English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
shamrock
n. மூவிலை மணப்புல் வகை, அயர்லாந்து நாட்டு மூவிலை மணப்புல் வடிவச் சின்னம்.
shandrydan
n. கட்டைவண்டி, எளிய இருசக்கர வண்டி, ஆட்டங்கண்டுவிட்ட பழைய வண்டி.
shandy, shandygaff
n. புளிப்புத் தேறற் பானக் கலவை.
shanghai
v. வெறிமயக்க நிலைப்படுத்திக் கப்பலில் ஏற்றி அனுப்பு.
shank
n. முழங்கால், முழங்கால் எலும்பு, பறவைகளின் செங்குத்தான பகுதி, காலுறையின் முழந்தாட்பகுதி, பூக்காம்பு, இயந்திரத்தண்டு, தூணின் கம்பப்பகுதி, உருக்கிய உலோகங்கோரும் நெடுநீள் காம்புடைய அகப்பை, கருவியின் வெட்டிடைப்பகுதி, திறவுகோல் காம்பு, கரண்டிப்பிடி, நங்கூரத்தண்டு, தூண்டில் முள்ளின் காம்பு, புதைமிதியடியின் ஒடுங்கிய இடைப்பகுதி, குழிப்பந்தாட்டத்தில் பந்து விளிம்பேற்பு, (பே-வ) முனைக்கோடி, விளிம்பு, (வினை.) காம்புகைவுறு, கால்தெறிக்க ஓடிப்போ, குழிப்பந்தாட்டத்தில் பந்தினை மட்டை விளிம்பாலேற்று ஆடு.
shanked
a. காம்பினையுடைய, தண்டுவாய்ந்த, கோல்பகுதிஉடைய, காம்பு நைவினாற் பீடிக்கப்பட்ட.
shanny
n. பசுமை நிறக் கடல்மீன் வகை.
shant
v. (பே-வ) 'சல் நாட்' என்பதன் செய்யுள் அல்லது மரூஉ வழக்கு.
shantung
n. பரும்படிப் பட்டுத்துணி வகை.
shanty
-1 n. சிறுகுடில், குச்சுவீடு, சிற்றறை, ஏழ்மையான குடியிருப்பிடம்.
shapable
a. வேண்டிய உருவங் கொடுக்கப்படத்தக்க.
shape
n. வடிவு, உருவு, உருவரைத்தோற்றம், தோற்றம், உருக்காட்சி, காட்சியுரு, பிழம்புரு, மெய்யுருவம், புறவடிவம், வடிவவேறுபாடு, வகை மாதிரி, கோலம், ஒழுங்கமைப்பு, ஒழுங்கமைவான வடிவம், உருச்செப்பம், உருஒத்திசைவு, நடிகர் செயற்கை ஆக்கவடிவம், ஆவி உரு, செய்பொருளின் உருமாதிரிப் படிவம், தொப்பி முதலியவைகளுக்கு வடிவங்கொடுப்பதற்கான அச்சு, அச்சுவடிவங்கொடுக்கப்பட்ட வெண்பாகு-இழுது முதலியன, நடிகர் அணியும் அடைபஞ்சு, (வினை.) உருவாக்கு, படைத்தியற்று, வடிவங்கொடு, உருக்கொடு, உளதாக்கு, கட்டமை, புனை, வனை, படிவமாக அமை, விரும்பிய வடிவத்திற்குக் கொண்டவா, அறுதியான உருவங்கொள், பொருத்தமாக்கு, இணக்குவி, திட்டஞ்செய், சேர்த்தமை, திட்டமிடு, போக்கினை நெறிப்படுத்து, நாடித் திட்டமிடு, உள்ளக்கிழியில் உருவெழுது, மனத்தில் புனைந்துருவாக்கு, கற்பனை செய், ஒன்றன் உருவத்தை நினைத்துப்பார், உருவம் மேற்கொள், வடிவங்கொண்ட வளர், வருங்காலத்திற்கான அறிகுறிகள் காட்டு.
shapeless
a. வடிவற்ற, சரியான உருவமில்லாத.
shapely
a. வடிவமைந்த, ஒப்பிசைவான, அளவொத்த, மனத்திற்குகந்த உருவுடைய.
shaper
n. உருவங்கொடுப்பவர், வடிவங்கொடுப்பது, கடைசற்பொறி, வார்ப்புப்பொறி, சீவுளி, முத்திரைப்பொறி.
shard
n. வண்டாடை, வண்டின் சிறகுக்கு உறையாயமைந்துள்ள தாள் போன்ற மெல்லிதழ், பூந்தொட்டியடைக்கப்பயன்படும் ஒட்டுச்சில்லு.
share
-1 n. பங்கு, பங்கீட்டுக்கூறு, பங்காளியின் உரிமைப் பகுதி, கடமைக்கூறு, சரிகூறு, பெறுகூறு, உதவுபங்கு, கூட்டு விளைவில் வழங்கியுதவிய கூறு, பங்குரிமை, பங்குமுதல், முதலீட்டுடப்பங்கு, (வினை.) பங்கிடு, பகிர்ந்துகொடு, பங்கிட்டுக்கொடு, பங்கிட்டுக்கொள், பங்கினைப்பெறு, உடனிணைந்து பங்குகொள், கூட்டிற் பங்குபெற்றிரு, கூட்டாகப் பிறருல்ன் மேற்கொள்.
share-beam
n. கொழுக்கால், கொழுநுதி பொருத்தப்பெற்றுள்ள கலப்பைப் பகுதி.
share-capital
n. பங்கு முதலீடு, பங்கு மூலதனம்.
share-list
n. பங்குவிலைப்பட்டி, வெவ்வேறு வாணிகர்சங்கங்களின் பங்குகளின் நடப்புவிலை அட்டவணை.