English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
sulcate
a. (தாவ., உள்.) வரிப்பள்ளமுடைய, மீதாக இயங்கவதற்குரிய வடுவாயினையுடைய.
sulk
v. ஊடு, பிணங்கு, சிணுக்கமுறு, முகத்தைக் கோட்டிக் காண்டிரு.
sulky
n. ஒற்றையாட் குதிரை வண்டி, ரேக்ளா, (பெ.) பிணங்குகிற, சிணுக்கமான, முகத்தைத் தொங்கவிட்டுக்கொண்டிருக்கிற, முகக்கோட்டமுடைய, கோப வெறுப்பார்ந்த, சிடுசிடுப்பான, பேசாதிருக்கிற, செயலற்றிருக்கிற, கத்திக் கொண்டிருக்கிற, கலந்து பழகாது தனி ஒதுக்கமாயிருக்கிற.
sullabicate
v. அசைப்படுத்து, அசை அசையாக அலகிடு, அசை அசையாகப் பிரி, அசை அசையாக ஒலி.
sullage
n. சாக்கடைச் சகதி, மாசு, குப்பை கூளம்.
Sullan
a. பண்டை ரோமாபுரி அரசியல் தலைவரான சல்லா என்பவருக்குரிய, சட்ட வகையில் சல்லா என்பவரால் நிறைவேற்றப்பட்ட.
sullen
a. கோபித்த மௌனமுடைய, முரண்ட பிடிக்கிற, பராமுகமாயிருக்கிற, சிடுசிடுப்பான, துயரார்ந்த, ஊடாடிப் பழகாத.
sullenness
n. பிணக்குநிலை, நாணம்.
sullens
n. pl. சிடுசிடுப்பு, ஊடல்.
sully
v. கறைப்படுத்து, களங்கமுண்டாக்கு, மாசூட்டு, அழுக்காக்கு, தூய்மை கெடு, புகழ்கெடு, நற்பெயர் கெடு.
sulphamic
a. கந்தகி, கந்தகக்காடியின் உப்பு.
sulphocyanic
a. கந்தக நச்சுக்கலவை சார்ந்த.
sulphonal
n. வசிய மயக்க மருந்து, நோவு உணர்வு நீக்க மருந்து.
sulphonamides
n. வேதிப்பொருள் நுண்மக்கொல்லி.
sulphonation
n. கந்தகக் காடியின் செயற்பாடு.
sulphonic acid
n. கந்தகக் காடியின் செயலால் ஏற்படுங்காடிவகை.