English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
swallow-tailed
a. ஆழ் கவை முள்வடிவ வாலுடைய.
swallow-wort
n. இறைப்பணிக்கலம், தெய்வ உரு வேலைப்பாடு தாங்கிய வெள்ளி வேலைப்பாட்டுப் பொருள்.
swamp
n. சதுப்புநிலம், சேறு, சகதி, அழுவம், (வினை.) சேற்றில் சிக்குவி, நீர் வகையில் கீழ் அமிழ்த்திவிடு, மேலெழுந்து பொங்கு,வெள்ளக்காடாக்கு, சேறாக்கு, பெரிய அளவில் தாக்க விடு, செயலறச் செய், விழுங்கு, மறைத்துவிடு, புலனாகாவாறு செய்து விடு, கவனத்தை இருட்டடிபடிச் செய்துவிடு.
swan
n. அன்னம், எகினப்புள், கவிஞர், விண்மீன் குழுக்களுள் ஒன்று.
swan-flower
n. பகட்டுவண்ண மலர்வகை.
swan-goose
n. நீள்கழுத்துச் சீன வாத்துவகை.
swan-herd
n. அன்னப்புட் பொறுப்பாளர், அன்னப்புள் அலகுக் குறியிடும் அரசியல் அதிகாரி, அன்னப்புள் மேய்ப்பர்.
swan-maiden
n. செர்மன் கதைவழக்கில் தூவி ஆடையணிந்து அன்னமாகிவிடத்தக்க மாயநங்கை.
swan-mark
n. அன்னப்புள் அலகுக்குறி, உடையவர் அறிவிக்க அன்ன அலகுக் குறியீடு.
swan-mussel
n. நன்னீர் வாழ் பெரிய சிப்பிவகை.
swan-neck
n. வெளிச்செல் நீர்க்குழாயின் வளைமூக்கு.
swan-shot
n. பரும்படித் துப்பாக்கிக் குண்டு.
swan-skin
n. சாய்வரிக் கம்பளித் துணி வகை.
swan-upping
n. அன்னப்புட் குறிநாள், தேம்ஸ் ஆற்றிலுள்ள அன்னங்களை எடுத்துக் குறியிடும் ஆண்டின் நாள்.
swandive
n. இருகை நீட்டிய முக்குளிப்பு.
swank
n. வெற்றாரவாரம், மொட்டைப்புளுகு, (வினை.) (இழி.) வீறாப்புக்காட்டு, வெற்று வீறாப்புப் பேச்சுப் பேசு, வெற்று வீறாப்புரை கூறு.
swanky
a. மொட்டைப்புளுகான, பகட்டான.
swannery
n. அன்னப்புட் பண்ணை, அன்னப்பறவை வளர்க்கும் இடம்.
swans-down, swansdown
அன்னத்தூவி, மென்கம்பளி, தறித்த மென்றுய்ப்பருத்தித் துணி வகை.