English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
shuck
n. உமி, புறத்தோல், ஓடு, புறத்தோடு, விதையுறை, (பெ.) தொலி உரி, மேலோட்டை உடை.
shudder
n. நடுக்கம், அதிர்வு, கிடுகிடுப்பு, திகிலாட்டம், வெறுப்பதிர்ச்சி, (வினை.) திடீர் நடுக்கமுறு, துணுக்குறு, திகிலுறு, வெறுப்பதிர்ச்சியுறு.
shuffle
n. உராய்வியக்கம், காற் சறுக்கியக்கம், தத்துநடை, அருவருப்பான போக்கு, சறுக்கு நடனம், நிலைபெயர்வு, இடப்பிறழ்வு, ஓயாப் படபடப்பு, கலைப்பீடு, சீட்டுக்குலுக்கீடு, இடைவிரவீடு, இடை உருவீடு, குழப்படி, ஒதுக்கீடு, தள்ளீடு, தட்டிக்கழிப்பு, இழுத்தடிப்பு, கைமாறாட்டம், திருகுதாளம், புரட்டு, (வினை.) சறுக்கித்தள்ளு, நகர்த்து, நிலை பெயர்த்து, இடமாற்றிக் கொண்டிரு, ஓயாது ஆட்டு, படபடத்துக்கொண்டிரு, நிலைபிறழ்ந்து கொண்டிரு, உரசிக்கொண்டு செல், தட்டித்தடவிச் செல், கலைத்துவிடு, நழுவவிடு, ஒதுக்கித்தள்ளு, மாற்றிவை, சொற்புரட்டுச்செய், மழுப்பிவிடு, நேர்விடை கூறாமல் கடத்திக்கொண்டுசெல், தட்டிக்கழி, இழுத்தடி, மாறாட்டஞ்செய், சீட்டுக்கட்டை அழித்துக்கலை, இடைவிரவு, இடையுருவு, இடையிடைக்கல, உருத்தெரியாமல் கலை, குழப்பியடி, கால்தேய்த்துக்கொண்டு நட, தத்தி நட, அருவருப்பாக இயங்கு, சறுக்குநடனம் ஆடு.
shuffle-board
n. காய்க்கட்ட ஆட்டம்.
shun
-1 v. தவிர்த்தொதுக்கு, வெறுக்துத் தள்ளு, அறவேவிலக்கு, விட்டுவிலக்கு, விட்டொழி.
shunless
a. (செய்.) தவிர்க்கக்கூடாத, விலக்கமுடியாத.
shunt
n. தடமாற்றம், கிளைப்பாதைக்கு மாறுதல், பக்கப்பாதைக்கு மாற்றப் பெறுதல், (மின்.) இடைகடத்தி, இரு மின்னோட்டங்களை இடைதடுத்திணைக்கும் மின்கடத்துகட்டை, (வினை.) புகைவண்டியைத் தடம் திருப்பு, மினனோட்டத்தைக் கிளைவழியில் திருப்பு, புகைவண்டி வகையில் ஒத்திவை, வாதத்தை அடக்கிவை, திட்டத்தை ஒதுக்கிவை, இடைநிறுதி வேறுபேச்சுக்கு மேற்செல், கடந்து செல், ஆள்வகையில் செயலற்றுப்போகச்செய்.
shunv 2
int. அட்டேன்சன் என்பதன் சுருக்க வழக்கு.
shut
v. மூடு, கதவினை அடை, வாயில் பொருத்தி வை, பலகணி சார்த்து, கண் பொத்திக்கொள், வாய் அடை, பெட்டி மூடிவை, துளை அடை, புழை அடைப்பிடு, துளைவாய் பொருத்து, மூடுநிலையில் இயக்கு, மூடு திசையாகத்தள்ளு, மூடிக்கொள், அடைப்புறு, அடைபடு, மூடக்கூடியதாயிரு, சார்த்து நிலையுடையதாயமை, வழிதடு, தடுத்கு நிறுத்து, நுழைவு தடு, கூம்புவி, பொருந்துவி, உறுப்புக்களை வகையில் ஒருங்கிணைவுறு, இடுக்குவி, இடுக்கப்பெற்று நசுங்குறுவி, சுற்றிவளை, நாற்புறமுங் கவி, முடிவுறுத்து, முடிவுறு.
shut-in
-1 n. வீட்டை விட்டகலமுடியாத ஏலா நோயாள், ஏலா உறுப்புக்குறை.
shut-out
a. போட்டி தவிர்க்கின்ற.
shutdown
n. தொழிறகள வகையில் அப்பொழுதைய கடையடைப்பு.
shutter
n. மூடுபவர், அடைப்பவர், மூடுவது, அடைப்பது, கதவு-பலகணிகளில் நழுவடைப்புச் சட்டம், இசைப்பெட்டியின் ஒலியடக்கிதழ், நிழற்படக் கருவியில் ஒளித்தடுக்குத் திரை, (வினை.) கதவு-பலகணிகளில் நழுவடைப்புச் சட்டத்தை இழுத்துவிடு, கதவு-பலகணிகளுக்கு நழுவடைப்புச் சட்டம் பொருத்து.
shuttle
n. ஒடக்கட்டை, நெசவுத்தறி நாடா, தையல்பொறியின் அடியிழை செருகுங் கருவி.
shuttle cock
n. நெட்டிப் பந்து.
shy
-1 n. திடீரென விலகல், வெட்டி விலகுதல், (பெ.) நாணமுடைய, அவைக்கூச்சமுடைய, அறைப்புடைய, ஒதுங்கும் இயல்புடைய, விலங்கு-புள் வகையில் அச்ச இயல்புடைய, எளிதில் கலவரமடைகிற, வெட்கமுறுகிற, புறங்காணப்படவிரும்பாத, பழகவிரும்பாத, ஒட்டாது விலகிச்செல்லும் இயல்புடைய, கூட்டத்துடன் தொடர்பு கொள்ள விரும்பாத, செயலில் மனமற்ற, தயக்க இயல்புடைய, எளிதில் காட்சிக்குக்கிட்டாத, கண்டெய்த முடியாத, பிடிபடாத, எளிதில் விளங்கிக்கொள்ள முடியாத, விருப்பமில்லாத, (இழி.) இழிந்தநிலையிலுள்ள, (வினை.) கண்டு கலவரமடை, கேட்டுக் திடுக்கிடு, மனக்கலக்கமடை.
Shylock
n. கல்நெஞ்சக் கடுவட்டியாளர், விட்டுக்கொடுக்கும் பண்பற்றவர்.
shyness
n. நாணம், கூச்சம், ஒதுங்குமியல்பு, தயக்க மனப்பான்மை.
si
n. (இசை.) இசைக்கேள்வியின் ஏழாவது சுரம்.
si quis
n. ஊர் வட்டக்கோயில் சமய குருபதவி அமர்த்தீட்டுக் காலப் பொது அறிவிப்பு.