English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
smallage
n. காட்டு மணப்பூண்டுவகை.
smalls
n. pl. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக 'இளங்கலைஞர்' பட்டத்தேர்வுகள் மூன்றில் முதன்மைத்தேர்வு, (பே-வ) சலவை அழுக்குச் சிறுதுணிகள்.
smalt
n. நீலவண்ணமாக்கிய கண்ணாடி, கண்ணாடிக்குரிய நீலவண்ணப்பொடி.
smarmy
a. (பே-வ) உவட்டுகிற, தெவிட்டுகிற.
smart
n. கடுப்பு, கடுநோவு, உள்வலி, உட்குத்தல் குடைவு, அகநைவு, உளவேதனை, உள்ளழுங்கால், உள்ளுறுபாடு, (பெ.) கடுமையான, உறைப்பான, கூர்மையான, கூரறிவுத்திறம் வாய்ந்த, சொடிகரணையுள்ள, மிடுக்குடைய, சுறுசுறுப்பு வாய்ந்த, படுசுட்டியான, வினைத்திறமிக்க, வாய்ப்புநலங்களில் கருத்தூன்றிய,சூழல் வாய்ப்புகளைப் பயன்படுத்தவதில் விழிப்பான, பேர வாய்ப்புநலங்களில் உன்னிப்பான, விரைவூக்கமிக்க, சுறுசுறுப்பார்ந்த,விரைதுடிப்புடைய, விறுவிறுப்பான தோற்றமுடைய, நடைவீறார்ந்த, உடைவீறார்ந்த, மடிதற்ற, உடைவரிந்து கட்டிய, முறுக்குவிடாத, மெருகு குலையாத, புதுநலம்விடாத, உடைவகையில் கச்சிதமான, நாகரிகப்பாங்கில் முனைத்த, தயங்காத, உடனடியான, உடனுக்குடனான, (வினை.) கடுப்பாயிரு, கடுநோவளி, உள்வேதனையடை, உள்ளாரக் குத்தல் குடைதலுறு, கெடுவிளைவுகளை அனுபவி.
smart-money
n. இழப்பீட்டுத்தொகை, குற்றத் தண்டவரி.
smartness
n. சுறுசுறுப்பு, துடிதுடிப்பு.
smartweed
n. நீர்மிளகுச்செடி.
smash
n. தகர்வு, நொறுங்கீடு, மோதல், வன்தாக்கு, வன்குத்து, வல்லடி, பேரழிவு, படுவீழ்ச்சி, படுதோல்வி, பேரிடர், சீரழிவு, நிலை குலைவு, நிறுவன வகையில் நொடிப்பு, வாணிகத்துறையில் தொடர் நெருக்கடித் தொகுதி, நறுந்தேறல் நீர்க்கலவை, பனிக்கட்டியுடன் நீரும் வெறியமும்கலந்து நறுமணச் சுவையூட்டிய கலவைப் பான வகை, புல் வெளி வரிப்பந்தாட்டத்தில் வலைதாண்டு வன்பந்தடி, (இழி.) செல்லா நாணயம், (வினை.) தப்ர், நொறுக்கு, வேகத்துடன் மோது,அடித்து வீழ்த்து, நிர்மூலமாக்கு, சின்னாபின்னப்படுத்து, நிலையவகையில் நொடிப்புறு, முறிவுறு, தகர்வுறு, சின்னாபின்னப்படு, நிர்மூலமாகு, ஊர்திவகையில் மற்றோர் ஊர்திமீது மோதித்தாக்கு, ஆள்மீது சென்று மோது, ஊர்திவகையில் தடங்கல் மோதியடி, முட்டியால் வன்குத்து விடு, படையை நிலைகுலையச் செய்து தோற்கடி, புல்வரிப்பந்தாட்டத்தில் பந்தினை வலைகடந்து மோதியடி, போலி நாணயத்தைச் செலாவணியிற் பரப்புவி, (வினையடை.) மோதுதலாக, மோதித்துண்டு துண்டாகத் தகர்வுற்று.
smash-and-grab
a. தகர்பறிச் சூறையான.
smash-hit
n. மாபெரு வெற்றி, குறிப்பிடத்தக்க பெருங்கெலிப்பு.
smash-up
n. முற்ற முழுக்க நொறுங்கிப் பாழாகுதல்.
smasher
n. உடைப்பவர், நொறுக்குபவர், தூளாக்குவது, வன்றிறல்வாதம், விசைத்தாக்கடி, படுவீழ்ச்சி, போலிநாணயம் செலாவணியிற் பரப்புபவர், இன்னதிர்வுக் கவர்ச்சியூட்டும் அழகி.
smashing
n. தகர்ப்பு, நொறுக்கீடு, (பெ.) தகர்க்கிற, கடுவிசையார்ந்த, மோதுகிற, (இழி.) மிகச்சிறந்த, கவர்ச்சிமிக்க.
smatterer
n. நுனிப்புல் மேய்பவர், புல்லறிவாளர்.
smattering
n. நுனிப்புல்லறிவு.
smear
n. மேற்பூச்சு, அழுக்குத்தடம், எண்ணெய்க்கறை, (வினை.) பூசு, அப்பு, மெழுகு, மேல்தடவிவிடு, எண்ணெய்ப்பூச்சிடு, பிசுக்குடைய பொருளின் தடமிடு, அழுக்குக்கறைபடியவை, குறியடையாளமிடு, கறைப்படுத்து, உருவரை அடித்தழி, துடைத்தழி, அடித்துக்குழப்பி விளங்காமற்செய், புகழ் வகையில் குலைவி, இகழ்க்கறை உண்டாக்கு.
smeariness
n. பிசுக்குடைமை, கொழுப்பார்வு, பிசுபிசுப்பு, மேற்பூச்சுப்பண்பு.
smeary
a. ஒட்டுப் பிசுக்கான, பசையான, கொழுப்பார்ந்த, பிசுபிசுத்த, கறையுடைய, மேற்பூச்சுடைய.
smectite
n. வெண்களி, கறைதுடைப்புக் களிமண் வகை.