English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
smock
n. குழந்தை முழுமேலங்கி, பெண்டிர் உள்ளாடை, (வினை.) சுருக்கக் கண்ணறை ஒப்பனை செய், ஆடையில் முகட்டுச் சுருக்கம் வைத்துத்தைத்துத் தேன் கூடுபோன்ற கண்ணறை ஒப்பனைவேலைப்பாடு செய்.
smock-frock
n. முகட்டுக் கொய்வகப்புறச்சட்டை, முகட்டுச்சுருக்கம் வைத்துத்தைத்த தொழிற்கள வேலையாளின் உட்சட்டை வடிவப் புற உடுப்பு.
smock-mill
n. முகட்டுப்பகுதி மட்டும் சுழலும் காற்றுவிசை.
smocking
n. சுருக்கக் கண்ணறை ஒப்பனை உடுக்கை, முகட்டுச் சுருக்கத்துடன் தேன் கூடுபோன்ற கண்ணற்ற ஒப்பனை வேலைப்பாடுடைய உடுப்பு.
smog
n. புகைப்பனி மூடாக்கு, புகையார் மூடுபனி.
smoke
n. புகை, புகையாவி, புகைப்படலம், ஆவி, புகைபோன்ற பொருள், எரிபொருளாவி, ஆவிச் சுழலலை, நீராவிப்படலம், பனியாவி, தூசிப்படலம், உறைபனி மூடாக்கு, வெற்றுப்பொருள், பயனில் பொருள், வெறுமை, இல்பொருள், புகையிழுப்பு, ஒருமுறை, புகைகுடிப்பு, (இழி.) சுருட்டு, (இழி.) பூஞ்சுருட்டு, (வினை.) புகைவுறுவி, புகைவுறு, புகைந்ததெரி, எரியாது, புகைந்துகொண்டேயிரு, கருகு, உட்புகைவுறு, புகைவீசு, புகை வெளியிடு, நீராவி வெளிவருவி, ஆவி வெளியேற்று, கருக்கு, புகைக்கறைப் படுத்து, புகைக்கரியேற்று, புகைக் கருமையூட்டு, புகைபடிவி, தௌிவற்றதாக்கு, புகைச் சுருட்டுக் குடி, புகைக்குழல் உறிஞ்சு, பூஞ்சுருட்டுப் புகையாகு, புகையை உள்ளிழு,புகையை வெளியூது, புகை மண்டுவி, புகைப்போக்கி வகையில் புகையை மடித்து அறைக்குள்ளேயே செலுத்து, புகை மண்டு, மூச்சுத்திணறடி, புகையடிக்க வை, உணவு புகைமண்டிச் சுவை கெடுவி, புகையூட்டித் துப்புரவு செய், புகைப்பதனமிடு, புகைசெலுத்திப் பூச்சிபொட்டு அழி, புகைகுடித்து உடல் நலம் பாழாக்கு, புகைகுடி மூலம் ஆக்கிப்படை, ஐயங்கொள், துப்புக் கண்டுபிடி, கூர்ந்து புலங்காண், தொடர்ந்து வேவாடு, பின்பற்றிக் கவனி.
smoke-ball
n. புகைத்திரை ஏவுகுண்டு, மூடாக்குப் புகைப்படலமிடப் பயன்படும் விசைக்குண்டு, உறிஞ்சுவளிக்குளிகை, காசநோய் மருந்தாக ஆவி உள்ளிழுக்கப் பயன்படும் மாத்திரை.
smoke-bell
n. மச்சடி விளக்குக்காப்பு, தொங்கல் விளக்கின் மேல்தளக் காப்பான மணிக்கவிகை.
smoke-black
n. புகைக்கரி.
smoke-consumer
n. புகைவாங்கி.
smoke-dried
a. புகையுலர் பதனமிடப்பட்ட, புகையூட்டி உலர்த்தப்பட்ட.
smoke-hole
n. புகைவாய், எரிமலைக்குவட்டில் ஆவி வெளிப்படும் புழைவாய்.
smoke-house
n. இறைச்சி-மீன் புகைப்பதன மனை, புகைப்பதன இறைச்சிச் சேமிப்புக் கிடங்கு.
smoke-jack
n. மீவளி வெப்பவிசைத் திருப்புபொறி, அகப்பைக் கோலை மேற்செல் வெவ்வளிமூலமே திருப்பிவிடும் விசைக்கருவி.
smoke-rocket
n. வடிகால் ஒழுகிடம் காண்பதற்குதவும் புகைப்பீற்றமைவு.
smoke-screen
n. (படை.) படைத்துறைக் காட்சிமாறாட்டப்புகைத்திரை நடவடிக்கை.
smoke-stack
n. கப்பல் புகைப்போக்கி.
smoke-stone
n. மதுநிறமணி, மஞ்சள் நிற மணிக்கல்வகை.
smoked
a. புகைபடிவிக்கப்பட்ட, புகைப்பதனஞ் செய்யப்பட்ட.
smokeproof
a. புகைக்காப்புடைய, புகை ஊடுருவாத, புகையாற கெடாத.