொதியாடை, அடக்கி வைக்கும் ஆற்றல்கள், செயல் சிந்தனை உரிமைகளைக் கட்டுப்படுத்துஞ் செயற்கைச் சூழல்கள்.
Swadeshi
n. சுதேசி, வெளிநாட்டுப்பொருள்களை விலக்கிய இந்திய இயக்கம்.
swag
n. (இழி.) கொண்டி, கறுப்புச் செல்வம், அரசியற் கொள்ளை ஆதாயம், ஆஸ்திரேலிய வழக்கில் நாடோடியின் அல்லது சுரங்கத் தொழிலாளரின் கைப்பை.
swage
n. பணியிரும்பு பதிவச்சுப்பொறி, (வினை.) பதிவச்சுருப்பொறியால் பணியிரும்பில் வடிவங் கொடு.
swage-block
n. பதிவச்சுருக் கட்டை, பணியிரும்பை உருவாக்குவதிற் பயன்படும் துளை பள்ளங்களையுடைய கட்டை.
swagger
n. வீம்புநடை, வீறாப்புப்பேச்சு, தருக்கு நடத்தை, ஆணவப்போக்கு, வெற்று வீறாப்புரை, சுறுசுறுப்பு, (பெ.) பகட்டணியான, (வினை.) செம்மாந்து செருக்கி நட, வீறாப்பாக நடந்துகொள், வெற்றாரவாரப்பகட்டுப் பேசு, வெற்று வீறாப்பு அள, தற்பெருமையான புளுகுகள் பேசு.
swagger-cane
n. போர்வீரர் பிரம்பு.
Swahili
n. கிழக்காப்பிரிக்க 'பாண்டு' இன மக்கள்.
swain
n. பட்டிக்காட்டிளைஞன், குடியானவன், முல்லைநிலக் கவிதைக்குரிய நாட்டுப்புறக் காதலன், மன அவாவாளன்.
swale
v. (பே-வ) எரி, கொளுத்து, கருகு, கரியாகு, மெழுகுதிரி வகையில் இளகு.
swallet
n. பாதாள ஓடை, ஆறு உட்பாயும் அடிநிலக்குகை.
swallow
-1 n. தொண்டைக்குழி, தொண்டை உணவுக்குழாய், விழுங்குதல், விழுங்கும் அளவு, (வினை.) விழுங்கு, அகப்படுத்து, வளைந்து சூழ், உள் அமிழ்த்திக்கொள், உள் ஈர்த்துக்கொள், உள் இழுத்துக்கொள், உறிஞ்சு, உட்கொள், வறிதாக்கு, இல்லாதாக்கு, அழி, ஒழித்துவிடு, பேச்சுவகையில் ஆராயாது நம்பி ஏற்றுக்கொள், எதிர்க்காது ஏற்றுக்கொள், பொறுத்தக்கொள், ஏற்றமைந்துவிடு, பொறுமையுடன் ஏற்றக்கொள, இகழ்ச்சி பொறு, சொன்னசொல் மாறு, சூளுரை மாற்று, மென்று விழுங்கு, விழுங்குதல் போன்ற தாடை அசைவு காட்டு.
swallow-dive
n. நீள்கை முக்குளிப்பு.
swallow-fish
n. பெருந்தலைக் கடல்மீன் வகை.
swallow-hawk
n. கவைமுள்வால் பருந்துவகை.
swallow-tail
n. கவைமுள் வால் பறவை வகை, வண்ணத்துப்பூச்சி வகை, தொங்கல்வாய் துகிற்கொடி முனை.