English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
riding-habit
n. சவாரி உடை.
riding-lamp, riding-light
n. கப்பல் நங்கூர கால விளக்கு.
rifacimento
n. இலக்கிய மறுபடிவம்.
rife
a. பெருநடப்பான, மிகுதியான, பொருதுநடைமுறையான, வளமுறப்பெற்ற.
Riff
n. மொராக்கோ நாட்டிலுள்ள ரிப் மாவட்டத்தைச் சார்ந்த தொல்குடி மரபினர், (பெயரடை) மொராக்கோ நாட்டு மாவட்டத்தைச் சார்ந்த, மொராக்கோ நாட்டு மாவட்டத் தொல்குடி மரபைச் சார்ந்த.
riffle
n. தக்கப்பள்ளம், அரிகாரர் அரிப்பில் பொன்னைத் தேக்கிக்கொள்ளும் பள்ளம், (வினை)புரிகுழல்வடிவில் சுமையமை, சுழல் துப்பாக்கியாற் சுடு, தேடிப்பிடித்துக் கொள்ளையிடு, கொள்ளைப்பொருளாகக் கொண்டுசெல்.
rifle-bird
n. திண்பச்சை நிறமுள்ள ஆஸ்திரேலியப் பறவை வகை.
rifle-corps
n. விருப்பச் சேர்வாளரான சுழல் துப்பாக்கி வீரர்படை.
rifle-green
n. துப்பாக்கி வீரர் உடையின் திண்பச்சை நிறம், (பெயரடை) திண்பச்சை நிறமான.
rifle-grenade
n. சுழல் துப்பாக்கி வெடிக்கலம்.
rifle-pit
n. துப்பாக்கிவீரர்கள் மறைவாகநின்று சுடுவதற்கான குழி.
rifle-range
n. சுழல் துப்பாக்கிச் சுடும் எல்லை, வேட்டுக் களம், சுழல் துப்பாக்கிச் சுடும் பயிற்சிக்களம்.
rifle-shot
n. சுழல் துப்பாக்கி எல்லை.
rifleman
n. சுழல் துப்பாக்கி வீரர், பிரிட்டிஷ் துப்பாக்கிப் படைப்பிரிவின். உறுப்பினர்.
rifles
n. pl. சுழல் துப்பாக்கிப் படையினர்.
rift
n. நிலப்பிளவு, பாறை வெடிப்பு, பிளவு, வெடிப்பு., கீறல், மேகத்தில் இடைவெளி, (வினை) பிள, வெடி, பிளந்து இரு வேறாக்கு.
rift-valley
n. நிலவலயத் தோட்டின் உள் வீழ்வினால் ஏற்படும் செங்குத்தான பக்கங்களை உடைய பள்ளத்தாக்கு.
rig
-1 n. கூறமைவு, கப்பலின் பாய்மரம்-பாய் முதலியவற்றின் அமைப்புமுறை, ஆள்வகையில் ஆடைஅமைதி, பொருள் வகையில் புற அமைவுத்தோற்றம், (வினை) கப்பல் வகையில் பாய்-பாய்மரம்-கயிறு முதலியன கட்டு, தேவைத் தளவாடங்கள் கொண்டு ஒருங்குவி, வானுர்தியின் உறுப்புகள் வகையில் இணைப்பமைவு செய், ஆடை திருத்து, பொருத்தமற்ற அற்பப் பொருட்களையும் விரைந்து இட்டுக்கட்டி அமை.
rig-out
n. ஒப்பனை ஆடையணித்தொகுதி.
Riga
n. பால்டிக் கடற்பகுதியிலுள்ள துறைமுகம்.