English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
smeech
n. எரிவாடை, கருகுமணம், புகைநாற்றம்.
smegma
n. மாணிநுதித் தோல் மடிப்பிடைக் களிக் கசிவு.
smell
n. மணம், நாற்றம், வீச்சம், முடைநாற்றம், முகர்வுணர்வு, தனிமுகர்வுச் செயல், வாடை, மண அலை, மணக்கூறு, தனி மணத்திறம், தனிச் சுவைமணம், தனிப்பண்புத்திறம், உரிய தற்பண்புக்கூறு, பண்பின் சாயல், (வினை.) மோந்துபார், நாற்றம் உணர், மணம்வீசு, கமழ்வுறு, நாறு, முடைவீசு, மணம் உட்கொள், நறுமணம் உள்ளிழு, முகர்ந்தறி, மணத்தால் உணர், வேட்டைநாய் வகையில் மோப்பங்காண், மோப்பத்தால் அறி, மோப்பத்தடம் உணர், மண அலையால் உளதாம் தன்மை அறி, உளதாதல் பற்றிய ஐயங்கொள், தேர்ந்து காண், முன்னுணர்ந்துகொள், தோந்துகண்டறி, தேர்ந்து மெய்ம்மைநாடு, மெய்ம்மை உய்த்துணர், மண அலை பரப்பு, மண அலை பரவப்பெறு, தனிமணம் கமழ்வுறு, தனிமணம் உடையதாயிரு, தனிவாடையுடையதாயிரு, தனிப்பண்புடையதாயிரு தனித்திறம் உடையதாயிரு, சாயலுடையதாயிரு, சார்புடையதாயிரு, நினைவூட்டுவதாயிரு, சார்புகுறித்த எண்ணம் தூண்டுவதாயிரு.
smeller
n. மணம் நுகருபவர், மணத்தால் அறிபவர், மூக்கு, வன்மையான குத்து, மூஞ்சியடி, மூக்கின்மீது விழும் வன்றிறலடி.
smelling-bottle
n. நவச்சிய முகர்புட்டி.
smelling-salts
n. நவச்சிய முகர்வுப்பு மருந்து.
smelt
-1 n. சிறந்த சிறு உணவு மீன் வகை.
smilax
n. படர்செடி வகை, நன்னாரிச்செடி வகை, ஒப்பனைச் செடிவகை.
smile
n. முறுவல், மென்சிரிப்பு, முகமலர்ச்சி, நகைமுகத்தோற்றம், புன்னகைக் குறிப்பு, ஏளன நகை, இகழ்ச்சி நகை, புறக்கணிப்புக் குறிப்பு, தனிமுறை மென்னகை, (வினை.) புன்முறுவல் செய், நகைமுகங்காட்டு, உவகைக்குறிப்புக் காட்டு, வெறுப்புக்குறி காட்டு, இகழ்ச்சி காட்டு, ஐயப்பாடு குறிப்பிடு, புன்னகைமூலம் தெரிவி, முறுவல்மூலம் குறிப்பிடு, தனிக்குறிப்புடன் முறுவலி, முறுவலிப்பினால் துயர்நீக்கு, புன்னகையினால் மகிழ்வுத்து உளநிலை இயைவி, இன்முகங் காட்டு, மகிழ்வாதரவு தெரிவி, நல இயைவுணர்த்து, இன்னலம் குறி, இன்னலங் குறித்துக்காட்டு.
smirch
n. மாசு, அழுக்கு, கறை, வடு, தழும்பு, (வினை.) அழுக்காக்கு, மாசுகற்பி, கறைப்படுத்து.
smirk
n. இளிப்பு, அறிவற்ற ஏளன நகைப்பு, அற்பச் சிரிப்பு, (வினை.) இளி, போலிச் சிரிப்புக்கொள்.
smit
v. (செய்.) 'சிமைட்' என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவங்களில் ஒன்று.
smite
n. (பே-வ) அடி, தாக்கு, முஸ்ற்சி, (வினை,) அடி, தாக்கு, வாளால் வீக்கு, வெட்டு, கொல்லு, முற்றிலும் தோற்கடி, கடுந்தோல்வியுறச்செய், கடுந்தண்டனை அளி, நோய் வகையில் பீடித்தல் செய், தொல்லைகள் வகையில் பற்றிப்பிடி, அவாவகையில் கவர்ந்தீர்த்துப் பிடித்தாட்டு, அழகுவகையில் பற்றி வீழ்த்து, காதல் வகையில் ஆட்டிப்படைத்து ஆட்படுத்து, திடுமென வந்துறு, திடுமென வந்து கேடுசெய்வி, துன்புறுத்து, மனம் புண்படுத்து, வீழ்த்து, வீழ்ச்சியுறுவி.
smith
n. கம்மியர், உலோக வேலையாளர், கொல்லர், இரும்படிப்பவர், உருவாக்கத்தொழிலர், (வினை.) கம்மியர் வேலை செய், உருவாக்கு, உருக்கிப் படைத்தாக்கு.
smithereens, smithers
தூள்கள், துண்டுதுணுக்குகள், சுக்குநீறு.
smithery
n. உலோகத்தொழிலாளர் பட்டறை, கொல்லர் பட்டறை, கப்பற்படை நிலையப்பட்டறை.
Smithfield
n. லண்டனிலள்ள இறைச்சிக்கடை.
smithy
n. பட்டறை, கொல்லுலை, கொல்லன் உலைக்களம், கொல்லர் தொழிற்கூடம்.
smitten
-1 a. கடிக்கப்பட்ட, நோய்வகையில் பீடிக்கப்பட்ட, ஆசைவகையில் பற்றப்பட்ட, கவர்ச்சிவகையில் பாதிக்கப்பட்ட, பெருந்துன்ப வகையில் மிகுதியும் ஆட்பட்ட.