English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
smothery
a. திக்குமுக்காட வைக்கிற, மூச்சுவிடமுடியாது செய்கிற, அடர்த்தணைத்துவிடுகிற.
smoulder
n. அழல், புற அணற்கொழுந்தின்றி உட்கனன் றெரியுந் தீ, உட்கனல்வு, உட்புழுக்கம், (வினை.) அழன்றெரி, புற அனற்கொழுத்தின்றி உள்ளார நின்றெரி, உட்கனல்வுறு, உட்கனிவுற்று எரிவுறு, கருகு, புகைந்ரி, அடங்கிய ஆற்றலுடன் எரி, தீய்வூறு, காணா நிலையிற் பொசுங்குறு, புழுங்கிக் கொண்டிரு, உணர்ச்சிகள் வகையில் உள்ளார நின்றெரித்துக்கொண்டிரு, புறந்தெரியாமல் உள்ளே விளைந்து கொண்டிரு, தன்னறிவில்லாமலே கனிவுற்றுப் பெருகிக்கொண்டிரு, தீய்ந்து கொண்டிரு, கருகிக் கொண்டிரு, வெளித்தோன்றும் விளைவுகளின்றி உள்ளே வளர்ந்து கொண்டிரு.
smudge
-1 n. பொட்டுக்கறை, அழுக்குத்தடம், அழிதடம், வரியடிப்புக் கறை, உருவிலாக்குறி மொத்தை, தௌிவற்றமைத்தடக்கறை, (வினை.) ட்டுக்கறையிடு, அழுக்குத்தடம் உண்டாக்கு, மைகொட்டி அழுக்காக்கு,அடிப்புக் கறைத்தடம் உண்டுபண்ணு, அடை அப்பித் தௌிவிலாகாக்கு, தூய்மைகெடு, பெயர்மீது மாசு கற்பி, புகழுக்குக களங்கம் வருவி.
smug
n. ஆகுல நீர்மையர், ஆரவாரப் பேர்வழி, தளுக்கித்திரிபவர், புத்தகப்புழு, பல்கலைக்கழகக் கேளிக்கைகளில் கலந்துகொள்ளாதவர், தன் மேட்டிமைத்தனம், (பெ.) அற்பத் தன்னிறைவுடைய, தன்னிலே தான் மகிழ்ந்து திரிகிற, உயர்வுள்ளாத, ஆரவாரமான.
smuggle
v. கள்ளவாணிகஞ் செய், கள்ளக்கடத்தல் செய், சட்டவிரோதமாகச் சரக்குகள் கடத்து, இரகசியமாக அனுப்பு, ஒளித்துச் சேர்த்துவை.
smuggler
n. கள்ளக்கடத்தலாளர், கள்ள வாணிகர்.
smuggling
n. கள்ளக்கடத்துதல், கள்ள வாணிகம்.
smut
n. கரிக்கசடு, கரிக்குச்சு, கரிக்கீற்று, புகைக்கரியால் ஏற்படும் கறை, கீழ்த்தரப்பேச்சு, கீழ்த்தரச்சொற்கள், இழிதகைக்கதை, கருக்கல் நோய், கூலநோய் வகை, (வினை.) கரிக்கீற்றிடு, கரியால் அடையாளமிடு, கூலவகையில் கருக்கல் நோயால் தாக்கப்படு, கருக்கல் நோய்க் காளான் வகையில் கூலவகையினைத் தாக்கு.
smutmill
n. கருக்கல் நோய்க்காளானால் பாதிக்கப்ட்ட கூலத்தைத் துப்புரவுப்படுத்தும் இயந்திர சாலை.
Smyrniot, Smyrniote
துருக்கிநாட்டில் ஸ்மிர்னா நகரில் வாழ்பவர், (பெ.) ஸ்மிர்னா சார்ந்த.
snack
n. சிற்றிடையுணவு, விரைசிற்றுணா.
Snacks
நொறுக்குத் தீனி, நொறுவை
snaffle
n. வாய்வடம், குதிரைக் கடிவாளத்தின் ஒற்றைவாய்ப்பொருத்து கம்பி.
snaffle-bit
n. குதிரைக் கடிவாளத்தில் நெருக்குவடியற்ற வாய்வடம்.
snaffle-rein
n. குதிரைக்கடிவாளத்தின் வாய்வடக்கயிறு.
snag
n. முளை, குற்றி, முறிமுளை முகடு, கோறைப்பல், பல்லின் கோறைமுகடு, முறிந்த அடிமரக்கட்டை, நீரடிமுட்டுக்கட்டை, கலங்களின் நெறி தடுக்கும் ஆறு-கடல்களின் நீரடிவேர் அல்லது கட்டை முளைப்பு, எதிர்பாராத் தடங்கல், மறைமுக முட்டுக்கட்டை, (வினை.) கலத்தை நீரடி முட்டுக்கட்டையில் கொண்டு முட்டிவிடு, முட்டிவடுப்படு, முட்டிக்கீறலுறு, நீரடிக்கட்டையில் மாட்டிக்கொள், தடுத்துநிறுத்து, எதிர்பாராத் தடங்கலிடு, ஒழுங்கறத் தறி, ஆற்றுப்படுகையில் முட்டுக்கட்டைகளை அகற்று, கட்டுத்தறியின் முனைமுகடழி, முனை ஒழுங்குபடுத்து.
snail
n. நந்து, நத்தை, உணவாகப் பயன்படும் நந்தூன், தோட்ட நத்தை, தோட்டச் செடிகளை அழிக்கும் சிற்றுயிர் வகை, இலையட்டை, இலைவடிவ நத்தை, மந்தமானவர், சுறுசுறுப்பற்றவர், மெல்ல நகரும் விலங்கு, நந்தாழி, மணிப்பொறியில் மணியடிப்பினை ஒழுங்குசெய்யும் நந்துவடிவப்பல்வட்டமைவு, சுருள்வடிவ நெற்றுவகை, சுருள்வடிவ நெற்றினையுடைய பயிற்றினம், (வினை.) தோட்ட நத்தையை அழி, தோட்ட நத்தை வேட்டையாடு, நத்தை வேகத்தில் செல்.
snail-clover
n. திருகுநெற்றுக்களையுடைய பயிற்றினச் செடிவகை.
snail-fish
n. அகடொட்டுமீன், ஒட்டிக்கொள்வதற்கான வயிற்றுப்புற உறிஞ்சு கருவியுடைய மீன்வகை.