English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
snakeshead
n. அல்லிமலர்ச் செடிவகை.
snakily
adv. பாம்பு போன்று, மெல்ல, எதிர்பாராமல், ஆர்வமின்றி, நயவஞ்சகத்துடன்.
snakiness
n. பாம்புபோன்ற தன்மை, பாம்புச் செறிவுடைமை, பாம்பினியில்பு.
snakish
a. பாம்பு போன்ற தோற்றமுடைய.
snaky
a. பாம்படர்ந்த, பாம்பின் தொல்லைகளுக்கு இடம் தருகிற, பாம்புபோன்ற தோற்றுமுடைய, பாம்பு போன்ற நஞ்சுடைய, சூழ்ச்சியும் வஞ்சகமும் உடைய, உணர்ச்சியற்ற, நன்றியறிவற்ற.
snap
n. சுடக்கொலி, நொடிப்பொலி, சிறுவெடிப்பொலி, சடக்கொலி, பொருக்கென அடைத்துக்கொள்ளும் ஒலி, வளைகாப்பு விற்பொருத்து, நிழற்பட நொடிப்பெடுப்பு, கடும்பனியுறைவு, சீடைவகை, பொருபொருப்பான சிறுபண்ணியம், சீட்டாட்டவகை, சிறுதிற நடிப்புப்பாணி, குறுகிய கால நடிப்பு ஏற்பாடு, சொடி, தெம்பு, செயலுக்கம், மொழிநடை விறுவிறுப்பு, புத்தார்வச் சுவை, (பே-வ) மிக எளிய செயல், எதிர்பாராத் திடீர் நிகழ்ச்சி, திடீர் ஏற்பாடு, (பெ.) திடீரான, எதிர்பாராது இடைவந்த, நொடியான, அதிர்வூட்டுகிற, விரைதீர்வான, (வினை.) ஒடி, சடக்கென நொடியச்செய், சடக்கென நொடிவுறு, முறி, அறுந்துவிடு, துண்டுபடுத்து, அறுந்துவிடச்செய், சுடக்கிடு, சடக்கெனும் ஒலிசெய், வெடி, சிறுநொடிப்புறு, சடக்கென மூடுவி, பொருக்கென அடைத்துக்கொள், திடீரென்று கௌவு, நாய் வகையில் சடக்கென்று கடி, கைத்துப்பாக்கிவெடிதீர், கைத்துப்பாக்கி வகையில் வெடிதீர்வுறு, நிழற்பட நொடிப்பெடு, சட்டென நிழற்படமெடு, உரியவரறியாமல் உடனடிநிழற்படமெடு, கடுகடுத்துப்பேச, சீறிவிழு, சினந்துபேசு, திடுமென இடையிட்டுப்பேசு, பொறுக்கி எடு, திடுமென இயங்கு, திடீரெனச் செயல் செய், சட்டென முடிவுசெய், சட்டென ஒத்துக்கொள், (வினையடை.) திடுமென, தடாலென, சடக்கென்ற ஒலியுடன்.
snap-bolt, snap-lock
கதவை மூடும்பொழுது தானே பூட்டிக்கொள்ளும் வில்லமைவுத் தாழ்ப்பாள், விற்பொருத்துத்தாழ்ப்பாள், விற்பூட்டு.
snap-hook
n. பற்றிவிடாக்கொளுவி.
snapping
n. நொடிப்பு, சுடக்கீடு, கடிப்பு, சிடுசிடுப்பு, கடுகடுப்புபேச்சு, (பெ.) நொடிக்கிற, கடிக்கிற, சுடக்கிடுகிற, கடுகடுப்பான.
snappish
a. உறுமுகிற, சிடுசிடுப்பான, விரைவும் கடுகடுப்பு முடைய.
snappy
a. படுவிரைவான, ஆர்வமாகக் கடிக்கும் இயல்புடைய, திடுமெனச் செயலாற்றுகிற.
snapshot
n. நிழற்பட நொடிப்பெடுப்பு, (வினை.) நொடிப்பு நிழற்படமெடு.
snare
n. கண்ணி, பொறி, சூழ்ச்சி, சோதனை, மாயக்கவர்ச்சிப்பொருள், (மரு.) கழலையறுவையில் பயன்படுத்தப்படும் கம்பிச்சுருக்கு கண்ணி, (வினை.) கண்ணியிட்டுப்பிடி, பொறிவலைப்படுத்து.
snares
n. pl. பக்கமுரசத்தில் முடுகிசைக்கான அடிவார்முறுக்கு.
snarl
-1 n. உறுமுதல், உறுமலொலி, (வினை.) நாய்வகையில் உரத்த குரலோடு உறுமு, ஆள் வகையில் நாய்போன்று எரிந்து விழு, சிடுசிடுப்புக்கொள், முணுமுணுப்புக்கொள், குறைபாட்டுக்கொள்.
snatch
n. கைக்கொள்ளுகை, பற்றி எடுப்பு, பறிப்பு, வலிந்த பற்றீடு, பறிக்கக் கைநீட்டுதல், பறிக்கும் நோக்குடைய திடீர்க்கைநீட்டம், வெஃகுதல், பிடுங்கார்வம், கவரும்ஆர்வ அவா, சிறு பகுதி, சிறிது நேர நிகழ்வு, ஆர்வக் கவ்வுதல், (வினை.) கைக்கொள், பற்றியெடு, பறித்தெடு, திடீரெனக் கைப்பற்று, வலிந்து பற்று, கேட்காது எடுத்துக்கொள், பறி, பிடுங்கு, வலிந்துபற்று, பறித்துக்கொண்டுசெல், இடரினின்று மயிரிழையில் தப்புவித்துக்காப்பாற்று, கடுமுயற்சியுடன் பெறு, பறிக்கக் கைகளை நீட்டு, வாய்ப்பு நோக்கிப் பெற முனை.
snatch-block
n. (கப்.) கயிற்றுப்புழையுடைய மூடு கப்பி.
snatches
n. pl. இடையிடை முயற்சித் துணுக்குகள், பாட்டு வகையில் இடையிடைப்பகுதிகள், நினைவுத்துணுக்குகள், பேச்சில் இங்கொன்றும் அங்கொன்றுமான பகுதிகள், இடையிடைச் சிறு சிறு கூறுகள்.
snatchy
a. இடையிடைவிட்ட, ஒழுங்கற்ற.