English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
shave-hook
n. உலோகச்சுரண்டி, பற்றவைப்பதற்குமுன் உலோகத்தின் மேற்புறத்தைச் சுரண்டுவதற்கான கருவி.
shaveling
n. முண்டிதஞ் செய்துகொண்டவர், துறவி, சமயத்தொண்டில் ஈடுபட்ட மடத்துத்துறவி, மதகுரு.
shaver
n. அம்பட்டர், நாவிதர், சிரைப்பவர், மழிப்பவர், பணம் பறிக்கிற வணிகர், (பே-வ) பையன், பயல், சிறுவன்.
Shavian
a. ஜார்ஜ் பெர்னார்டுஷா (1க்ஷ்56-1ஹீ50) என்ற ஆசிரியருக்குரிய, ஷாவின் பாணியிலுள்ள.
shaving
n. மழித்தல், சீவல், மரச்சீவல் சுருளை.
shaving-brush
n. மழிப்புத் தூரிகை.
shaw
n. (செய்.) புதர்க்காடு, புதர்க்கும்பு.
shawl
n. சால்வை, போர்வை, பெண்டிர் தோளணிக்கவணி, (வினை.) சால்வை போர்த்து, கவணி அணி.
shawl-dance
n. போர்வை நடனம், சால்வையை அலைத்தாடும் ஆடல்வகை.
shawm
n. வழக்கற்றுப்போன இசைக்கருவி வகை.
shde-slip
n. பக்கச்சறுக்கல், ஓரச்சாய்வு, விலாத்தல், விமானத்தின் ஓரச்சாய்வியக்கம், தப்புப்பிள்ளை, முறைகேடாக்பிறந்த குழந்தை, நாடக அரங்கின் காட்சிமாற்றப்பக்க அறை, (வினை.) பக்கவாட்டில் சறுக்கு, விலாத்து, விமானவகையில் ஓரமாகச் சாய்ந்தியங்கு.
shea, shea-butter
n. தாவர வெண்ணெய் தரும் ஆப்பிரிக்க மரவகை.
sheading
n. வட்டகை, மேன் தீவின் ஆறு ஆட்சிப் பிரிவுகளில் ஒன்று.
sheaf
n. கற்றை, கட்டு, சிப்பம், கதிர்க்கட்டு, தாள்கட்டு, (வினை.) கற்றையாகக் கட்டு, சிப்பம் ஆக்கு.
sheaf-binder
n. கதிர்கட்டுக் கருவி.
shear
n. கத்தரிப்பு, (இய.) அழுத்தப் புடைபெயர் வளைவு, அழுத்தங் காரணமாகப் பொருளின் மெல்லடுக்குகளின் ஒத்திணைவான சறுக்குப் பெயர்ச்சி, (வினை.) கத்தரி, மயிர்வெட்டு, ஆட்டின் கம்பளி வெட்டு, தழைவெட்டு, துணி கத்தரி, தறித்துச் செப்பமாக்கு, வெட்டிச் சன்ன் செய், வேண்டாத மிகுதியைத் துண்டித்தெடு, துணி ஓரம் வெட்டி நீக்கு, கத்தரித்து உருவாக்கு, துண்டித்து அப்புறப்படுத்து, கவர்ந்துகொண்டு விடு, இழக்கச் செய், துறக்கச் செய், ஒட்டாண்டியாக்கு, வறிதாக்கு.