English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
philotechnic
a. தொழிற்கலையார்வமுடைய, கலைநுணுக்க ஆர்வஞ் சார்ந்த.
philter, philtre
வசிய மருந்து, காதலைத் தூண்டும் மருந்து.
phiz
n. (பே-வ) முகம், முகத்தோற்றம்.
phlebitis
n. குருதி நாளத்தின் புறத்தோல் வீக்கம்.
phlebolite, phlebolith
n. குருதி நாளங்களில் ஏற்படும் கண்ணப்படிவுக் கோளாறு.
phlebotomize
v. குருதி வடிக்கும் மருத்துவமுறையைக் கையாளு, குருதி வடிப்புச்செய்.
phlebotomy
n. முற்காலக் குருதிவடிப்பு மருத்துவமுறை, மருத்துவமுறைக் குருதிவடிப்பு.
phlegm
n. சளி, கோழை, கபம், குளிர்ச்சி, சோம்பேறித்தனம், உணர்ச்சியற்ற தன்மை.
phlegmagogue
n. கபம் வெளிப்படுத்தும் மருந்து.
phlegmatic
a. கபம் உண்டுபண்ணுகிற, கோழை நிரம்பிய, தணுப்பு மிக்க, மடிமையார்ந்த, எளிதிற் செயற்படாத.
phlegmon
n. அழற்சிக்கட்டி, பரு.
phloem
n. (தாவ.) மென்மரம் சூழ்பகுதி, வளரும் மரப்பகுதியும் அதனுடன் இணைந்த இழைமங்களும் சேர்ந்த தொகுதி.
phlogistic
a. தனிமமாக முன்பு கருதபபட்ட எரிபொருட்களின் எரிப்பாற்றல் சார்ந்த, (மரு.) அழற்சியுடைய.
phlogiston
n. தனிமமாக முன் கருதப்பட்ட எரிபொருட்களின் எரிப்பாற்றல் சார்ந்த, (மரு.) அழற்சியுடைய.
phlorizin
n. மரவகைகளின் கசப்பு வேர்ப்பட்டை, மரவேர்ப்பட்டைகளிலிருந்து எடுக்கப்படும் கசப்புச்சத்து.
phlox
n. தென் அமெரிக்க மலர்க்கொத்துச் செடியினம்.
phobia
n. அச்சக்கோளாறு, வெறுப்புக்கோளாறு.
Phoebe
n. திங்களங்கடவுள்.
Phoebus
n. கிரேக்க புராண மரபில் செங்கதிர்க்கடவுள், அப்பலோ, (செய்.) கதிரஹ்ன்.
Phoenician
n. பினீசியாவில் வாழ்பவர், பினீசியாவின் மொழி, (பெ.) பினீசியாவைச் சார்ந்த, பினீசியரின் மொழி சார்ந்த.