English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
surprised
a. அதிர்ச்சியுற்ற.
surprisedly
adv. அதிர்ச்சியுற்று, கலக்கமுற்று.
surprising
a. திடும் வியப்பூட்டுகிற, எதிர்பாரா அதிர்ச்சியூட்டுகிற, திடீரடியான.
surprisingly
adv. திடீரடியாக.
surra
n. வெப்பமண்டலக் குருதிக்குறை நோய் வகை.
surrealism
n. வரம்பில் அகவாய்மைக் கோட்பாட, அடிமன இயல்பு காட்டக் கனவின் தன்மையொத்த தொடர்பிணைவுக் காட்சிகளைக் காட்ட முயன்ற 20ஆம் நுற்றாண்டுக் கலை இலக்கியப் பாணி.
surrebut
v. வாதி வகையில் எதிர்வாதி மறுப்புரைக்கு எதிருரை கூறு.
surrebutter
n. எதிர்வாதி மறுப்புரைக்குரிய வாதியின் எதிருரை.
surrejoin
v. வாதி வகையில் எதிர்வாதி மறுப்புரைக்கு மறுமொழி கூறு.
surrejoinder
n. எதிர்வாதி மறுப்புரைக்குரிய வாதியின் மறுமொழி.
surrender
n. சரணடைவு, தன்னொப்படைப்பு, முழுநிறை கீழ்ப்படிவு, முழுநிறை விட்டுக்கொடுப்பு, முழுநிறை ஒப்புக்கொடுப்பு, பொருள் கைதுறப்பு, உரிமை விட்டுக்கொடுப்பு, (வினை.) சரணடை, சரணடைந்து ஒப்புக்கொட, பணிந்துவிடு, கீழடங்கி விடு, பணிந்து விட்டுக் கொடு, கைவிடு, கைதுறந்து விடு.
surreptitious
a. கள்ளத்தனமான, நேர்மையற்ற, மறையாக வைக்கப்பெற்ற, வஞ்சமான.
surrey
n. பெட்டிவண்டி, இருவர் இருக்கையுடைய நொய்தாள நாற்சக்கர வண்டி.
surrogate
n. துணைக்குரு, பெயராள்.
surrogateship
n. துணைக்குரு பதவி.
surround
n. சூழ்விரி, சுவர்கட்கும் கம்பளத்திற்கும் இடையேயான தரை விரிப்பு, சூழ்விருக்கை, (வினை.) சூழ், சுற்றியிரு, சூழ்ந்தமை, சுற்றிச்செல், சூழ்ந்து மொய், சுற்றி வளை, சுற்றி மூடு, சுற்றிக்கொள், முற்றுகை செய்.
surroundings
n. pl. சுற்றுச் சூழல்கள்.
sursum corda
n. சமயச் செவியறிவுறுஉ, வழிபாட்டு முன்னுரை நிகழ்த்துமுன் குரு மக்கட்குக் கூறும் நன்மதிப் பேருரை.
surtax
n. கூடுதல் வரி, வருமான வரி எல்லைக்கு மேலாக வருவாய்க்கு ஏற்றவாறு படிப்படியாய் உயர்த்தப்பெறும் வரி.