English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
plate-rack
n. தண்டயப்பலகை, உலோகக்கலன் ஏந்துசட்டம்.
plateau
n. மேட்டுநிலம், நிலமேடு, பூவேலைப்பாடுடைய தட்டம், அணியொப்பனைப் பட்டயச் சின்னம், தட்டை முகட்டினையுடைய பெண்டிர் தொப்பி.
platelayer
n. தண்டவாளம் பழுதுபார்க்குநர்.
platen
n. அச்சகத்தில் அச்சுத்தாள் அழுத்துந் தகட்டுப்பாளம், தட்டச்சில் தாள் அழுத்துந் தகடு.
plater
n. ஈயம் பூசுபவர், வெள்ளித்தகடு பொதிபவர், கப்பல் கட்டும் தொழிலில் மேல் தகட்டுப்பாளம் பொருத்துபவர்,பட்டிப்புரவி, பட்டயச்சின்னங்களையே முன்னிட்டுப் பந்தியத்தில் கலந்து கொள்ளும் கீழ்த்தரப் பந்தயக்குதிரை.
platform
n. பேச்சுமேடை, தாளமேடை, கலையரங்கமேடை, தனித்துறை மேடையரங்கம், மேடையில் அமர்ந்திருப்பவர், மேடைத்தளம், மேட்டுநிலம், தொடர்வண்டி நிலையத்தின் பரப்பு மேடை, பீரங்கிமேடு, பாதையோர நடைமேடை, மேடைப்பேச்சுத்துறை, கட்சிக்கோட்பாட்டடிப்படை, கட்சித்தேர்தலறிவிப்பு, விவாத அடிப்படை, (வினை.) மேடைமீது வை, மேடைமீது தோன்று, மேடைமீது பேசு, மேடையமைத்துக்கொடு, திட்டமமை.
plating
n. முலாம்பூசுதல், தங்கப்பூச்சு, வெள்ளிப்பூச்சு, தகடூட்டுதல், பரிசிற்கலன் பந்தயம்.
platinic
a. நாலிணைதிற விழுப்பொன் சார்ந்த.
platiniferous
a. விழுப்பொன்னடங்கிய.
platinize
v. விழுப்பொன் பூச்சிடு.
platinoid
n. செம்பு-துத்தம் முதலிய உலோகங்கள் அல்ங்கிய கலவை, விழுப்பொன்னுடன் இணைந்து கிடைக்கும் உலோகம்.
platinotype
n. விழுப்பொன் மைத்தூளினாற் செய்யப்படும் நிழற்பட அச்சுமுறை.
platinous
a. ஈரிணைதிற விழுப்பொன் சார்ந்த.
platinum
n. விழுப்பொன், அணு எடை ஹ்க்ஷ் கொண்ட விலைமிக்க ஒண் சாம்பர்நிற உலோகத்தனிமம், (பெ.) விழுப்பொன்னாலான, விழுப்பொன்னுக்குரிய.
Platinum jubilee
பவள விழா
platitude
n. பயனில் பெருங்கூற்று, வெற்றுரை.
platitudinarian
n. வறுமொழியாளர், (பெ.) வெற்றுரையுடைய.
platitudinize
v. வெற்றாரவாரவுரை கூறு, மேலீடான பொதுநிலை மெய்ம்மைகளையே கூறு.
Platonic
a. பிளேட்டோ (கி.மு.42ஹ்-34ஹ்) என்ற பண்டைக் கிரேக்க அறிவருக்குரிய, பிளேட்டோவின் கோட்பாடு சார்ந்த, கதியலான, கோட்பாடு நிலைப்பட்ட, ஆன்ம ஈர்ப்புடைய, சொல்லளவான, செயல்சாராத.