English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
square-toes
n. சதுர வடிவில் முடியும் கால்விரல்களையுடையவர், சதுர வடிவில் முடியும் புதைமிதிகளையுடையவர்.
squareface
n. (பே-வ) சாராய வகை.
squarely
adv. சதுரமாக, நேர்மையாக.
squarrose, squarrous
(தாவ., வில.) கரடுமுரடான செதிள் திரளமைவுடைய.
squarson
n. பெரியதனச் சமயகுரு, பண்ணையாராகவும் சமய குருவாகவும் இருக்கும் ஒருவர்.
squash
-1 n. பிழிசாறு, துவையல்கூளம், கசக்கிப்பிசைந்த மொத்தை, மக்கள் திரள், மெத்தனவு, மென்மைப்பொருளின் வீழ்ச்சி, மெத்தென வீழ் ஒலி, ஐம்பந்தாட்டம், மெத்தென்ற பந்துகள் கொண்டு ஐவராடும் ஆட்டம், (வினை.) கசக்கு, பிசை, நொறுக்கு, பிழி, அழுத்திச் சாறெடு, அடையாக நெரித்திடு, கூழாகும்படி நசுக்கு, நெருக்கி மொய், திரளாக அடைவுறு, நெருக்கியடித்து வழியுண்டாக்கிக்கொண்டு செல், சுடுசொல் கூறி ஒருவர் வாயெடுக்கவொட்டாமல் அடக்கு.
squashy
a. கூழான, களியான, குழம்பான, ஊறவைக்கப்பட்ட, தட்டையாக நசுக்கப்பட்ட.
squat
n. குந்துகை, குந்துயிருக்கும் நிலை, குட்டையான தடித்த மனிதர், (பெ.) குந்தியிருக்கும் நிலையிலுள்ள, ஆள் வகையில் தடித்துக்குட்டையான, சிறுத்துக் கொழுத்த, (வினை.) தரையில் குந்த, குந்திக்கொண்டிரு, குந்தியிருக்க்ச செய், விலங்குகள் வல் தரையை யொட்டிப் பதுங்கியிரு, (பே-வ) உட்காரு, அமர்.
squatter
n. குந்தியிருப்பவர், குந்துபவர், ஆஸ்திரேலிய வழக்கில் அரசியல் நில மேய்ச்சல் உரிமையாளர், கால்நடைஉடைமையாளர், சட்டக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட நில உடைமையாளர், தாவணம் போடுபவர், உரிமையின்றிப் பொதுநிலத்தில் தங்குபவர், யாருமில்லாத வீட்டை அதிகாரமின்றி உடைமையாக்கிக் கொள்பவர்.
squaw
n. அமெரிக்க செவ்விந்தியப் பெண், அமெரிக்க செவ்விந்திய வழக்கில் மனைவி.
squaw-man
n. செம்மனை வெள்ளையர், அமெரிக்க-இந்தியப் பெண்ணை மணந்துகொண்ட வெள்ளையர்.
squawk
n. கிறீச்சொலி, பறவையின் அலறல், அச்சக் கூவிளி, வேதனைக் கூக்குரல், (வினை.) கிறீச்சிடு, பறவை வகையில் அலறு, அச்சக் கூவிளி வட்டு, வேதனைக்குரல் எழுப்பு.
squeak
n. கீச்சொலி, மயிரிழைத் தப்பிப்பிழைப்பு, பெயராளவான வெற்றி, (வினை.) சுண்டெலிபோலக் கிச்சொலி எழுப்பு, மசகிடாத கீல் போலக் கிறீச்சொல் எழுப்பு, கீச்சென்ற ஒலியிற் பேசு, (பே-வ) கூட்டாளியைக் காட்டிக் கொடு.
squeaker
n. கீச்சொலி எழுப்புகிறவர், மாடப்புறாக் குஞ்சு, காட்டிக்கொடுப்பவர், கீச்சொலி விளையாட்டுப் பொம்மை.
squeal
n. குழந்தையின் கீச்சொலி, வீல்வீல் என்ற குழந்தைக் கதறல், குழந்தையின் மகிழ்ச்சிக் கூச்சல், பன்றியின் கிறீச்சொலி, (வினை.) குழந்தை வகையில் கீச்சொலியிடு, குழந்தை வகையில் வீலவீல் என்று கதறு, குழந்தை வகையில் மகிழ்ச்சியுடன் பேசு, (பே-வ) வரிவிதிப்பை எதிர்த்து வீறிட்டெழு, (பே-வ) கூட்டாளியைக் காட்டிக்கொடு.
squealer
n. கீச்சிடுபவர், புறாக்குஞ்சு, கூட்டாளியைக் காட்டிக் கொடுப்பவர்.
squeamish
a. குமட்டுகிற, கூர்சுவையுடைய, எதிர்பார்க்கிற.
squeegee
n. (கப்.) தொய்வக விளிம்புள்ள ஈரம்புலர்த்து கருவி, (நி-ப) ஈரம் புலர்த்த தூரிகை, (நி-ப) ஈரம் புலர்த்தும் உருளைக்கருவி, (வினை.) (கப்.) தொய்வக விளிம்புள்ள கருவியினால் ஈரம் புலர்த்து, (நி-ப) துடைப்புத் தூரிகையால் ஈரம் போக்கு, புலர்த்துருளையால் ஈரந்துடை.
squeeze
n. பிழிவு, நெரிப்பு, கசக்கீடு, பிசைவு, கூட்டநெருக்கடி, ஆள்நெருக்கம், ஈரத்தாள் அல்லது மெழுகில் எடுக்கப்படும் அழுத்து தடம், வரிப்பிழிவு, வலிந்து பெறும் வரிப்பணம், சட்டவரம்பிகந்த தரகு, கொள்முதல் சரக்கில்வேலையாட்கள் வலிந்து பறிக்கும் நுற்று விழுக்காடு, (வினை.) பிழி, கசக்கு, பிசை, அழுத்திப்படி, திணித்து உட்செலுத்து, வலிந்து நுழைவி, நெருக்கியடித்து வழியுண்டாக்கிக்கொண்டுசெல், வலிந்து பறித்து அலைக்கழிக்கச்செய், கசக்கிப்பெறு, கட்டாயப்படுத்திச் செயலாற்று, வந்தமாகச் செய்வி, அச்சுறுத்திப் பெறு, விடாது கெஞ்சிப்பெறு, மிக முயன்று வருவி, நாணயம் முதலியவற்றின் பொறிப்படையாளமெடு.
squeezer
n. பிழிபவர், கசக்குபவர், வலிந்து பணம் பறிப்பவர், வந்தமாகச் செய்விப்பவர், பிழிவுகருவி, பிழிவுஇய்நதிரம், பிழியும் இயந்திரப்பகுதி, உருக்கிரும்புக்குழம்பில் குமிழிபோக்கும் இயந்திரக்கருவி.