English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
siamang
n. வாலில்லாப் பெருங்குரங்கு வகை.
Siamese
n. சயாம் நாட்டவர், சயாம் நாட்டுமொழி, (பெ.) சயாம் நாட்டைச் சார்ந்த, சயாம் நாட்டு மொழிசார்ந்த.
sib
a. இன உறவுடைய, நெருங்கிய தொடர்புடைய.
Siberian
n. சைபீரியா மாநிலத்தில் வாழ்பவர், சைபீரியக்குடியுரிமையாளர், (பெ.) சைபீரியப்பரப்புக்குரிய, சைபீரியாவில் வாழ்கிற.
sibilance
n. சீறொலி இயல்பு, 'உசு' ஒலிப்பண்பு.
sibilant
n. சீறொலி, 'உசு' என்னும் ஒலி, (பெ.) சீறொலி சார்ந்த, எழுத்து வகையில் சீறொலியுடைய.
sibilate
v. சீறொலி எழுப்பு.
sibling
n. ஒரு தாய்வயிற்றுப் பிறப்பாளருள் ஒருவர், ஒரே தாய்தந்தையுடையவர்களில் ஒருவர், ஒரே மூல மரபினரை உடையவருள் ஒருவர்.
sibs
n. pl. உடன்பிறப்புக்கள், உடன்பிறந்த ஆண்கள் அல்லது பெண்கள்.
sibship
n. இனவுறவுப்பண்பு, குருதித்தொடர்பு, பொதுமரபுத்தொடர்பு, ஒரு தாய் வயிற்றுக்குழு, ஒரே தாய் தந்தையினையுடையவர் குழாய்.
sibyl
n. தேவராட்டி, குறிகூறும் பெண், வருங்காலக் குறிகாரி, பழங்காலச் சூனியக்காரி.
sibylline
a. குறிகூறுந் தன்மையுடைய, பழங்காலத்தெய்வ உரை சார்ந்த, வருவதுரைக்கிற, மறைபுதிரான, விளங்காத, புரியாத.
sic
adv. அப்படியே, மேற்கோளாளர் கூறிய அதே நிலையில்.
sic volo sic jubeo
n. விலக்க முடியாத ஆணை.
Sicanian
n. சிசிலி தீவின் தொல்பழங்குடியினர், (பெ.) சிசிலி நாட்டுத் தொல்பழங்குடி சார்ந்த.
siccative
n. புலர்த்து பொடி, நெய்வண்ண ஓவியம் எளிதில் உலரக் கலக்கப்படும் பொருள், (பெ.) வண்ண ஓவிய நெய்யினை எளிதில் புலர்த்துந் திறமுடைய.
sice
-1 n. பகடையின் ஆறு, பகடைக்காயிலுள்ள ஆறு என்ற எண்.
Sicel
n. கிரேக்கருக்கு முற்பட கி.மு.11ஆம் நுற்றாண்டில் சிசிலித் தீவில் குடியேறிய பழங்குடி இனத்தினர், (பெ.) சிசிலித் தீவின் தொல்குடி சார்ந்த.
Siceliot
n. சிசிலித் தீவில் குடியேறிய பண்டைய கிரேக்கர்கள், (பெ.) சிசிலியில் குடியேறிய பண்டைய கிரேக்கர்களைச் சார்ந்த.
Sicilian
n. சிசிலித் தீவினர், (பெ.) சிசிலித்தீவு சார்ந்த, சிசிலித் தீவுக்குடிமக்கள் சார்ந்த.