English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
restorationism
n. பாவி வகையில் இறைய சேர்ப்பு, இறுதிநிலை மன்னின அருட்பேறு, இறதிநிலை மன்னின அருட்பேற்றுக் கோட்பாடு, இறுதியில் எல்லா மனிதருக்கும் இறையருட்பேறு மீட்டும் வழங்கப்படும் என்ற கோட்பாடு.
restorative
n. நலமீட்பு மருந்து, நலிவு போக்கும் நல் உணவு, (பெயரடை) உடல் நலம் மீட்டளிக்கிற, நோய்நலிவகற்றி ஆக்கநலந் தருகிற, உடல்வலிமை தருகிற.
restore;
v. திருப்பிக்டகொடு, உடைமையாளரிடமே மீண்டும் ஒப்படை, உரிமை மீட்டளி, மதிப்பை மீட்டும் வழங்கு, மீண்டும் பதவியில் அமர்ந்து, பண்டைய நிலைக்குத் திரும்பக் கொண்டுவா, உடல்நலம் மீட்டும் பெறுவி, இயல்ட வலிமையினை மீட்டும் பெறச்செய், நோய் தீரப்பெறுவி, திரும்பவும் நிறுவு, மீண்டும் கையாட்சிக்குக் கொண்டுவா, பழைய இடத்திற்குத் திருப்பிக் கொண்டுசேர், பழைய இடத்தில் மீட்டும் வை, புதுப்பி, கட்டிடம்-ஓவியம்-சுவடி மூலபாடம் முதலிய வற்றின் வகையில் கூட்டித் திருத்தி மாற்றியமைத்தோ மேற்பூச்சுப்பூசியோ மூலநிலைக்குக் கொண்டுவர முயலு, வாசகத்தில் விடுபட்ட உறுப்பைப்புனைந்துமீட்டிணை, அழிபாடு-மரபற்றுப்போன விலங்கு ஆகியவற்றின் வகையில் மூலவடிவமாகக் கருதப்படும் நிலைமையைப் புனைந்துருவாக்கு.
restrain
-1 v. அடக்கிவை, கீழ்ப்படுத்து, கட்டுப்படுத்திவை, கட்டுப்பாட்டின் கீழ்க் கொணர், தடுத்துநிறுத்து, எல்லைக்குட்படுத்து, செயல்தடைசெய், வலிந்து அடக்கு, சிறைப்படுத்து,
restrained.
a. கட்டுப்பட்ட, தளைப்பட்ட, தன்னடக்கத்துடன் கூடிய, தன்னடக்கங் காட்டுகிற, கட்டுப்பட்ட உணர்ச்சியுடைய.
restrainedly
adv. தற்கட்டுப்பாட்டுடன்.
restraint
n. கட்டுப்பாடு, கட்டுப்பட்ட நிலை, கட்டுப்படுத்தும் ஆற்றல், கட்டுப்படுத்தும் ஆற்றற் கூறு, தடுத்து நிறுத்தும் ஆற்றல், தடை, மருத்துவப்பேணகத்தின் தடைக்கட்டு, தடுப்புக்காப்பு,தடைவரம்பு, கட்டுப்பாட்டெல்லை, வன்தடைமுறை, உரிமைத்தடை, உரிமைக்கட்டுப்பாடு, தன்னடக்கம், மொழிநடை-பேச்சு-கலைத்துறை ஆகியவற்றின் வகையில் தற்கட்டுப்பாடு காரணமான திட்பச்செறிவு.
restrict
v. வரையறைப்படுத்து, எல்லைக்குட்படுத்து, அடைத்துவை.
restriction
n. வரையறை, தடைக்கட்டு, எல்லைக்க கட்டுப்பழட, தடைவரம்பு.
result
n. பின்விளைவு, விளைபயன், பயன்முடிவு, (கண) தீர்வுமுடிவு, (வினை) விளைவுறு,. உண்டாகு, பயணில்வந்து முடிவுறு, பலனாக அமை, தீர்வுவிடையாக அமை.
resultant
n. (இய) கூட்டு விளைவாக்கம், ஒரு புள்ளி மீதியங்கும் பல்திசைப் பல்லாற்றல்களின் மொத்த விளைவான ஒருதிசைப்பட்ட ஓராற்றல் விளைவு, இணைவாக்க விளைவு, (பெயரடை) பயனான, விளைவான, இணைவாக்க விளைவான, (இய) கூட்டு விளைவாக்கமான.
resume
-1 n. பொழிப்பு, தொகுப்பு, சுருக்கம் சாரம்.
resummons
n. pl. சட்ட முறைப்பட்ட மறு அழைப்பாணை.
resumption
n. மறு தொடக்கம், புதுத்தொடக்கம, விட்ட இடத்திலிருந்து மீண்டுந் தொட்ங்குதல், புதுப் பொறுப்பேற்பு.
resupinate
a. (தாவ) இலைகள் வகையில் தலைகீழான, அடிப்பகுதி மேலேயுள்ள.
resurge
v. மீட்டெழு, மீட்டெழுவி, உயிர்த்தெழு.
resurgence
n. மீட்டெழுச்சி, புத்தெழுச்சி, புத்துயிர்ப்பு, புத்தாக்கம்.
resurgent
a. மீண்டெழுகிற, புத்தெழுச்சி வாய்ந்த, புத்தாக்கமுடைய, புத்துயிர் பெற்றெழுகின்ற.
resurrect
v. கல்லறையிலிருந்து எடு, புதைகுழியிலிருந்து தோண்டி எடு, மீண்டும் பழக்க வழக்கம் புதுப்பி, மீண்டும் நினைவாற்றலைப் புதுப்பி.
Resurrection
-1 n. இயேசுநாதர் திருமீட்டெழுச்சித் திருநாள், இயேசுநாதர் திருமீட்டெழுச்சி.