English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
pleasant
a. மகிழ்வளிக்கிற, மனத்திற்கு உகந்த, உணர்ச்சிகளுக்கு இயைந்த, புலன்களுக்கு இணக்கமான, பூரிக்கிற.
pleasantness
n. இனிமை, திருப்தி.
pleasantry
n. கேலிப்பேச்சு, விளையாட்டுப் பேச்சு, நகைச்சுவை நையாண்டி.
please
v. மகிழ்வி, மனத்திற்கு உகந்ததாயிரு, விரும்பு, ஏற்றதாகக் கருது, திருவுளங் கொள்ளுவி, திருவுளங்கொள்ளு.
pleasing
a. மகிழ்வூட்டுகிற, திருப்தியளிக்கிற.
pleasurable
a. இன்பந் தருகிற, மகிழ்ச்சியளிக்கிற.
pleasure
n. இன்பம், இன்பநுகர்வு, மனமகிழ்ச்சி, புலனுகர்வு சார்ந்த மகிழ்ச்சி, விருப்பம், (வினை.) இன்பமளி, மனமகிழ்வுகொள்.
pleasure-boat
n. இன்பப் படகு.
pleasure-ground
n. களியாட்டக் களம்.
pleat
n. மடிப்புவரை, (வினை.) மடிப்பு உண்டாக்கு.
plebe
n. (பே-வ) அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கடற்படையில் அல்லது படைத்துறைக் கல்லுரியில் கீழ்க்கோடிப்படிநிலை உறுப்பினர்.
plebeian
n. பண்டைய ரோமாபுரியில் பொதுமக்களில் ஒருவர், (பெ.) இழி பிறப்புடைய, பொதுமக்களைச் சார்ந்த, இழிந்த, நயநாகரிகன்ற்ற, தாழ்ந்த தரமான.
plebiscite
n. (வர.) ரோமப் பொதுமக்கள் தனிமன்றத்தில் நிறைவேறிய சட்டம், நெருக்கடிக் கட்டங்களில் வாதத்துக்குரிய செய்திமீது குடிமக்கள் அனைவரின் நேர்முக வாக்கு, சமுதாயச் செய்தகளிற் பொதுக்கருத்து அறிவிப்பு.
plectrum
n. நரப்பிசைக்கருவி வகையில் பயன்படுத்தப்பெறும் இறகடிக்கோல்.
pledge
n. பிணையம், பிணையப்பொருள், பிணையாயிருக்கும்நிலை, ஈடு, அடகுப்பொருள், மரபுச்சின்னம், குழந்தை, அன்பின் அறிகுறி, ஆதரவின் சின்னம், வருங்குறிச் சின்னம், நலம் விழைவிசைவு, பிறர்நலங் கருதிக் குடிநீர் வகை அருந்துதல், உறுதிச்சொல், வாக்குறுதி, மது நிறுத்த ஒப்பந்த உறுதி, அரசியல் தலைவரின் செயலுறுதிச் சூளுரை, (வினை.) பிணையமாக வை, அடகு வை, நாணயத்தை முன்வைத்து உறுதியளி, நலம் விழைவறிகுறியாக அருந்து.
pledgee
n. அடகு வாங்குகிறவர், அடைமானப் பொருள்களை அல்லது பிணையப்பொருள்களை வைத்திருப்பவர்.
pledget
n. மருத்துப் பட்டைத்துணி.
Pleiad
n. அறிஞர் எழுவர் குழு.
Pleiads, Pleiades
ஏழு விண்மீன்கள் அல்ங்கிய கார்த்திகை விண்மீன் குழு, ஏழு விண்மீன்கள் குழு.
pleistocene
n. (மண்.) நாளுழியின் முன்னுழி, உலகூழிகளில் கடையூழிக்குரிய ஈற்றயல்அடுக்கு, (பெ.) (மண்.) புத்துயிருழியின் ஈற்றயற்பகுதி சார்ந்த.