English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
philately
n. அஞ்சல் தலைத் திரட்டு, அஞ்சல் தலை ஆய்வு.
philharmonic
n. இசையார்வமிக்கவர், (பெ.) இசைவிருப்புமிக்க.
philhellene
n. கிரேக்கர்களிடம் நட்போடும் அன்போடும் பழகுபவர், கிரேக்க நாட்டு விடுதலை ஆதரவாளர், (பெ.) கிரேக்கரிடம் நட்பார்வம் மிக்க, கிரேக்க நாட்டு விடுதலைக்கு ஆதரவான.
PhilippI
n. கி,மு,43இல் நடைபெற்ற பெரும்போர்.
philippics
n.pl. மாசிடோனைச் சேர்ந்த பிலிப்பிற்கு எதிராக டெமாஸ்தனிஸ் என்ற பண்டைக் கிரேக்க சொற்பொழிவாளர் செய்த சொற்பொழிவுகள், அந்தோணிக்கு மாறாகச் சிசரோ செய்த ஆவேசச் சொற்பொழிவுப்ள், கடுமையான வசைமாரி, திட்டு.
philippina, philippine
n. ஒருவகைத் தின்றிகொட்டை, கொட்டைப்பருப்பு பகிர்ந்தூண் விளையாட்டு மரபு.
Philistine
n. பிலிஸ்தியர்கள், இஸ்ரவேலர்களைத் துன்புறுத்திய போர் விருப்பமுள்ள மக்களினம், கைப்பற்றித் துன்புறுத்தும் எதிரி, அமீனா, இலக்கியக் கருத்துரையாளர், வெளியார், செர்மானிய பல்கலைக்கழக வழக்கில் மாணவரல்லாதவர், பணபற்றவர், உயர்நாட்டமற்றவர், உலகியல் நாட்டமுடையவர், (பெ.) பண்பற்ற, நாகரிகமற்ற, உயர்நாட்டமற்ற, உலகியற்பற்றுடைய.
philobiblic
a. புத்தக விருப்புடைய, நுலார்வமுடைய.
philogynist
n. பெண் விருப்பர்.
philological
a. மொழிநுல் சார்ந்த, கலையிலக்கிய ஆர்வஞ்சார்ந்த.
philologist
n. மொழிநுல் வல்லார், கலையிலக்கிய ஆர்வலர்.
philology
n. மொழிநுல், கலை இலக்கியப் பற்றார்வம்.
philomath
n. கல்வியார்வலர்.
Philomel, Philomela
(செய்.) இராக்குயில், இரவிற் பாடும் பறவை வகை.
philoprogenitive
a. பிள்ளைக்கனி ஆர்வமுடைய.
philosopher
n. மெயந்நுல் அறிஞர், தத்துவஞானி, மெய்யுணர்வுப் பற்றார்வலர், மெய்விளக்க இயல் ஆய்வாளர், அறிவாராய்ச்சிக் சிந்தனையாளர், மெய்யுணர்வுக் கோட்பாட்டுக்கேற்ப வாழ்க்கை நடத்துபவர், உள்ள நடுநிலையாளர், எவ்வகை இடர்களிலும் சிக்கல்களிலும் உலைவிலா அமைதியுடையவர்,
philosophic, philosophical
a. மெய்யுணர்வு இயல் சார்ந்த, தத்துவ ஞானத்துக்குரிய, மெய்யுணர்வியலிற் பற்றுடைய, தத்துவ அறிவுத்திறம் சான்ற, மெய்யுணர்வார்ந்த, இடரிடை உலையா அறிவமைதியுடைய, தன்னடக்க அமைதி வாய்ந்த.
philosophism
n. மெய்யுணர்வுப் பாவனை, மெய்யுணர்வுவித்து, பிரஞ்சு அறிவுக்களஞ்சியத்தார் மெய்விளக்கமுறை.
philosophize
v. மெய்யுணர்வு இயலாளராகச் செயலாற்று, தத்துவ ஆராய்ச்சி செய், கொள்கை ஆய்வு செய், தத்துவம் பேசு, கொள்கை ஆய்விலாழ்ந்துவிடு, நன்மை தீமை ஆழ்ந்தாராய், தத்துவப் போக்காக்கு, மெய்யுணர்வு இயலாளராக்கு, சமநிலைப்படுத்து, அறிவமைதிப்பண்பூட்டு.
philosophy
n. அறிவார்வம், மூல முதற்காரணம் பற்றிய சிந்தனை, பொருள்களின் பொதுமூலக் கோட்பாட்டாராய்வு, தத்துவம், தனித்துறை அடிப்படைக் கோட்பாட்டாராய்ச்சி, மனவமைதி, பகுத்தறிவுச்சிந்தனை, வாழ்க்கைக்கோட்பாடு, வாழ்க்கை நடைமுறைத்திட்டம், மெய்விளக்கியல், மெய்யுணர்வுக் கோட்பாட்டுத்துறை, மெய்யுணர்வு நுல், ஆழ்ந்த அறிவமைதி, நடுநிலையமைதி.