English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
spurge
n. உறைப்பான பால் போன்ற சாறுடைய செடிவகை.
spurious
a. போலியான, பெயர்ப்பொருத்தமற்ற, மூலமரபுமாறாட்டமுடைய, (வில.) உறுப்புவயல் பொய்த்தோற்றமான, செயல் செய்யாமல் தோற்றமட்டும உடையதான.
spurling-line
n. (கப்) பயின் சுட்டுவரி, பயின் கட்டைதிருப்பும் சக்கரநிலையைக் காட்டும் கல இயக்காழி இணைத்த கம்பிவடம்.
spurn
n. வெறுத்தொதுக்கீடு, ஏளனப் புறக்கண்ப்பு, இகழ்வெறிவு, (வினை.) எற்று, உதைத்துத்தள்ளு, வெறுத்தொதுக்கு, ஏளன வெறுப்புடன் நடத்து, இகழ்ந்து புறக்கணி.
spurrier
n. குதிரைக் குதிமுள் செய்பவர்.
spurry
n. நறுமண மலர்ச்செடி வகை.
spurt
-1 n. பீறித்தெறிப்பு, திடீர்க்குறுவேகம், (வினை.) பீறித்தெறி, விட்டுவிட்டுப் பீறியடி, திடீர்க் குறுவேகங் கொள்.
spurwort
n. மஞ்சிட்டி வகை, வயல்களில் தோன்றும் களைச் செடிவகை.
sputnik
n. புடவித்துணைக்கோள், நிலவுலகைச் சுற்றும்படி ருசிய நாட்டவர் 1ஹீ5ஹ்ல் முதலில் விடுத்த செற்கைக்கொள்.
sputter
n. பிதற்றல், எச்சில் தெறிக்கும் பேச்ச, விரைந்த பேச்சு, தொடர்பிசைவற்ற, பேச்சு, (வினை.) ஒலியெழ எச்சில் உமிழ், பிதற்று, தொடர்பிசைவன்றிப் பேசு, விரைந்து பேசு, உணர்ச்சி வேகத்தோடு பேசு.
sputum
n. உமிழல், இருமல்நோய்ச் சளி.
spy
n. ஒற்றர், வேவுபார்ப்போர்.
spyglass
n. சிறு தொலை நோக்காடி.
spyhole
n. ஊடுபுழை, சுவர்க்கதவு ஒற்றுத்துளை.
squab
n. கட்டுருளி, கொழுத்துக் குட்டையான ஆள், சிறகுமுளையாப் புறாக்குஞ்சு, திண்டு, மெத்தைத் தவிசு, பஞ்சுறைப் பீடம், (பெ.) கொழுத்துக்குட்டையான, சிறுத்துத் தடித்த, (வினையடை.) தொப்பென்று.
squab-chick
n. இறக்கை முளையாக் கோழிக்குஞ்சு.
squabble
n. பூசல், கைகலப்பு, கூச்சலுங் குழப்பமுமான சச்சரவு, (வினை.) பூசலிடு கூச்சலிட்டுச் சச்சரவு செய், (அச்சு.) எழுத்துருக் கோப்புக் கலைத்து விடு.
squabby
a. சிறுத்துத் தடித்த.
squacco
n. சிறு தலைச்சூட்டுடைய நாரையினப் பறவை.
squad
n. (படை.) பயிற்சிப் படைவீரர் திரள், குழுமம்,சிறு மக்கள் திரள்.