English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
permissive
a. இசைவு தருகிற, கட்டாய வற்புறுத்தலின்றி உரிமை வழங்கப்படுகிற, தடையில்லாத.
permit
-1 n. இசைவாணைச்சீட்டு, சுங்கம் விதித்ததக்க சரக்குகள் முதலியவற்றை இறக்கவோ எடுத்துச்செல்லவோ இசைவளிக்கும் எழுத்தாணை, அனுமதிச்சீட்டு, இசைவு, அனுமதி.
permutation
n. (கண.) தொகுதியின் உறுப்பு வரிசைமாற்றம், வரிசை மாற்ற ஒழுங்கமைவு, வரிசைமாற்ற வகைகளில் ஒன்று.
permute
v. முறைமாற்று, வரிசைமாற்று.
pern
n. தேனீக்கள்-குளவிகள் ஆகியவற்றின் முட்டைப்புழுக்களைத் தின்னும் பறவை வகை.
pernicious
a. பொல்லாத, பெருங்கேடு பயக்கவல்ல, அழிவுண்டாக்கக்கூடிய, சாவுக்கேதுவான.
pernickety
a. (பே-வ) சிறுகுற்றமும் பொறாத, இடர்ப்பாடான, விழிப்பாகக் கையாளவேண்டியிருக்கிற, நுட்பக்கவனந் தேவைப்படுகிற.
pernoctation
n. இரவினைக் கழித்தல், சமயத்துறையில் இரவு முழுதுங் கண்விழித்தல்.
perorate
v. சொற் பொழிவில் தொகுத்து முடிவுரை கூறு, விரிவாகப் பேசு.
peroration
n. சொற் பொழிவின் முடிவுரைப்பகுதி, நாத்திறம் படைத்த சொற்பொழிவு.
peroxide
n. (வேதி.) பர உயிரகை, (பே-வ.) நீரகப் பரஉயிரகை, நச்சரியாவும் மயிரை வெளுப்பதற்கும் பயன்படுத்தப்படும் பிசுபிசுப்பான நிறமற்ற நீர்மம், (வினை.) நீரகப் பர உயிரகையைக்கொண்டு மயிரை வெளுப்பாக்கு.
perpend
-1 n. சுவரின் ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்கு அதனுடே செல்லுங் கல்.
perpendicular
n. குத்துக்கோட்டினை அறுதி செய்வதற்கான கருவி, செங்குத்துக்கோடு, (பெ.) தொடுவானத் தளத்திற்குச் செங்கோணத்திலுள்ள, செங்குத்தான, நிலைக்குத்தான, சாயவற்ற, நிற்கிற நிலையிலுள்ள, (வடி.) குறிப்பிட்ட கோடு-தளம்-அல்லது பரப்பிற்குச் செங்கோணத்திலுள்ள.
perpendicularity
n. செங்குத்து நிலை.
perpendiculars
n.pl. கப்பல் நீளத்தை அறுதிசெய்வதற்குதவும் வகையில் அதன் நீர்க்கோட்டின் இருமுனைகளிலிருந்தும் மேல்நோக்கி எழும் செங்குத்துக்கோடுகள்.
perpetrate
v. குற்றஞ் செய், செய்யுள் வகையில் இயற்று,சிலேடை வகையில் அமை.
perpetual
a. நிலையான, என்றுமுள்ள, மன்னும் நிலையதான, தொடர்ச்சியான, (பே-வ) அடிக்கடி நிகழ்வதான.
perpetuate
v. நிலைபேறுடையதாக்கு, என்றும் இயங்கச்செய், நீடித்திருக்கச்செய், மறக்கப்டாமற்பேணு.
perpetuation
n. நிறைபேறாக்கம், முடிவில் தொடர்ச்சி, என்றென்றும் காத்துப்பேணுகை, நெடுநீள் தொடர்ச்சி, நெடுநீள் காலம் பேணுகை.
perpetuity
n. நிலைப்பாடு, நிலைபேறு, நிலைத்திருக்குந்தன்மை, எல்லையில் காலம், வரையறுக்கப்படாக் கால எல்லை, என்றுமுள்ளது, நிலையான உடைமை, நிலையான பதவி, நிலையான ஆண்டுப்படி, நிலையான ஆண்டுப்படிக்குரிய மூலதனத்தொகை.