English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
shorthorn
n. குறை மோழை, குறுங்கொம்புக் கால்நடைவகை.
shortly
adv. விரைவிலேயே, அதிக காலங்கடப்பதற்கு முன்பே, சிறிதுநேரத்திற்கு முன்பே, சிறிது நேரத்திற்குள்ளாக, சுருங்கச் சொல்லுமிடத்து, சுருக்கமாக,சுறுக்கென்று.
shorts
n. pl. சல்லடம், குறுங்காற் சட்டை, தவிட்டுக் குறுநொய், தவிடும் மாக்கரடுஞ் சேர்ந்த கலவை.
shot
-1 n. துப்பாக்கிக் குண்டு, வெடிகுண்டு, சிதறுகுண்டு, இரவை குண்டுத்திரள், எய்வு, எறிவு, வேட்டெறிவு, குண்டிலக்கெறிவு, கணை இலக்கெறிவு, குறி இலக்கெறிவு, ஓர் எறிவுமுயற்சி, துப்பாக்கியின் ஒரு வெடிதீர்வு, உடற்பயிற்சிக்கான எறிகுறிகுண்டு, குண்டெறிவு, எறிகுண்டுவீச்சு, இலக்கெறிவு, குறி எறிவு, திடீர் ஊகம், தற்செயல்எறிவு, யோக எறிவு, திடீர் நிகழ்வு, திடீர் முயற்சி, பாய்எல்லை, பாய்தொல்லை, இயங்காற்றலெல்லை,இயங்காற்றல்தொலை, இலக்கு வேட்டாளர், இலக்குக்குறித் திறலாளர், உணர்ச்சியிழக்கச் செய்யும் மருந்துவகையில் ஒருநிறை வேளைஅளவு, மடக்கு, வெறிக்குடி வகையில் ஒரு மிடற்றளவு, ஒரு தடவை குடிப்பளவு, நிழற்படத்தின் ஒருவீச்சு, திரைப்படத்தின் ஒருவீச்செடுப்பு, நிலப்பாத்தி, (வினை.) குண்டு செறிவி, குண்டுகளால் எடைபெருக்கு.
shot-firer
n. சுரங்க வெடி தீர்ப்பாளர்.
shot-free
a. வேட்டுக்களிலிருந்து காப்பான, தீர்வையற்ற, வழக்கமான வரியற்ற, செலவில்லாத, தீங்கெதுவும் பெறாத.
shot-gun
n. வேட்டைத்துப்பாக்கி, சிறு குண்டுகளுக்கான வழவழப்பான நுண்துளைவாயினையுடைய துப்பாக்கி.
shot-range
n. வேட்டெல்லை, துப்பாக்கிக்குண்டின் பாய்வெல்லை.
shot-tower
n. இரவைக் குண்டு வார்ப்புருக்குக் கூண்டு.
shotproof
a. துப்பாக்கிக்குண்டுகளால் துளைக்கப்பட முடியாத.
shotted
a. இரவை திணிக்கப்பட்ட, குண்டெடைப் பளுவாக்கப்பட்ட.
shotting-iron
n. (இழி.) துப்பாக்கி.
should
v. 'சல்' என்பதன் இறந்தகாலம்.
shoulder
n. தோள், பறவையின் இறகடிப்பகுதி, தோள்மூட்டு, தோட்பட்டை, விலங்கின் தோட்பட்டை இறைச்சி, மலையின் முகட்டடிப்பகுதி, புட்டியின் தலைப்படிப் பகுதி, கருவியின் தலையடிப்பகுதி, சுமைதாங்கும் உறுப்பு, பொறுக்கும்பகுதி, (படை.) துப்பாக்கியைத் தோளில் சுமந்த போர் வீரர்நிலை, (வினை.) தோளினால் இடித்துத்தள்ளு, நெருக்குத்தள்ளு, முட்டிமோது, தோளினால் இடித்ததுத்தள்ளி, வழியுண்டாக்கிக்கொண்டு செல், சுமையைத் தோள்மேல் எற்றிக்கொள், பொறுப்பேற்றுக்கொள்.
shoulder-belt
n. வல்லவாட்டு, குறுக்குத் தோள்பட்டி, தோள்மீதிருந்து எதிர்ப்புற விலாவடியாகச் சுற்றியிடும் பட்டைக் கச்சை.
shoulder-blade
n. தோட்பட்டை எலும்பு.
shoulder-brace
n. கூன்முதுகை நிமிர்த்தற்கான அமைவு.
shoulder-joint
n. தோள்மூட்டு.
shoulder-knot
n. தோள் அணி ஒப்பனைப்பட்டிகை.
shoulder-pegged
a. குதிரை வகையில் தோட்பட்டையருகே விறைப்புடைய, தோளசைக்க முடியாத.