English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
slummock
v. (பே-வ) பேராவலுடன் விழுங்கு, அவசரமாக விழுங்கு, ஒழுங்கற்ற வகையில் நட, அருவருப்பான முறையில் பேசு.
slump
n. மந்தம், திடீர் விலை வீழ்ச்சி, படுவிலை இறக்கம், மறுக்கம், திடீர் அக்கறைக் குறைவுநிலை, (வினை.) திடீரென விலையிறங்கு, வெற்றி கிட்டாமற்போ, முழுத்தோல்வியுறு.
slung
v. 'சிலிங் (1)' என்பதன் இறந்தகாலம்.
slunk
v. 'சிலிங்க்' என்பதன் இறந்தகால-முற்றெச்ச வடிவம்.
slur
n. கறை, களங்கம், புகழ்மீது ஏற்பட்ட இளிவரவு, அவதூறு, இகழ்க்குறிப்பு, பழிச்சாட்டு, மறைகறை, தௌிவற்ற மறைப்புத்தன்மை, தௌிவின்மைக்கூறு, தௌிவற்ற ஒலிப்பு, (இசை.) முடுகுக்குறி, விரைவோட்ட இணைப்புக்குறியீடு, (வினை.) தௌிவின்றி உச்சரி, தௌிவின்றி எழுது, விரைந்தொருங்கொலித்துத் தௌிவற்றதாக்கு, எழுத்தின் மேல் எழுதித் தௌிவற்றதாக்கிவிடு, குளறிப்பேசு, சொல்வதில் மெல்லவிட்டுச்செல், மெல்லவிட்டுக் குறிப்பிடு, விளங்காமல் விரைந்து குறிப்பிடு, (இசை.) முடுகிசைக்குறியிடு, (இசை.) விரைந்திணைத்து முடுகிசையாகப் பயில், குற்றங்குறைகளைப் பொருட்படுத்தாது தள்ளிவிடு, மறைத்துக்காட்டு, குறைத்துக் காட்டு, நடத்தையில் மாசுண்டாக்கு, ஆள்மேல் கறைஏற்படுத்து, சாட்டிப்பேசு, குத்திக்குறிப்பிடு.
slurry
n. சீமைக்காரை செய்வதற்கான நீர்மப்பொருட்கலவை, மின்துறை உள்வரிச்சாந்து, மின்னோட்டத்தை மாற்றியமைக்க உதவும் பொறியின் உள்வரியினைச் சீர்செய்யப்பயன்படும் நுண்மணல்-களிமண் கலந்த அரைநீர்மக் கலவை.
slush
n. அளறு, குழைச்சகதி, பனிச்சேறு, அரைகுறையாக உருகிய பனிக்கட்டி, மடத்தனமாக உணர்ச்சிக்குவை, சிறுபிள்ளைத்தனமான உணர்ச்சிநிலை.
slut
n. இழிமகள், ஒழுங்கற்றவள், அழுக்குப்பிடித்தவள், பிணவு பெண்ணாய், கந்தல் மெழுகுதிரி, மெழுகுதிரியாகப் பயன்படுத்தப்பெறும் கொழுப்பார்ந்த கந்தல் துணி, இளம்பெண்.
sly
n. ஒளிவுமறைவு, மறைமுகத்தன்மை, (பெ.) படுசூழ்ச்சி வாய்ந்த, நயமிக்க சூழ்ச்சித்திறனுடைய, மறைமுகமாகச் செய்யப்படுகிற, மறைவடக்கமமான, கரவடமான, மறைவமைதியுடைய, திருட்டுத்தனமான, கரவுபயில்கிற, மறைந்தொழுகுகிற, ஊமைக் குசும்புவாய்ந்த, வெளித்தோன்றாக்குறும்புத்தனமுடைய, புதைகுறிப்புடைய, மறைமுகமாகச் சாட்டிக்கூறுகிற, மறைமுகக் கேலி கிண்டலான, வசைக்குறிப்பார்ந்த, நயமாகக் குத்திக்காட்டுகிற.
sly-boots
n. செல்லவழக்கில் உள்ளார்ந்த சூழ்ச்சித்திறமிக்கவர், எமப்பேர்வழி.
slyness
n. தந்திரம், திருட்டுத்தனம்.
slype
n. இடையூடுவழி மாவட்டத் தலைமைத் திருக்கோயிலினின்று கட்டளைக்குருக்கள் கூடுமிடத்திற்குச் செல்லும் இடைச்சுவர் கடந்த உள்ளிடைவழி.
smack
-1 n. சிறுபதக்கூறு, முனைமுகக்கூறு, சிறிதளவு, உணவின் சிறுகூறு, சுவைமணத்திற் நுட்பம், சார்புச் சுவைத்திறம், சார்புமணத்திறம், சார்பண்புக்கூறு, ஒன்றன் உயிர்த்துடிப்புக்கூறு, (வினை.) சார்பதமுடையதாய் அமை, சார்புச்சுவைமணத்திறமுடையதாயிரு, சார்புப்பண்புக் கூறுடையதாயிரு, சார்பான உயிர்த்துடிப்புடையதாயிரு, சார்பான சாயலுடையாதாயிரு, எதிர்பாராச் சுவைத்திறமுடையதாயிரு, சுவைச்சாயலுடையதாயிரு, துணைச் சுவைத்திறமுடையதாயிரு.
smacker
n. சிவ்வொலியுடன் கூடிய முத்தம், படீர் அறை, தடாலொலியுடன் கூடிய அடி, போற்றத்தக்க மாதிரி, தனிச்சிறப்புப்பொருள், பெரும் பேர்வழி, அமெரிக்க வெள்ளி.
smacksman
n. திமிலோட்டி, மீன்பிடிக்கும் ஒற்றைப்பாய்மரக் கப்பலோட்டி.
small
n. நொய்ய கூறு, ஒடுங்கிய பகுதி, நுண்பொடி நிலக்கரி, (பெ.) சிறிய, உருவில் பெரிதல்லாத, சிற்றளவான, அளவில் குறைந்த, குறுகலான, சில்றெல்லையுடைய, பரப்பில் குறுகிய, ஒடுக்கமான, ஒல்லியான, சிலவான, சிறுஎண்ணால் குறிக்கப்ட்ட, மட்டளவான, மிகுதி என்று குறிக்கத்தகாத, சிறு கூறுகள் கொண்ட, நுண்பரலார்ந்த, நுண்ணிழைவான, சிறுதிறமான, சிறிதளவில் செயலாற்றுகிற, பொதுநிலைக்கூறான, சிறப்பற்ற, முக்கியத்துவமற்ற, முன்னணியில்லாத, மறைந்தொதுங்கியுள்ள, சமுதாயத்தில் தாழ்ந்த, தாழ்மையான, ஏழ்மையான, பணிவார்ந்த, சிற்றியலான, அற்பமான, சிறுபுத்தியான, சிறுநோக்குடைய, குறுகிய மனப்போக்குடைய, தாராள மனப்பான்மையில்லாத, சிறுமதிப்புடைய, சில்லறையான, நாணயங்களிடையே மேன்மதிப்பற்ற, வெள்ளி செம்புக் காசுருவான, சராசரியிற் குறைந்த, மதிப்பளவிற் குறைந்த, தேறல்வகையில் நீராளமான, வெறியச்சத்துக் குறைவான, (வினையடை.) தாழ்தொனியில், மௌ்ள, மென்மையாக, சில்லறையாக.
small-arms
n. தூக்கிச் செல்லக்கூடிய வெடிக்கலங்கள்.
small-clothes
n. முழங்காலளவு குறுங்காற் சட்டை.
small-minded
a. பெரிய அம்மைநோய், வைசூரி.
small-sword
n. குத்துவாள்.