English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
piccaninny
n. சிறுகுழந்தை, நீகிரோவர் குழந்தை, (பெ.) சின்னஞ்சிறிய, குழந்தை இயலுடைய.
piccolo
n. சிறு புல்லாங்குழல் வகை.
pice
n. பைசா, செப்புக்காசு.
pichiciago
n. தென் அமெரிக்காவில் சிலி நாட்டைச்சேர்ந்த வளை தோண்டும் இயல்புடைய சிறுவிலங்கு வகை.
pick
n. குந்தாலி, குத்துகோடரி, பற்குச்சி, கூர்நுனிக்கருவி, பொறுக்குதல், தெரிந்தெடுத்தல், தெரிவு, ஆய்வு, ஒன்றன் மிகச்சிறந்த கூறு, (வினை.) குந்தாலியாற் கொத்து, கல்லு, குந்தாலியால் வெட்டித் துளைசெய், பல்குத்து, எலும்பு முதலியவற்றில் ஒட்டிக்கொண்டிருக்கும் தசையை அப்ற்று, பழம்பறி, மலர்கொய், பறவைகள் வகையில் கூலம் முதலியவற்றை அலகினால் கொத்தியெடு, மனிதர்கள் வகையில் சிறிது சிறிதாகத் தின், (பே-வ) சாப்பிடு, பொறுக்கு, தேர்ந்தெடு, ஆய்ந்தெடு, பிய்த்தெறி, பிரித்தெடு.
pick-a-back
adv. சுமைபோலத் தோளிலும் முதுகிலும் ஏற்றிக்கொண்டு.
pick-me-up
n. கிளர்ச்சி பான வகை.
pick-up
n. தற்செயலாக அறிமுகமானவர், எதிரெதிர்கட்சி ஆட்டத்தலைவர்கள் தங்கள் கட்சி ஆட்டக்காரர்களை மாறி மாறித் தேர்ந்தெடுத்து ஆடும் விளையாட்டு, மரப்பந்தாட்டவகையில் பந்தினைக் கையாற் பற்றியெடுத்தல், பதிவிசைப் பெட்டியின் இசைத்தட்டுப் பாடல்களை மின் ஆற்றலால் வானொலி ஒலிபெருக்கியின் மூலங் கேட்கும்படி செய்வதற்கான அமைவு.
pickax, pickaxe
குந்தாலி, (வினை.) குந்தாலியால் நிலம் முதலியவற்றைக் கொத்து, குந்தாலியைக் கொண்டு வேலைசெய்.
pickelhaube
n. கூர்முனையுடைய தலைக்கவசம்.
picker
n. குந்தாலியால் நிலங்கொத்துபவர், பழம் பறிப்பவர், மஷ்ர் கொய்பவர், நிலங் கொத்துவதற்கான அல்லது கல்லுவதற்கான கருவி வகைகள்.
pickerel
n. மீன் வகையின் குஞ்சு.
picket
n. குற்றி, கட்டுத்தறி, வேலிகளுக்கான முளை, (படை.) கழுமரம், தண்டனைக்குரியவர் நிறுத்தி வைக்கப்படுவதற்குரிய கூர்ங்கழி, கழுமர ஏற்றத்தண்டனை (படை.) பகைப்புலக் காவற்படை, எல்லைக்காவற் பிரிவு பாசறைக் காவற் பிரிவு, நகர்க்காவல் பாசறைப்பிரிவு, (வினை.) கூர்முளையடித்துக் காப்பமை, திரை முதலியவற்றை முளையடித்துக் கட்டிவை, காவற்பணியில் வீரர்களை நிறுத்து, மறியல் செய்பவர்களைக் கொண்டு தொழிலாளர்களை சூழ்ந்து, நெருக்கு, மறியல் செய்.
pickets
n.pl. வேலை நிறுத்தம் முதலியவற்றின் போது தனியாகவோ கூட்டாகவோ மறியல் செய்பவர்கள்.
picking
n. கொத்துதல், கல்லுதல், கொய்தல், பறித்தல், தெரிந்தெடுத்தல், கள்ளத்தனமாய் பூட்டைத் திறத்தல்.
pickings
n.pl. மேல்வரும்படிகள், பிசிர்வருமானங்கள்.
pickle
n. ஊறவைப்பதற்குரிய நீர்மம், ஊறல் உப்புநீர், ஊறற் புளியங்காடி, ஊறற் சிறுதேறல், துப்புரவாக்குவதற்கான காடிக் கரைசல், குறும்புக்குழந்தை, (வினை.) உவர்நீர் முதலியவற்றில் ஊறவைத்துப் பதனமிடு, புளிக்காடியில் ஊறுகாய் போடு, உப்புநீர் முதலியவை ஊட்டிப் பக்குவஞ்செய், (கப்.) ஆளைக் கசையாலடித்த பிறகு அவன் முதகில் உப்பு அல்லது புளிக்காடி தடவித் தேய்.
pickles
n.pl. ஊறுகாய், உப்பு முதலியவற்றில் ஊறினகாய், வெங்காய ஊறல், வெள்ளரிக்காய் ஊறல்.
picklock
n. பூட்டுக்களைக் கள்ளத்தனமாகத் திறப்பவர், பூட்டுக்களைக் கள்ளத்தனமாககத் திறப்பதற்கான கருவி.
pickpocket
n. முடிச்சு மாறி, கத்திரிக்கள்ளன்.