English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
showboat
n. இயங்கு அரங்கமாகப் பயன்படும நீராவிப் படகு.
shower
-1 n. மழைத்தாரை, குறும் பெயல், பாட்டமழை, கல்மழை, ஆலங்கட்டி வீழ்ச்சி, அம்புவகையில் மாரி போன்ற பொழிவு, குண்டுப்பொழிவு, மண்வாரியடிப்பு, தூசி வீழ்ச்சி, கற்களின் சொரிவு, (வினை.) மழை வகையில் தாரையாகப் பொழி, குறும் பெயலுறு, மழை போலப் பொழி, மழையெனச் சொரி, கொடை வகையில் வாரி வழங்கு.
shower-bath
n. தூம்புதாரை, துவலைக்குழாய்.
showery
a. பாட்டமழை பெய்தலையுடைய, மழை விட்டுவிட்டுப் பெய்கிற, தூற்றலான.
showgirl
n. அணிநடிகை, நடிப்பதற்காகவன்றி ஒப்பனைக்காகத் தோன்றும் நடிகை, காட்சியணங்கு.
showman
n. காட்சிச்சாலை உரிமையாளர்.
showmanship
n. காட்சிக்காலை, விளக்க மேலாண்மைத்திறம், சரக்குக்காட்சி விளக்கத்திறம்.
showy
a. பகட்டிக் கொள்ளுகிற, ஆடம்பரமான, புறப்பகட்டான, ஒப்பனை முனைப்பான, போலியான.
shram
v. (பே-வ) குளிரால் குருக்கு, சுரிக்கச்செய், மரத்துப் போகச் செய்.
shrank
v. 'சிரிங்' என்பதன் இறந்தகாலம்.
shrapnel
n. தெறிகுண்டு, உலோகத்துண்டுகள் நிரப்பிக்கூரிய சிம்பு சிராய்களாக வெடித்துத் தெறிக்கத்தக்க சிதறுவெடிகுண்டு.
shred
n. கந்தைக்கீற்று, துண்டு, துணுக்கு, கிழிசல், உடைசல், எச்சமிச்சங்கள், மிகச் சிற்றளவு, (வினை.) துண்டு துண்டாகச் சிதறடி, கந்தல் கந்தலாகக் கிழி.
shrew
n. ஆண்மாரி, அடங்காப்பிடாரி, மூஞ்சூறு.
shrewd
a. ஆய்திறமிக்க, எஃகு நுட்பமுடைய, கூர்மதிவாய்ந்த, நுண்புலமிக்க, தேரறிவு வாய்ந்த, வகை திரிபுணர்வுடைய, நுண்ணுணவுர்த் தோற்றமுடைய, உறைப்பான, நோய் வகையில் உறுத்தலான, கடுத்த, குளிர் வகையில் கடிப்புமிக்க.
shrewish
a. தூற்றும் பெண்டிரின் இயல்பு வாய்ந்த, ஆண்மாரியான, அடங்காப்பிடாரியான, எரிந்துவிழுகிற.
shriek
n. கிறீச்செணல், வீறிடுதல், நோவுகாரணமான அலறல், அச்சங் காரணமான கதறல், உரத்த கூச்சல் ஒலி, (வினை.) கிறீச்சிடு, வீறிடு, அலறு, கதறு, பேய்ச் சிரிப்புச் சிரி, அடக்கமுடியாமல் சிரி.
shrievalty
n. மாவட்ட மணியப் பதவு, மாவட்ட மணிய ஆட்சியெல்லை, மாவட்ட மணியப் பதவிக்காலம், மாநகர் மணியப் பதவிக்காலம், அமைதிகாவலர் ஆட்சியெல்லை, அமைதிகாவலர் பதவிக்காலம், தேர்தல் முகவர் பதவி.
shrift
n. இரங்குவினை, சமய குருமாரிடம் பழிபாவங்களை வெளியிட்டுரைக்கை, குறையேற்பிற்குப் பின்னான பாவமன்னிப்பு.
shrill
a. கீச்சிடுகிற, ஒலி வகையில் காதைத் துளைக்கிற, குரல்வகையில் கூரிய, மன்றாடித் தொந்தரை செய்கிற, பிடிவாதமாக வற்புறுத்துகிற, (வினை.) (செய்.) கீச்சொலியிடு, வற்புறுத்திக் கெஞ்சி முறையீட செய், கீச்சொலியுடன் பாடு.