English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
sulphovinic
a. கந்தக வெறியமான, கந்தகக்காடி வெறியக் கலவை சார்ந்த.
sulphur
n. கந்தகம், வண்ணத்துப்பூச்சி வகை, முற்கால வழக்கில் மின்னல் கருமூலம், முற்கால வழக்கில் நரகத் தீ மூலம், (பெ.) வெளிறிய மஞ்சள் நிறமான, (வினை.) கந்தகத் தடவு, கந்தகப் புகையூட்டு.
sulphur-bottom
n. மஞ்சள் அகட்டுத் திமிங்கிலம்.
sulphur-spring
n. கந்தக நீருற்று.
sulphur-wort
n. மஞ்சள் மலருடைய மூலிகை வகை.
sulphurate
v. கந்தகச் செறிவூட்டு, கந்தகப் புகையூட்டு, கந்தக வினைமையூட்டு, கந்தகத்தின் செயலுக்கு ஆளாக்கு.
sulphureous
a. கந்தகஞ் சார்ந்த, கந்தகம் போன்ற, கந்தகத்தின் தோற்ற இயல்புகளையுடைய, (தாவ.) வெளிறிய பசுமஞ்சள் நிறமான.
sulphuretted
a. கந்தகக் கூட்டுடைய.
sulphuric
a. (வேதி,) உயர் இணைதிறக் கந்தகச் சேர்வுடைய.
sulphurous
a. (வேதி.) கீழ்நிலை இணைதிறக் கந்தகச் சோர்வுடைய.
sultan
n. இஸ்லாமிய வழக்கில் அரசர், பகட்டுவண்ணப் பறவை வகை, துருக்கி மரபுடைய வெண்ணிற வீட்டுக்கோழி வகை.
sultana
n. இஸ்லாமிய வழக்கில் அரசி, துருக்கிநாட்டு அரசரின் தாய், துருக்கிநாட்டு அரசரின் மனைவி, துருக்கிநாட்டு அரசரின் மகள், அரச மாதேவி, பகட்டுவண்ணப் பறவை வகை, விதையற்ற உலர் முந்திரிப்பழ வகை.
sultaness
n. இஸ்லாமிய வழக்கில் அரச மாதேவி, அரசரின் தாய், அரசர் மனைவி, அரசர் மகள்.
sultry
a. புழுக்கமான, காற்று இறுக்கமான, உள்வெப்புமிக்க, மனநிலை வகையில் உணர்ச்சிமிக்க, மனவெழுச்சி மிக்க.
sum
n. தொகை, மொத்தம், கூட்டுத்தொகை, எண், விடை எண், பணத்தொகை, சுருக்கக் குறிப்பு, பயிற்சிக்கணக்கு, (வினை.) கூட்டு, தொகையாக்கு, மொத்தத்தொகையாகத் தெரிவி, முழுக்வட்டுத்தொகையாகச் சேர், பொழிப்பாகக் கூறு, கருத்துக்களைத் தொகுத்துச் சுருக்கிக்கூறு.
sumac, sumach
தோல் பதனீடு-சாயம் ஆகியவற்றிற்குப் பயன்படும் உலர்த்திய இலைத்தூள், சாயப்பதனீட்டு இலைத்தூள் தருஞ் செடிவகை.
Sumerian
n. தொல்பழங்காலச் சுமேரியமொழி, தொல்பழங்காலச் சுமேரியர், (பெ.)சுமேரிய, பாபிலோனிய நாகரிகத்தின் முற்பட்ட தொல்பழங்கால நாகரிக மரபு சார்ந்த.
summarily
adv. மொத்தமாக, திடுதீர்வாக, மொத்தத்தீர்வாக, வழக்குவகையில் கேள்விமுறையின்றி, விசாரணைநடவடிக்கைகள் எதுவும் இல்லாமலே, சுருக்கவகையாக.
summarist
n. தொகுப்பாளர், திரட்டாளர், சுருக்கிப்பொழிப்புரை, தருபவர்.
summarize
v. பொழிப்பாக்கு, சுருக்கிக்கூறு, கூட்டு மொத்தமாக்கு, பொழிப்பாகு, மொத்தமாக அமை.