English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
squadron
n. படையணிப் பிரிவு, புரவிப்படைப் பெரும் பிரிவு, கலப்படை, இயந்திரக் கருவிகலப் படையின் பிரிவு, ஒழுங்கணி, சிறப்பணிப் போர்க்கப்பற் படைப்பிரிவு, விமானப் படையின் குழுமம், (வினை.) படையணி வகு.
squadron-leader
n. ஒழுங்கணித் தலைவர், அணித்தலைவர்.
squailer
n. எறிகழிக்குண்டு, அணில்கள் போன்றவற்றை எறியும் ஈயக் குமிழ்க் கோல்.
squails
n. pl. மேசை வட்டாட்டம், வட்டமான மேசை அல்லது பலகையின் மீது சிறு மரவட்டு கொண்டு விளையாடும் ஆட்டவகை.
squalid
a. அழுக்கடைந்த தோற்றமுடைய, இழிநிலையான, ஏழ்மைப்பட்ட.
squall
n. பேய்ப்புயல், பனிஊதைப் புயற்காற்று, பனிப்புயல் மழை, (வினை.) வீறிட்டலறு, ஊளையிடு, வீறிட்ட ஒலியுடன் பேசு, ஊளைக்குரலிற் பேசு.
squally
a. திடீர்க்காற்றுமழை மிகுதியாகவுள்ள, திடீர்க்காற்று மழையினால் பாதிக்கப்படுகிற, புயலாகச் சீறியடிக்கிற, கொந்தளிக்கிற, புயலார்ந்த, பேய்ப்புயலடிக்கும் நிலையிலுள்ள.
squaloid
a. சுறாவிற்குரிய, சுறாமீன் போன்ற.
squalor
n. கழிகடை நிலை, அழுக்கடைந்த தோற்றம், ஏழ்மைத் தோற்றமுடைய நிலை, குப்பை கூளமான நிலை.
squama
n. (தாவ., வில.) செதிள, சிம்பு, செதிள் போன்ற இறகு, செதிள் போன்ற எலும்புப்பகுதி.
squamiform
a. செதிள் போன்ற.
squamosal
n. செதிள் போன்ற செப்பை எலும்புப்பகுதி, (பெ.) செதிள் போன்ற.
squamose, squamous
செதிள்களால் மூடப்பட்ட, செதிள் போன்ற, செதிள்களால் ஆன.
squander
v. சிதறு, கலைத்துவிடு, வீணிற் செலவு செய்.
squanderer
n. ஊதாரி, வீண்செலவு செய்பவர்.
squandermania
n. ஊதாரி வெறி.
square
n. சதுரம், சரிசம நாற்கட்ட வடிவம், நாற்கட்ட வடிவம், சதுரவடிவப் பொருள், ஏறத்தாழச் சதுரவடிவமான பொருள், நாற்கட்ட வடிவப் பொருள், சதுரக்கட்டம், தாயக்கட்டக் குறுக்குக் கட்டங்களில் ஒன்று, சதுக்கமுன்றில், நாற்புறமும் மரங்களும் கட்டிடங்களும் சூழ்ந்துள்ள நாலுகட்டு முற்றம், சதுக்கம், நான்கு தெருக்களாற் சூழப்பட்ட கட்டிடங்களின் தொகுதி, செங்கோணளவி, செங்கோணங்களை வரைவதற்கான அல்லது சரிபார்ப்பதற்கான நேர்முக்கோண வடிவக்கருவி, செந்நிலை, கட்டளைப்படிவம், ஏற்புடை மாதிரி, மிசைப் பெருக்கம், எண்ணின் இருவிசைத தற்பெருக்க விளைவு, நாற்கட்டக் காலாட்படைப் பிரிவு, சதுரப்பாணி, குறுக்கு நெடுக்கு வரிசை ஒருங்கமைய எழுதப்படும் முறை, 100 சதுர அடித்தள அளவு, (பெ.) சதுர வடிவான, நாற்கட்டமாமன, நிமிர்கோணான, செங்கோணமாகத் திரும்பியுள்ள, சரிசதுக்கமான, செங்கோணமான, சரிசமநீள அகலமுடைய, உயரத்துக்குப் பொருந்தாத மிகை அகலமுடைய, செங்கோணவாட்டான, முக்குப்பிடிப்பான, சீராக ஒழுங்குசெய்யப்பட்ட, நன்னிலையிலுள்ள, முழுநிறைவான, சிறிதும் விட்டுக்கொடுக்காத, விடாப்பிடியான, ஒழுங்குடைய, நேர்மையான, சீரான நிலையமைதியோடு கூடிய, ஒரு சீரான, மாறுபாடற்ற, சரிக்குச் சரியான, மாறு செய்து, சரிசமமான, ஆட்ட நடனவகைகளில் நால்வர்க்குரிய, (வினை.) சதுரமாக்கு நாற்கட்ட வடிவினதாக்கு, வெட்டுமரத்துக்குச் செங்கோணமூலை விளிம்புகளைக் கொடு, எண்ணினைத் தற்பொருக்கமாக்கு, வட்ட வகையில் பரப்பளவைச் சதுர அளவையாக்கிக் கூறு, பொருத்துவி, பொருத்திக் காட்டு, பொருந்து, இசைவுறு, சரிசெய், அறுதிசெய், தீர்த்துவிடு, தொகை செலுத்திவிடு, (பே-வ) கைக்கூலி கொடு, இலஞ்சங்கொடுத்துச் சரிப்படுத்து, விறைப்புடன் நடந்துகொள், குத்துச்சண்டைக்காரர்நிலை மேற்கொள், குத்துச்சண்டைக்காரர்நிலை மேற்கொண்டு முறைத்து நோக்கிச்செல், குழிப்பந்தாட்ட வகையில் போட்டிப் பந்தயத்தின் கெலிப்பெண்களைச் சரிசமமாக்கு, ஆட்டத்தில் எடுத்த எண்ணிக்கைளவினைச் சரிசமமாக்கு, ஆட்டத்தில் எடுத்த எண்ணிக்கைளவினைச் சரிசமமாக்கு, (கப்.) குறுக்குச் சட்டங்களை அடிக்கட்டைக்குச் செங்கோணமாகக் கிடைநிலையில் வை, (கப்.) தளை வட்டுக்களைக் கிடைநிலையில் வை,கப்பற் பாய்மரக் கயிற்றேணியின் குறுக்குப் படிக்கயிறுகளை மற்றப் படிக்கயிறுகளுக்கிணையாகக் கிடைநிலையில் வை, (வினையடை.) செங்கோணமாக, உறுதியாக, நேரடியாக, ஒருசீராக, சரிசமமாக, உண்மைக, நேர்மையாக.
square-built
a. கட்டுருளியான, சதுருவடிவத்தை நினைப்பூட்டுகிற, உயரத்தை நோக்கும்போது சற்றுக் கூடுதலாகவே அகன்றிருக்கிற.
square-rigged
a. இணைவரிக்கட்டான, முக்கியமான பாய்கள் பக்கவாட்டான கயிறுகளால் பாய்மர நடுவுடன் இணைக்கப்பெற்ற.