English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
plica
n. தோல் மடிப்பு, சவ்வின் மடிவு, நோய் காரணமான தலைமயிரின் சடைப்பிடிப்பு.
plicate
a. (தாவ., வில., மண்.) மடிப்புடைய, விசிறிபோல மடிந்துள்ள.
plication
n. மடிப்பு, மடித்தல், மடிவு, மடிந்துள்ள நிலை.
pliers
n. pl. இடுக்கு குறடு, இடுக்கி, சாமணம்.
plight
-1 n. வாக்குறுதி, மன உறுதிப்பாடு, (வினை.) வாக்குக்கொடு, உறுதியளி, சூளெடுத்துக்கொள், பிணை நில், ம உறுதிப்பாடு செய்.
plight(2)
n. நிலைமை, நெருக்கடியில்.
plim
v. (பே-வ) வீங்கு, புடைப்புறு.
plimsolls
n. pl. மலிவான ரப்பர் அடித்தோலுடைய புதை மிதியடி வகை.
plinth
n. தூணின் பீட அடி, மர அடிக்கட்டை, நிலத்தையடுத்து உந்தி நிற்கும் சுவர்ப் பகுதி.
plinthite
n. சிவப்புநிறக் களிமண் வகை.
Pliocene
n. (மண்.) நில அடுக்கின் மூன்றாவது பிரிவின் புத்தம் புதிய பிரிவு, (பெ.) (மண்.) நில அடுக்கின் மூன்றாவது படிவின் புத்தம் புதிய பிரிவு சார்ந்த.
plly
a. (பே-வ.) இணக்கமான, நட்பான.
plod
n. கடும் உழைப்பு, கடு நடை, (வினை.) கடு முயற்சியுடன் உழை, அடிமையாக உழை, இடைவிடாது நட.
plombe
a. அலுவலக முத்திரையிடப்பட்ட.
plop
n. தொப்பென்ற ஒலி, தொப்பென்ற ஒலியோடு நீரில் விழுதல், (வினை) தொப்பென்ற ஒலியோடு விழச்செய், தொப்பென்று விழு, (வினையடை.) தொப்பென்ற ஒலியோடு.
plot
n. மனையிடம், நிலக்கூறு, கதையமைப்பு, கதையின் நிகழ்ச்சிக்கூறு, சூழ்ச்சி, மறைசதி, மறைபொறித்திட்டம், (வினை.) மனைப்படம் எழுது, சதித்திட்டமிடு, மறைசூழ்ச்சிசெய்.
plough
n. ஏர், கலப்பை, உழுத நிலம், கலப்பை போன்றுள்ள கருவி வகைகளில் ஒன்று, தேர்வில் மாணவனைத் தள்ளிவிடுதல், (வினை.) உழு,சாலிடு, புரட்டு, நிலம்பறி,கிளறு, கலப்பையைக் கொண்டு மேற்புறத்தைக் கீறு, கல்லியெறி, சால்வரியிடு, நெற்றியில் திரைவிழச் செய், மிகு உழைப்போடு முன்னேறிச்செல், கப்பல் வகையில் தண்ணீரைக் கிழித்துக்கொண்டு செல், வழி உண்டுபண்ணிக் கொண்டுசெல், தேர்வில் மாணவனைத் தோல்வியுறச்செய்.
plough-beam
n. ஏர்க்கால்.
plough-boy
n. உழவுக் கால்நடைகளை ஓட்டுபவன், உழவுக் கால்நடைகளை நடத்துபவன்.
plough-land
n. உழுது பண்படுத்துதற்குரிய நிலம், (வர.) நிலப்பரப்பளவு அலகு, ஓர் ஆண்டு காலத்தில் எட்டு எருதுகளைக் கொண்டு உழக்கூடிய பரப்புளள நிலம், இங்கிலாந்தின் வடக்கு-கிழக்குப் பகுதிகளில் வரிவிதிப்பு நில அளவின் அலகு.