English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
redblooded
a. செங்குருதி வாய்ந்த, உயிர்ப்பாற்றல் நிறைந்த, பண்படாத.
redcap
n. படைத்துறைக் காவல் துறைவர், ஸ்காத்லாந்து நாட்டு அரண்மாளிகைப் பேய்.
redcoat
n. பிரிட்டன் நாட்டுப் படைவீரன்.
redden
v. சிவப்பாக்கு, சிவப்பாகு,
reddish
n. சற்றே சிவப்பான.
reddle
n. செங்காவி, (வினை) செங்காவி வண்ணமிடு.
reddy
a. சிறிது சிவப்பான, சிவப்பு மயமான.
rede
n. அறிவுரை, கருத்துரை, துணிவு, திட்டம், கதை நிகழ்ச்சி, (வினை) அறிவுரை கூறு, கருத்து உரை.
redeem
v. விட்டுக்கொள், திரும்ப விலைக்கு வாங்கு முயன்று திரும்பப்பெறு, இழந்ததை மீண்டும் எய்துவி, பேசிச்சரிப்படுத்திப்பெறு, பணங் கொடுத்து விடுதலை பெறுவி, பவ்ங் கொடுத்து உயிர் காப்பாற்று, விடுவி, தப்புவி, காப்பாற்று, இடர் தடுத்தாட்பொள், பழி தவிர்த்து ஆள், பழியிலிருந்து செய், வாக்குறுதி முதலியவற்றை நிறைவேற்று, இழப்பீடு செய், சரியீடுசெய், குற்றவகையில் எதிரீடு செய்து அமை, குறைநிரப்பு.
redemption
n. மீட்பு, இயேசுநாதரின் பழி தடுத்தாளுந் திறம், இடர்காத்தளிக்குஞ் செய்தி, உரிமை விலைப்பணம், கழுவாய், பரிகாரம்.
redemptive
a. மீட்டளிக்கிற, மீட்டளிக்க உதவுகிற, கழுவாய் செய்கிற.
redeployment
n. தொழிற்சாலையில் விளைவுபெருக்கம் நாடிய புறவாய்ப்புநலச் சீர்திருத்த வளம்.
redhead
n. செந்தலையர், செம்மயிர் உடையவர்.
redif
n. துகிய படைத்துறைச் சேமப்பிரிவு.
redintegrate
n. முழுமை மீட்டளி, திரும்பவும் முழுநிறை வடிவுக்குக்கொணர், நிறைநிலை புதுப்பித்தளி.
redistribution
n. தேர்தல் தொகுதி யெல்லைமாற்றியமைத்தல், தேர்தல் வாக்குரிமை நிலைமாற்றம்.
redness
n. செந்நிறம், சிவப்பு.
redolence, redolency
முனைப்பான மணம், இனிய வாசனை.
redolent
a. முனைத்த மணமுடைய, தொடர்புண்மை நினைப்பூட்டுகிற.
redouble
n. ஆற்றலிரட்டிப்பு, தொகைப்பெருக்கம், அளவுப் பெருக்கம், விசைப்பெருக்கம், சீட்டாட்டத்தில் இரட்டிப்பின் இரட்டிப்புக் கேள்வி, (வினை) இருமடியாக்கு, ஆற்றல் இரட்டி, தொகை பெருக்கு, உருப்பெருக்கு, அளவுபெருக்கு, விசைபெருக்கு, சீட்டாத்தில் இரட்டித்த கேள்வியின் இரட்டிப்புக் கேள்வி கேள்.