English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
picul-stick
n. தோளில் மாட்டிச் சுமைகளைத் தூக்கிச் செல்வதற்கான கோல்.
piddle
v. சிறுபிள்ளைத் தனமாக நட, சுவைக்காது உண், (பே-வ) சிறுநீர் கழி.
piddock
n. தூண்டிவிரையாகப் பயன்படுத்தப்படும் இரட்டைத் தடுக்கிதழ் நத்தை வகை.
pidgin
n. (பே-வ) ஒருவரது வேலை, விவகாரம்.
pie
-1 n. பறவை வகை, வீண்வம்பு பேசபவர்.
pie-a-pat
n. தட்டுத் தடவெனும் ஒலி, தடதடவெனும் ஓசை, (வினையடை) தட்டுத்தடவெனும் ஒலியுல்ன், தடதடவென.
piebald
a. குதிரை முதலியவற்றின் வகையில் முறையின்றி வெண்மை கருமை நிறங்களையுடைய, பலவகையான, கதம்பமான, கலப்பினமான.
piece
n. துண்டு, கூறு, பகுதி, துண்டு நிலம், அடைப்பிட்ட நிலப்பகுதி, பிரிவுற்ற பகுதி, கண்டம், தனிக்கூறு, முனைமுப்ம், மாதிரிப்பகுதி, பாளம், ஒன்றுபட்ட கூறு, சினைப்பகுதி, அளவுப்பகுதி, அளவுமிடா, மாதிரி, எடுத்துக்காட்டு, சுடுபடைக்கலம், பீரங்கி, பீரங்கிக்குழல், சதுரங்கம் முதலிய ஆட்டங்களில் ஆட்டக்காய், நாணயம், படம், இலக்கியப்படைப்பு, இசைப்பாடல், நாடகம், (வினை.) இணைத்திடு, ஒட்டுப்போடு, முழுமையாக்கு, இழைகளைப்பொருத்து, இணைத்துப்பொருத்தவை, சேர்த்து உருவாக்கு, கூட்டி உருப்படுத்து, சிறுகச்சிறுக ஈட்டு, கதை முதலியவற்றின் வகையில் பகுதிகளைச் சேர்த்து உருவாக்கு, ஒருங்கிணை.
piece de resistance
n. சாப்பாட்டில் வலுப்பண்டம்.
piece-goods
n.pl. திட்டமான நீளத்துடன் நெய்யப்படுந் துணி, ஜவுளி.
piecemeal
n. சின்னஞ் சிறுதுண்டு, கொஞ்சங்கொஞ்சமான அளவு, (பெ.) சிறிது சிறிதாகச் செய்யப்படுகிற, துண்டு துண்டான, (வினையடை.) துண்டு துண்டாக, சிறிது சிறிதாக.
piecer
n. இழை நெருடி, நுற்புத் தொழிற்சாலயில் அறுந்துபோன இழைகளைப் பொருத்துவதற்காக அமர்த்தப்பட்டுள்ள சிறுவன் அல்லது சிறுமி.
piecrust
n. சினையப்பத் தோடு, மோதக வகையின் வெந்த மாத்தோடு.
pied a. terre
n. உள்ளங்கால் வைப்பிடம், தற்காலிகத் தங்கலிடம்.
pier
n. அலை தாங்கி, இரேவு, அலை இடைகரை, அலைவாய்க்குறடு, பாலந்தாங்கி, தூண், பலகணிகளுக்கு அடையிலுள்ள திண்கட்டு வேலை.
pier-glass
n. முற்காலக் கட்டுமானங்களிற் பலகணிகளுக்கிடையில் அமைக்கப்பட்ட நிலைக்கண்ணாடி, நீண்டுயர்ந்த பெரிய நிலைக்கண்ணாடி.
pierage
n. அலைமேடையைப் பயன்படுத்துவதற்கான கட்டணம்.
pierce
v. குத்தி ஊடுருவு, துளைத்து உட்செல், குளிர்-நோவு-துன்பம் வகையில் உட்புகுந்து வருத்து, கூர்ந்துருவ நோக்கு, ஊசி முதலியவற்றினாற் குத்து, மிடா முதலியவற்றில் துளைஉண்டுபண்ணு, வல்லந்தமாக நுழை.
Pierian
a. வடக்கு தெசலி நாட்டிலுள்ள கலைத் தெய்வங்களின் இருப்பிடமெனப் புகழ்பெற்ற பியரியா என்னுமிடஞ் சார்ந்த.