English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
smoker
n. புகைஞர், வழக்கமாகப் புகைகுடிப்பவர், புகைப்பதனஞ் செய்பவர், புகைப்போர் பெட்டி, தொடர்வண்டியில் புகைகுடிப்பதற்கென ஒதுக்கிவிடப்பட்ட பெட்டி, புகைகுதடிப்பதற்கு வாய்ப்பிசைவளிக்கும் இசைநிகழ்ச்சி.
smokers heart
n. அளவுமீறிய புகைப்பழக்கத்தால் ஏற்படும் குலைப்பைக் கோளாறு.
smoketight
a. புகை நுழையமுடியாத, புகை புகாத.
smoking
n. புகைதல், புகைப்பு, புகைகுடிப்பு, புகைப்பழக்கம்.
smoking-cap
n. புகைபிடிப்பவர் அணிவதற்குரிய ஒப்பணைப்பாணித் தொப்பி வகை.
smoking-car, smoking-carriage, smoking-com-partment
n. தொடர்வண்டியில் புகைப்பு வாய்ப்பிசைவுப் பெட்டி.
smoking-concert
n. புகைபிடிப்புக்கு இசைவளிக்கும் இசை நிகழ்ச்சி.
smoking-jacket
n. புகைபிடிப்பவர் அணிவதற்குரிய ஒப்பனைப்பாணிச் சட்டை வகை.
smoking-room
n. புகைப்பறை.
smoky
a. புகை வெளியிடுகிற, புகையார்ந்த, புகையால் மறைக்கப்பட்ட, புகையால் தௌிவற்றதாக்கப்பட்ட, புகையால் கறையூட்டப்பட்ட, புகைபற்றிய, புகைபிடித்த, புகையால் கருநிறமேற்றப்பட்ட, புகைபோன்ற.
smooth
n. வழவழப்பிடம், மெல்லிழைபுத்தன்மை, (பெ.) வழவழப்பான, மிருதுவான, மெல்லிழைவான, உராய்வற்ற, அழுத்தமான, சொரசொரப்பற்ற, சமதளமான, மேடுபள்ளமற்ற, வழுக்கையான, உரோமமற்ற, மெல்லமைதிவாய்ந்த, உலைவற்ற, நீர்ப்பரப்பு வகையில் அலையாடாத, மேற்பரப்பு வகையில் சுரிப்பற்ற, திரைவற்ற, கசங்காத, மடிப்புவரியற்ற, தட்டுத்தடங்கலின்றிச் செல்கிற, தடங்கலின்றிக் கடந்து செல்லக்கூடிய, இணக்கமாக, இழைவிசைவான, ஒத்தியல்பான, ஊடிழைவான, ஒலி வகையில் வல்லோசையற்ற, மெல்லிசைவான, குரல் வகையில் மெல்லிசையான, கரகரப்பாயிராத, சொல் வகையில் மென்னயன்ன, தொனி வகையில் கடுமையற்ற, சுவைநயமிக்க, இன்னயமிக்க, (வினை.) வழவழப்பாக்கு, சொரசொரப்பு நீக்கு, சமநிரப்பாக்கு, மேடுபள்ளமப்ற்றுத, மெல்லிழைவாக்கு, உராய்வகற்று, மெருகிடு, பளபளப்பாக்கு, மெல்லிழைவாக்கு, வழவழப்பாகு, மெல்லிழைவாகு, சமதளப்படுத்து, சரிநிரப்பாக்கு, மேடுபள்ளங்களகற்று, இடைமுனைப்பகற்று, முனைப்பு படைப்புக்களை அப்ற்று, தடைகளகற்று, எளிதாக்கு, கரிப்பகற்று, சுருக்கநீக்கு, மடிப்பு வரி துடைத்தழி, சொரசொரப்பு தேய்த்தொழி, முரண்பாடகற்று, வேற்றுமை சரி செய், இணக்குவி, அமைவி, ஆற்றுவி, உலைவகற்று, ஒத்தியைவி, இழைந்தியைவி, சிக்கல்களகற்று, தொல்லைகளில்லாதாக்கு, குறைபாடுகளை மூடிமழுப்பு, இன்சொல்லுரை, இன்புகழ்ச்சி கூறு, இழைவாக நட.
smooth-bore
a. துப்பாக்கிக்குழல் வகையில் வரியிழைவற்ற, அழுத்த ஊடிழைவான, தள ஊடிழைவான, துப்பாக்கிக் குழல் வகையில் வரியிழைவாக வெட்டப்படாத.
smooth-faced
a. வழவழப்பான முகமுடைய, மெல்லிழைவான மேற்பரப்பினையுடைய, இனிய தோற்றமுடைய, தாடியற்ற, சுருக்கமற்ற, நம்பி ஏற்கத்தக்க, சரியானதாகத் தோற்றுகிற, ஒத்துக்கொள்ளத்தக்க புறாத்தோற்றமுடைய.
smoothen
v. வழவழப்பாக்கு, இழைவாக்கு,முண்டுமுடிச்சின்றி நிரப்பாக்கு, சமதளப்படுத்து, இணக்கி இயக்குவி, இன்னயப்படுத்து.
smoothing-iron
n. சலவைத் தேய்ப்புப் பெட்டி.
smoothing-plane
n. தச்சரின் இழைப்புளி.
smoothspoken, smooth-tongued
a. நாநயம் படைத்த, சொல்லிணக்கநயம் உடைய, நயநாகரிகப்பேச்சுடைய, மெல்லமைதியுடன் பேசுகிற, புகழ்ந்து மழுப்பும் இயல்புடைய, நம்புதற்குரிய இயல்புவாய்நத, நம்பத்தக்க முறையிற்சொல்லப்படுகிற.
smote
v. 'சிமைட்' என்பதன் இறந்தகாலம்.
smother
n. புகை, பூந்தணல், அகக்கொந்தளிப்பு, உட்குமைவுநிலை, அடர்தூசிப்படலம், செறிதிவலைத்திரள், திண்புகைப்பிழம்பு, மூச்சுத்திணறல், திக்குமுக்காட்டம், (வினை.) திணறஅடி, திக்குமுக்காடவை, மூச்சு முட்டச்செய்து கொல்லு, அடர்த்தழி, மூட்டமிடு, அடர்த்து மூடாப்பிடு, தீயை மணல்சாம்பர் முதலியவற்றினால் அடர்த்து மூடாப்பிட்டு மூத்துவிடு,அடர்த்தணைத்துக்கொள், அடர்த்தடிப்படுத்து, செயலடங்குவி, தோன்றாதடக்கிவிடு, உள்ளடக்கிவை, சதுரங்கத்தில் அரசுகாயை அசையமுடியாமல் தடுத்தடைப்புச் செய்துவிடு, (அரு.) திணற அடிக்கப்பெறு, (அரு.) கீழடங்கு.