English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
rice
n. நெற்பயிர், நெல், அரிசி, சோறு.
rice-beer
n. தோப்பி, அரிசித் தேறல்வகை.
rice-bird
n. சிட்டுக்குருவி வகை.
rice-paper
n. ஓவியர் தாள்வகை.
ricegrain
n. நெல்கணி, தனி அரிசி.
rich
a. செல்வமுடைய, இயற்கைவளஞ் செறிந்த, செழிப்பான, வளமார்ந்த, பெருவளம் தரத்தக்க, வளப்பமிக்க, விலை ஏறிய, உயர்தரமான, ஆடம்பரமான, விரிவாக ஒப்பனை செய்யப்பட்ட, வீறழகு வாய்ந்த, சத்துள்ள, ஊட்டமிக்க, பன்னலஞ்செறிந்த, முழு நிறைவான, பல்வளஞ்செறிந்த, பல்வகைப் பெருக்கமுடைய, வாய்ப்பு வள நலங்கள் செறியப்பெற்ற, பண்புவளமிக், தனிநலஞ் சிறந்த, குறிப்பிட்ட துறையில் வளமேம்பாடுற்ற, நிறவகையில் திண்ணிய, ஓசைவகையில் நிறைகனிவார்ந்த, மணவகையில் செறிவான, நிகழ்ச்சிகள் வகையில் கழி மகிழ்வூட்டுகிற, பொழுதுபோக்குப் பண்பு நிரம்பிய, நகைநலஞ் சிறந்த.
Richard
-1 n. ஏழை குறித்த சுட்டுப்பெயர்.
Richard(2), Richard Roe
n. இட ஒழிவு-வழக்கில் எதிர்வாதி குறித்த கூட்டுப்பெயர்.
riches
n. pl. செல்வவளம், சொத்து, உடைமை மிகுதி, செல்வநிலை,
richly
adv. முழுதும், முழுநிறைவாக தாராளமாக, செறிவாக, ஆடம்பரமாக, செல்வச் செழிப்போடு, வளநிறைவுடன்.
rick
-1 n. வைக்கோற் போர், தானியக்குவியல், வைக்கோல்-தானியம் முதலியன வைப்பதற்கான பட்டடை, (வினை) வைக்கோல் போரடைவு செய், தானியக்குவியல் செய், பட்டடைஎழுப்பு.
rick-stand
n. பட்டடைக்கால்நிலை, வைக்கோல்-தானியப்போர்களை நிலமட்டத்திலிருந்து உயர்த்துவதற்கான கற்றுண் தொகுதி.
rick-yard
n. வைக்கோள்-தானியப் பட்டடைக்களம்.
ricketiness
n. உறுதியின்மை.
rickets
n. குழந்தைக் கணை.
rickety
a. கணைச்சூட்டுக்குரிய, கணைச்சூட்டினாற் பீடிக்கப்பட்ட, ஆள்வகையில் தள்ளாடி விழுகிற, தட்டுமுட்டு வகையில் நன்கிணைக்கப்பெறாத, ஆட்டங்கொடுக்கிற, பொருள்கள் வகையில் உறுதியற்ற.