English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
pistole
n. ஐரோப்பிய தங்க நாணயம். 1க்ஷ் ஆங்கில வெள்ளி மதிப்புடைய ஸ்பானிய தங்க நாணயம்.
pistolgraph
n. உடனடி நிழற்படமெடுப்புக்கான முற்காலக் கருவியமைவு.
piston
n. உந்துதண்டு, குழலச்சுத் தண்டு.
pit
n. குழி, குண்டு, தோண்டிய பள்ளம், சுரங்கக்குழி, பொறிக்குழி, விலங்குகளைப் பிடிப்பதற்கான கிடங்கு, படுகுழி, ஆளை வீழ்த்துவதற்கான பள்ளம், சேவற் சண்டை அரங்கம், நரகக்குழி, உடல் குழிவு, உடலின் உட்பொள்ளல், தழும்புக்குறி, அம்மைத் தழும்பு, காட்சிக்கொட்டகையின் நிலத்தளம், காட்சிக் கொட்டகையில் நிலத்தளக் குழு, உந்துவண்டிப்பந்தயத்தின் தளவாட உதவிக் கொட்டில், விமானி இருப்பிடம், செலாவணக் களத்தில் தனிப்பொருள் வாணிகக் கிடங்கு, (வினை.) குழிவு உண்டுபண்ணு, பதனஞ் செய்யக் கிடங்கில் இடு, சேவல் முதலியவற்றைச் சண்டை அரங்கத்தில் விடு, காட்சியரங்கத்தில் விடு, எதிராக நிறுத்திப் போராட விடு, (மரு.) தொட்ட இல்ங் குழிவுறு.
pitch
-1 n. நிலக்கீல், சூட்டில் களியாயிளகும் கரும்பசைக் கட்டிப்பொருள், (வினை) நிலக்கீல் கொண்டு பொதி, நிலக்கீல் பூச்சிடு, நிலக்கீல் தடவு.
pitch-and-toss
n. நற்பேறு எறிகணைவீச்சு.
pitch-cap
n. தண்டனைக் கருவியாகப் பயன்படுத்தப்பட்ட நிலக்கீல் உள்வரியிட்ட தொப்பி.
pitch-farthing
n. நற்பேறுநாணய எறியாட்டம்.
pitch-pine
n. அரக்குப்போன்ற பிசின்தரும் தேவதாருவகை.
pitch-pipe
n. ஒத்தூது குழல், சுருதிக்குழல்.
pitch-wheel
n. மற்றொரு சக்கரமியக்கும் பற்சக்கரம்.
pitchblende
n. கதிர்மத்துக்குரிய முக்கியக் கனிப்பொருள் வகை.
pitched
a. நெருங்கிக்கலந்த, அடர்ந்து கைகலப்புற்ற.
pitcher
-1 n. பரணி, பெரியசாடி, (தாவ.) சாடிவடிவான இலைதிரியுறுப்பு.
pitchfork
n. கவர்க்கோல், வைக்கோல்வாரி, (இசை.) கவர்முள் இசைக்கருவி, (வினை.) கவர்க்கோலால் எடுத்துத்தள்ளு, கவர்க்கோலால் எடுத்தெறி, பணி-பதவி முதலியவற்றில் தள்ளித்திணி.
pitchstone
n. நிலக்கீல் போலத் தோற்றமளிக்கும் எரிமலைப்பாறை.
pitchy
a. நிலக்கீலால் ஆகிய, நிலக்கீலுக்கு உரிய, நிலக்கீலின் தன்மையுடைய, நிலக்கீல் போன்ற, நிலக்கீல் போன்ற கருமை நிறமுடைய.
piteous
a. இரக்க முண்டு பண்ணுகிற, இரங்கத்தக்க, வருந்தத்தக்க.
pitfall
n. இடறுகுழி, விலங்குகளைப் பொறியாக வீழ்த்துவதற்கு அகழப்பட்ட, சதிப்பொறி, வீழ்த்துபொறி.
pith
n. தாவரங்களின் உள்ளீடான மென்சோறு, பழவகைகளின் தோட்டு உள்வரி மரப்பொருள், மைய இழைமம், நடுநாடி, நடுத்தண்டின் மச்சை, உட்கரு, உள்ளீட்டுப்பகுதி, உயிர்க்கூறு, கருச்சத்து, ஆற்றல், வல்லமை, தனிச்சிறப்பு, சுருக்கம், சாரம், கருப்பொருள், உயிர்க்கூறான பொருள், நெட்டி, (வினை.) தண்டெலும்பகற்றி விலங்கினைக் கொல்.