English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
summary
n. சுருக்கம், தொகுப்பு, பொழிப்பு, சுருக்கத்திரட்டு, (பெ.) சுருக்கமான, மணித்திரட்டான, கேள்விமுறையற்ற, வழக்குவகையில் விசாரணை முறையின்றி முடிவு செய்யப்பட்ட, நடவடிக்கைகளில் அதிரடியான, திடுதீர்வான, மொத்தத் தீர்வான, கடைசியான.
summation
n. கூட்டுதல், கூட்டுத்தொகைக் கண்டுபிடித்தல், ஆகமொத்தங்காணல்
summer
-1 n. கோடைக்காலம், மேமாதம் முதல் ஜூலை மாதம் வரையுள்ள முதுவேனிற் பருவம், வாழ்வின் ஆண்டு, (பெ.) கோடைக்குகந்த, (வினை.) கோடைக்காலத்தைக் கழி, கால் நடைகளைக் கோடைக்கால மேய்ச்சலக்கு ஓட்டிச்செல்.
summer-house
n. வேனிலகம், வேனிற்காலத்திற்கென அமைக்கப்பட்ட தோட்டவீடு.
summerly
a. வேனில் போன்று ஒளியுங் கதகதப்பும் உள்ள.
summertide, summertime
n. வேனிற்பருவம்.
summery
a. வேனிற் காலம் போன்ற, வேனிற்பருவத்திற்கு ஏற்ற.
summit
n. கொடுமுடி, உச்சி, சிகரம், உச்சநிலை, மீயுயர்படிநிலை, (பெ.) மேல்தள அரசயில் தலைமை சார்ந்த.
summit-level
n. உச்ச உயர்தளம், உச்ச மேல்மட்டம்.
summon
v. அழைப்பாணையிடு, நீதிமன்ற வகையில் வர வாணையிடு, வழக்கெதிரி அல்லது சான்றாளரை வருகை தரும்படி கட்டளையிடு, நகர் அரண்வகையில் சரணாகும்படி அறிவி, கூட்ட அழைப்பு விடு, வரவழை, வரும்படியாகக் கூவியழை, ஆற்றல் முதலியவற்றை வரவழைத்துக்கொள்.
summons
n. pl. அழைப்பாணை, முன்னிலைப்பாட்டுக்கட்டளையாணை, அழைப்பாணைச் சீட்டு, கட்டாயநிலை அழைப்பு, (வினை.) முறைமன்ற அழைப்பாணை விடு.
summum bonum
n. உச்ச உயர்குறிக்கோள் நலம், அறமுறை இறுதி இலக்குநலம்.
sump
n. கட்டுதொட்டி, சுரங்கம் - இயந்திரம் ஆகியவற்றின் கழிவுநீர்ச் சேகரத்திற்கான கட்டுகுழி, கட்டுகுட்டம், எண்ணெய் முதலியவற்றிற்கான சேகரக்கிணறு, கொட்டு தட்டம், உருக்கிய உலோகத் தேக்ககத்தொட்டி, கொட்டளம், உப்பு நீர் தேங்குவதற்கான உப்பளத் தேக்கம், வடிகுட்டை, வண்டல் பிரித்து நீர் உள்வாங்கும் பள்ளம்.
sumpit, sumpitan
எறிகுழாய், மலாய்நாட்டில் வழங்கும் நச்சு எறிகணை வீசவல்ல நீள் ஊதுகுழல்.
sumpter
n. பொதிகுதிரை, பொதிவிலங்கு ஓட்டி.
sumpter-horse
n. பொதிகுதிரை.
sumpter-mule
n. கோவேறு கழுதை வகை.
sumpter-pony
n. மட்டப் பொதிகுதிரை.
sumption
n. (அள.) முற்றரவு, மூவளவையின் பெருநிலை வாசகம்.