English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
sumptuary
a. செலவினைக் கட்டுப்படுத்துகிற.
sumptuous
a. முதல்தரமான, மதிப்பேறிய, பெருஞ்செலவுபிடிக்கிற, பணம் வாரிச் செலவிட்டுச் செய்யப்பட்டம, வளங்குன்றாத, தாராளமான, உயர்வளமிக்க.
sumptuously
adv. குறைவிலா உயர்வளத்துடன்.
sumptuousness
n. பொங்குயர்வளம், பொங்குமா நிறைவு.
sun
n. ஞாயிறு, கதிரவன், சூரியன், கோள்மண்டல மையம், வான்கோளங்களின் மண்டல மையம், சுற்றுக்கோள்களையுடைய நிலை விண்மீன், வெயில், கதிரவன் வெப்பம், கதிரவனொளி, முகட்டுப் பல்தொகை ஒளிவிளக்கம், போரொளி விளக்கம், புகழ்ப்பேரொளி, மேம்பட்ட பொருள், விஞ்சு பண்பு, விஞ்சு முதன்மைப் பண்பாளர், (செய்.) ஆண்டு, (செய். ) பகல், (வினை.) வெயில் காய்வி, கதிரவனொளிபட வை, வெயில் காய்.
sun-bath
n. வெயில் காய்வு, வெயில் முழுக்காட்டு, ஞாயிற்றுக் கதிர்கள் உடலிற்படும்படி இருத்தல்.
sun-bird
n. பருதிப்புள், பகட்டுவண்ண இறகுத்தொகுதியுடைய பறவை வகை.
sun-bow
n. ஒளிவில், நுண்திவலை முதலியவற்றின் மீது வெயில்படும்போது தோன்றும் பன்னிற வில்வளைவு.
sun-burner
n. பகன்மை விளக்கு, நடுமோட்டுப் பல்தொகைஒளிக் குமிழ்விளக்கம்.
sun-cult
n. ஞாயிற்று வழிபாட்டு மரபு, ஞாயிற்று வழிபாட்டுச் சமயப் பண்பு மரபுக்கூறு.
sun-cured
a. வெயிலிற் பதனிட்ட, வெயிலில் உணக்கிப் பக்குவப் படுத்தப்பட்ட.
sun-dance
n. ஞாயிற்று நடனம், கதிரவனைப் போற்றி வட அமெரிக்க இந்தயர்கள் ஆடும் ஆட்டம்.
sun-dial
n. கதிர் மணிப்பொறி, கதிர்நிழற் கடிகை.
sun-dog
n. கதிரவன் விளிம்பொளிப் போலிவட்டம்.
sun-dried
a. வெயிலில் உலர்ந்த, வெயிலில் உணக்கப்பெற்ற.
sun-drops
n. அமெரிக்க அந்திமந்தாரப் பூவகை.
sun-glasses
n. வெயில்காப்புக் கண்ணாடி.
sun-glow
n. ஞாயிற்றுப் பரிவேடம், கதிரொளி வட்டம்.
sun-god
n. ஞாயிற்றிறை, செங்கதிர்த் தேவன்.
sun-hat, sun-helmet
n. வெயில்காப்புத் தொப்பி.