English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
persuader
n. கருத்தை ஒப்புக்கொள்ளச் செய்பவர், இணங்க வைப்பது.
persuasible
a. நயந்து சொல்லி நம்பவைக்கத் தக்க, இணங்குவிக்கத் தக்க, சொல்லித் திருத்தக்கூடிய.
persuasion
n. இணங்குவித்தல், மெய்யெனக்காட்டி நம்பவைத்தல் உறுதியான கொள்கைப் பற்றார்ந்த நம்பிக்கை, சமயக்கோட்பாடு, சமயக்கோட்பாட்டுப் பிரிவினர், இனம், வகை, வகுப்பு.
persuasive
n. தூண்டுதல், செயல்நோக்கம், (பெ.) மெய்ப்பிக்கவல்ல, தூண்டி இயக்கக்கூடிய, கவர்ச்சியுடைய.
pert
a. அடக்கமற்ற, துடுக்கான.
pertain
v. உரியதாயிரு, சார்ந்ததாயிரு, பொருத்தமாயிரு, தொடர்புடையதாயிரு, சார்புபெற்றிரு.
pertinacious
a. பிடிவாதமான, விடாப்பிடியுடைய, இணங்காத.
pertinacity
n. இணங்காமை, பிடிவாதம், முரட்டுத்தனம், விடாப்பற்று.
pertinence, pertinency
n. பொருத்தம், தொடர்புள்ளதாயிருக்கும் நிலை.
pertinent
a. சார்புடைய, ஏற்புடைய, தகுந்த, பொருத்தமான.
pertinents
n.pl. சார்ந்தவை, சார்புரிமைகள், உடைமைப்பொருள்கள்.
perturb
v. கலக்கு, மனத்தைக் குழப்பு.
perturbation
n. கலக்குதல், கலங்கிய நிலை, மனக்கலக்கம், ஒழுங்கின்மை, கலக்குவது, (வான்.) வானக்கோளின் முறையான இயக்கத்தில் மூன்றாவது பொருளாற்றலால் உண்டாகும் சிறு தடுமாற்றம், வானக்கோளின் சுற்றியக்கத்தில் மையக்கோளத்தின் கோளம் மீறிய உருவமைதியினால் ஏற்படுஞ் சிறிய உலைவு.
peruke
n. பொய்ம்மயிர்த் தொப்பி.
perusal
n. தேர்ந்தாய்வு நுண்ணாய்வு, படித்தல், பார்வையிடல்.
peruse
v. கவனமாகப் படி, நுண்ணாய்வு செய்.
Peruvian
n. தென் அமெரிக்காவிலுள்ள பெரு நாட்டினர், (பெ.) பெரு நாடு சார்ந்த.
pervade
v. ஊடுருவிப்பரவு, பரந்து தோய்வுறு, ஊடுருமவி நிரப்பு, கரைந்து தெவிட்டுநிலை எய்துவி.
pervasive
a. படர்ந்து பரவுகிற, ஊடுபரவும் பாங்குள்ள, ஊடுருவி நிரம்பும் ஆற்றலுடைய.
perverse
a. விடாது பிழை செய்கிற, வேண்டுமென்றே தவறுசெய்கிற, விபரீதமான, தேவைக்கு முரணாண, கட்டுமீறிய, முறைதிறம்பிய, சொற்கேளாத, சிடுசிடுப்பான, குணக்கேடுடைய, நெறிகோணிய, தவறான போக்குடைய, கொடிய, ஏறுமாறான, தீர்ப்பு வகையில் சான்றுகளுக்கு முரண்பட்ட, நடுவர் காட்டிய நெறிக்கு மாறான.