English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
plenary
a. முழு நிறைவான, முழு முடிவான, மட்டுமடங்கற்ற.
plenipotentiary
n. முழு அதிகாரம் பெற்ற தூதர், முழு அதிகாரம் பெற்றவா, (பெ.) முழு நிறை அதிகாரம் வாய்ந்த.
plenitude
n. முழுமை, நிறைவு, முழுநிறைவனம்.
plenteous
a. (செய்.) மிகுதியான, ஏராளமான.
plentiful
a. மிகுதியான, நிறைந்த, திரளான.
plenum
n. பொருள் நிறை இடைவெளி, நிறை பேரவை.
pleonasm
n. (இலக்.) மிகைப்பாட்டு மொழி, கூறியது கூறல்.
plesiosaurus
n. மரபற்றுப்போன கடல்வாழுங் குறுவால் நீள்கழுத்துடைய ஊரும் விலங்குவகை.
plethora
n. குருதிமிகை, மிகுநிறைவு.
pleura
n. மார்புவரி, உள்ளுறுப்புக்களைக் கவிந்து போர்த்த பால்குடி உயிரின் மார்பு உள்வரிச் சவ்வுகள் இரண்டில்ஒன்று, தண்டெலும்பிலா விலங்குகளின் உடற்புறத்தோற்பகுதி.
pleurisy
n. நுரையீரற் சவ்வின் அழற்சி.
pleurodynia
n. மார்புத்தசை வாதத்தால் ஏற்படும் விலா வலிநோய்.
pleuropneumonia
n. மார்பு உள்வரிச் சவ்வழற்சியுடன் கூடிய குலைக்காய்ச்சல், கொம்புடைய கால்நடைகளிடையே பரவுந் தொற்று நோய்வகை.
pleximeter
n. தட்டுக்கொட்டுமானி.
plexor
n. (மரு.) வர்மத் தட்டுச் சிகிச்சை முறையிற் பயன்படுத்தப்படுஞ் சிறு சுத்தி.
plexure
n. குறுக்கு நெசவு.
plexus
n. பின்னல்வேலை, பின்னலமைப்பு, சிக்கல், குழப்பம்.
pliable
a. நெகிழ்வுடைய, ஒசிவுடைய, எளிதில் வளையத்தக்க, எளிதில் மடக்கத்தக்க, எளிதில் வசப்படத்தத்தக்க, செல்வாக்கிற்கு இசையத்தக்க, எதற்கும் ஒத்திசைவான.
pliant
a. தொய்வான, எளிதில் வளைகிற, ஒசிவான, செல்வாக்கிற்கு எளிதில் விட்டுக்கொடுக்கிற, எளிதாக வசப்படுகிற, ஒத்திசைந்து போகிற.