English Word (ஆங்கில வார்த்தை)
									Tamil Word (தமிழ் வார்த்தை)
									
								 
								
								plumbeous
								a. ஈயஞழூ சார்ந்த, ஈயம் போன்ற, ஈயம் பூசிப்பளபளபாக்கப்பட்ட.
								
							 
								plumber
								n. ஈயக்கம்மியர், ஈயம்-துத்தநாகம்-வெள்ளீயம் முதலியன கொண்டு குழாய்-தொட்டி முதலியவற்றைப் பொருத்திச் செப்பனிடுபவர்.
								
							 
								plumbery
								n. ஈயக்கம்மிய வேலை, ஈயக்கம்மியர் தொழிற்சாலை.
								
							 
								plumbic
								a. (வேதி.) ஈயங்கலந்த, நோய்க்குண ஆய்வு வகையில் ஈயம் இருப்பது காரணமான.
								
							 
								plumbiferous
								a. ஈயங் கிடைக்கிற, ஈயங் கொண்டுள்ள.
								
							 
								plumbing
								n. செங்குத்தாக்குதல், ஈயத்தொழில், ஈயக்குழாய் முதலியன பழுது பார்ப்பவர் வேலை.
								
							 
								plumbism
								n. ஈய நச்சூட்டு.
								
							 
								plumbless
								a. ஆழம் பார்க்க முடியாத.
								
							 
								plume
								n. இறகு, ஒப்பனை இறகுச்சூட்டு, தலைக்கவசம்-தொப்பி ஆகியவற்றின் இறகுக்குஞ்சம், குதிரைமயிர்ச் சூட்டு, இறகு போன்ற உறுப்பு, இறகு போன்ற உறுப்பு வளர்ச்சி, (வினை.) இறகுகளைக் கோதிவிட்டுக்கொள், இறகு செருகு, இரவல இறகுகளைக் ஒப்பனை செய்துகொள், அற்பச் செய்திபற்றிப் பெருமைப்பட்டுக்கொள், போலிப் பண்பு வகையில் பெருமைகொள்.
								
							 
								plumelet
								n. முளைக்குருத்து, சிறுகொண்டை, சிகை முடி.
								
							 
								plummer-block
								n. (இய.) சுழலும் நடு அச்சினைத் தாங்குவதற்கான உறையுடன் கூடிய உலோகச்சட்டம்.
								
							 
								plummet
								n. தூக்குநுல், தூக்குநுற் குண்டு, ஆழம் பார்ப்பதற்கான கருவியின் ஈயக்குண்டு, அழுத்துசுமை, தடங்கலாயிருக்கும் பாரம், தக்கையை நேர்நிறுத்தும் பொருட்டுத் தூண்டிற் கயிறுடன் இணைக்கப்படும் பளு.
								
							 
								plummy
								a. உலர்ந்த கொடிமுந்திரிப் பழங்கள் சார்ந்த, கொடிமுந்திரிப் பழங்கள் மலிந்த, வளமான, நல்ல, உகந்த.
								
							 
								plumose
								a. இறகு போன்ற, இறகுகளையுடைய.
								
							 
								plump
								-1 a. கொழு கொழுத்த, சதைப்பற்றுள்ள, உருண்டுதிரண்ட, முழுநிறைவான, (வினை.) கொழுக்கப்பண்ணு, கொழுப்பேறு, உருட்சி திரட்சியுறு, புடைத்து வீங்கு, பருமனாகு.
								
							 
								plumper
								-1 n. வாய்த்திரள் தக்கை, குழிவிழுந்த கன்னங்களை உருட்சியாக்கும் பொருட்டு வாயில் அடைத்து வைத்துக் கொள்ளப்படும் பந்து அல்லது வட்டுப் போன்ற தக்கைப் பொருள்.
								
							 
								plumpness
								n. மொழுமொழுத்த தன்மை, உருண்டு திரண்டிருக்கை.
								
							 
								plumule
								n. முளைக்குருத்து, பறவைகளின் சிறு மென்தூவி.
								
							 
								plumy
								a. இறகு போன்ற, இறகு மூடிய, மென் தூவிகள் போர்த்த, பெரிய இறகுகளால் ஒப்பனை செய்யப்பட்ட
								
							 
								plunder
								n. கொள்ளை, சூறை, சூறைப்பொருள், கொள்ளை ஆதாயம், (வினை.) கொள்ளையிடு, சூறையாடு, போரில் பறி, திட்டமிட்டுப் பறி, பிறர் பொருளைக் கையாடு.