English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
perplex
v. குழப்பமடைவி, திகைப்பூட்டு, சிக்கலாக்கு, சிக்கவை, பின்னிக்கொள்.
perplexity
n. தடுமாற்றம், மனக்குழப்பம், இரண்டகநிலை, தடுமாற்றம் உண்டுபண்ணுவது, சிக்கலான நிலை.
perprep.
வழியாக, மூலமாக, ஒவ்வொன்றிற்கும், ஒவ்வொருவருக்கும், அளவுக்கு.
perquisite
n. இடை ஆதாயம், தற்செயலாகக் கிடைத்த மிகைப்பேறு, சுதந்திரம், பணியாளர் சேதாரப்பொருளுரிமை, வாடிக்கைக் கையுறை, (சட்.) முறையான வருமானத்துக்கு மேற்பட வரும் பண்ணை முதல்வர் ஆதாயம்.
perron
n. வாயிற்படி மேடை.
perry
n. பேரிப்பழத் தேறல்வகை.
persecute
v. வாட்டு, கொள்கைவேறுபாடு காரணமாகத்துன்புறுத்து, அடக்குமுறை அட்டுழியங்களுக்கு ஆளாக்கு,இடர்ப்படுத்து, முறைகடந்து, வருத்து, தொந்தரவு கொடு.
persecution
n. அடக்குமுறை அட்டுழியம், விடாத்துயரளிப்பு.
persecutor
n. வருத்துவோர், ஆரஞர் தருவோர்.
perseverance
n. விடா முயற்சி, ஆள்வினையுடைமை, சமயத்துறையில் திருவருளுக்கு ஆட்பட்ட நிலையில் இருந்து வருதல்.
persevere
v. விடாமுயற்சியுடன் செயலாற்று, உஞற்று.
Persian
n. பெர்சிய நாட்டவர், பெர்சிய மொழி, (பெ.) பெர்சிய நாடு சார்ந்த.
persiennes
n.pl. எளிய கிடைச்சட்டங்களுடன் கூடிய வெளிப்புறப் பலகணித் திரைகள்.
persiflage
n. ஏளனப்பேச்சு, இலேசான வசவு.
persimmon
n. அமெரிக்க வகை ஈச்சம்பழம்.
persist
v. விடாது வற்புறுத்து, விடாப்பிடியாயிரு, விடாதுதொடர், தொடர்ந்து வாழ்ந்திரு, கடந்துவாழ், எஞ்சியிரு.
persistene, persistency
n. விடாப்பிடியாக இருக்கும் இயல்பு, தொடர்ந்து நீடிப்பு, பிடிவாதம்.
persistent
a. உறுதியாக நிற்கிற, பிடிவாதமாமன, விடாப்பிடியான, எதிர்ப்பைக் கடந்து முன்னேறுகிற, (வில,. தாவ.) கொம்புகள்-மயிர்-இலைகள் முதலியவற்றின் வகையில் நிலையான.
person
n. தனியொரு மனிதர், ஆள், உயிருள்ள மனித உடம்பு, (சட்.) ஒப்புக்கொள்ளப்பட்ட மனித உரிமைகளும் கடமைகளும் உடையவர், ஒப்புக்கொள்ளப்பட்ட உரிமைகளும் கடமைகளும் உடைய கூட்டவை, நாடகம் அல்லது கதையில் வரும் உறுப்பு, (இலக்.) தன்மை-முன்னிலை-படர்க்கை என்ற மூவிடங்களில் ஒன்று, (வில.) கூட்டிணை உயிர்களில் ஒன்று.
persona
n. ஆள், தனியொரு மனிதர்.