English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
planisher
n. தட்டையாக்குங் கருவி.
planisphere
n. கோளத்தட்டமைவு, கோளப்பகுதியைத் தட்டையான தளத்தில் படிவித்துக்காட்டும் அமைவு.
plank
n. பலகை, அரசியல் கோட்பாட்டுத்திட்டம், கொள்கைத்திட்டம், (வினை.) பலகைகொண்டு தளம் பாவு, பலகையால் மூடு, பலகை இணைத்தமை.
planking
n. பலகைபாவுதல், பலகையிணைப்பு, பலகைபொதிவு, பலகைத்தொகுதி, பலகைகளாலான வேலைப்பாடு.
plankton
n. (உயி.) மிதவியம், கடல் முதலிய நீர்ப்பரப்பின் மேல்-அடித்தள ஆழங்களில் உள்ள மிதவை நுண்ம உயிரினத் தொகுதி.
planoconcave
a. கண்ணாடிவில்லைகள் வகையில் ஒருபுறம் தட்டையும் ஒருபுறம் உட்குழிவும் ஆன.
planoconvex
a. கண்ணாடிவில்லை வகையில் ஒருபுறம் தட்டையும் ஒருபுறம் மேற்குவிவும ஆன.
planometer
n. தளப்பரப்பு அளக்கப் பயன்படும் வார்ப்பிரும்புத் தகடு.
plant-louse
n. செடிப்பேன்.
Plantagenet
n. (வர.) இரண்டாம் ஹென்றி முதல் மூன்றாம் ரிச்சர்டு வரையுள்ள பிரிட்டிஷ் மன்னர் குடிமரபு.
plantain
-1 n. பறவைத் தீனியாகப் பயன்படும் விதைகளையுடைய பேரிலைக் குறுஞ்செடிவகை.
plantar
a. (உள்.) உள்ளங்காலிற்குரிய.
plantation
n. தோப்பு, பண்ணை, பருத்திவிளை, புகையிலைத் தோட்டப்பண்ணை, (வர.) குடியேற்றம், குடியேறுகை.
planter
n. பண்ணையாள், பண்ணையார், (வர.) அயர்லாந்தில் ஆங்கிலக் குடியேற்றத்தார், குடியகற்றப்பட்டவர் நிலத்தில் குடியிருப்புப்பெற்றவர், நடவு இயந்திரம்.
plantigrade
n. உள்ளங்கால் பதித்து நடக்கும் விலங்கினம், உள்ளங்கால் பரப்பு முழுவதும் நிலத்தில் ஒருங்கே படியவைத்து நடக்கும் மனிதர், (பெ.) உள்ளங்கால் பதித்து நடக்கிற, உள்ளங்கால் பரப்பு முழுதும் பதித்து நடக்கிற.
plantocracy
n. பண்ணையார் ஆட்சி.
planxty
n. மூவகைச் சந்தப்போக்குடைய அயர்லாந்து இசைப்பாங்கு.
plaque
n. அணிகிளர் பலகை, பெயர்ப்பொறி கல், பதக்கவில்லை, (மரு.) வீக்கத் தழும்பு.
plash
-1 n. சதுப்புநிலக் குளம், குட்டை