English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
plagiarist
n. எழுத்தினைக் களவாடுபவர், கருத்தினைக் களவு செய்பவர்.
plagiarize
v. எழுத்துத்திருட்டுச்செய், கருத்தினைத் திருடு.
plagiary
n. எழுத்துத் திருட்டு, கருத்துத்திருட்டு, எழுத்தினைக் களவாடுபவர், கருத்தினைத் திருடுபவர்.
plagiocephalic
a. மூளையின் முன்னும் பின்னும் வேறு வேறு பக்கமான பாதிகளில் வளர்ச்சியடைந்துள்ளன.
plagioclastic
a. கனிப்பொருளில் சாய்வெட்டு வரையுடைய.
plagiostome
n. சாய்வரை வாயுடைய மீன்வகை.
plague
n. கொள்ளைநோய், ஒழுக்கமுறை அழிகேட்டுக்குரிய செய்தி, தொல்லை, தொந்தரவு, (வினை.) கொள்ளை நோய்க்கு ஆட்படுத்து, தொல்லையூட்டு, தொந்தரவு கொடு.
plague-spot
n. கொள்ளைநோயின் வீக்கங்காணுமிடம், ஒழுக்க அழிகேட்டிற்கு மூலகாரணம், பழிகேட்டிற்குத் தொடக்கமான பகுதி.
plaguesome
a. தொந்தரவு தருகிற, தொல்லையளிக்கிற.
plaguy
a. (பே-வ) தொல்லையூட்டுகிற, பெரிய அளவினதான, (வினையடை.) (பே-வ) தொல்லையூட்டும் முறையில், பெரிய அளவில்.
plaice
n. தட்டை உணவுமீன் வகை.
plaid
n. கம்பளச் சால்வை வகை, வண்ணப்பட்டையிட்ட கம்பளித் துணிவகை, புற ஆடை, வட ஸ்காத்லாந்து நாட்டுப் புற ஆடைக்குரிய துணி.
plaided
a. கம்பளித் துணி வகையாலான, கம்பளச் சால்வையணிந்த, வடஸ்காத்லாந்து நாட்டுப்புற ஆடையணிந்த.
plain
-1 n. சமநிலம், சமவெளி, புறவெளி, திறந்த இடம், தாழ்நிலம், ஆற்றுப்படுகை, (பெ.) தௌிவான, எளிய, எளிதில் உணரக்கூடிய, சிக்கலற்ற, வண்ணந்தோய்விக்கப்பெறாத எளிமை வாய்ந்த, பகட்டற்ற, உயரின்ப வாய்ப்பு வளங்களற்ற, கரவடமற்ற, ஒளிவுன்றைவற்ற, நேரடியாகப் பேசுகிற, நாட்டுப்புற நடையுடை தோற்றமுடைய, அழகற்ற, கவர்ச்சியற்ற, மிகப்பொதுப்படையான தோற்றம்வாய்ந்த, (வினையடை.) தௌிவாக.
plain-chant
n. மாறுபாடில்லா ஒற்றைப்பண்ணிசைப்பு.
plain-song
n. இடைக்காலத் திருக்கோயிலில் தனிக்குரல் நேர் பண்ணிசைப்பு, பலர் இணைந்து பாடுதற்குரிய இசை.
plain-spoken
a. மறையாது பேசுகிற, வெளிப்படையாகக் கூறப்பட்ட.
plaint
n. (சட்.) குற்றச்சாட்டு, முறையீடு, (செய்.) குறையீடு புலம்பல்.
plaintiff
n. முறையீட்டாளர், வாதி, வழக்காடி.
plaintive
a. துயரார்ந்த, அவலமிக்க, சோகமான.