English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
proof-plane
n. காப்புறையிட்ட கைப்பிடியின் மேல் மின் கடத்தி பொருத்திப் பொருளின் மின் ஊட்டம் அளக்குங்கருவி.
proof-reader
n. அச்சுப் பார்வைப்படி திருத்துபவர்.
proof-reading
n. சரவையிடுதல், அச்சுப் பார்வைப்படி திருத்துதல்.
proof-sheet
n. அச்சுப் பார்வைத்தாள்.
proofless
a. சான்று இல்லாத.
prop
-1 n. உதைகால், ஆதாரக்கம்பம், ஆதாரம், பற்றுக்கோடு, ஆதாரக்கம்பி, துணை இணைப்பு, பொறுப்பாளர், நடத்துபவர், (வினை.) முட்டுக்கொடு, அணைப்புக்கொடு, ஏற்றுத்தாங்கு, குதிரைவகையில் முன்னங்கால்களை விறைப்பாக ஊன்றிக்கொண்டு திடீரென ஓடாது நின்றுவிடு.
prop-jet engie
n. நீர் அல்லது நீராவியால் சுழலும் பொறி உருளையுடைய விமான இயந்திரம்.
propaedeutic
n. கலைமுன் கலை, கலைமுன் அறிபொருள்.
propaedeutics
n. pl. முன்னணி அறிவு.
propaganda
n. பரப்புரை, கருத்துப் பரப்பு, பிரசாரம், பரப்பப்படுஞ் செய்தி, கோட்பாட்டுப் பரப்புதல் அமைப்பு.
propagandist
n. கொள்கைப் பரப்பீட்டாளர், பரப்புக்குழு உறுப்பினர், மதமாற்றத் தொண்டு ஊழியர், ரோமன் கத்தோலிக்க உயர்படிப் பரப்பீட்டுக்குழு உறுப்பினர், உயர்படிப் பரப்பீட்டுக்குழுவின் ஆட்சியிலுள்ள சமயப்பரப்பாள், பரப்பீட்டுக் குழுவாற் சமயம் மாற்றப்பட்டவர்.
propagate
v. இனம் பெருக்கு, இனப்பெருக்கமுறு, தன்னினந் தழைப்பி, மரபு தொடர்வி, பண்புமரபு தொடர்வி, பண்பு நீடித்ததுத் தழைக்கச் செய், வெளிப்பரப்பு.
propagation
n. பெருக்கம், பரப்புகை.
proparoxytone
n. ஈற்றயலுக்கு முந்திய அசையில் முனைப்பழுத்தமுடைய சொல், (பெ.) சொல்வகையில் ஈற்றயலுக்கு முந்திய அசையில் முனைப்பழுத்தமுடைய.
propel
v. முற்பட இயக்கு, முன்னோக்கிச் செலுத்து.
propellant, propellent
n. முற்செலுத்தம், (பெ.) முன்னோக்கிச் செலுத்துகிற.
propeller
n. கப்பலின் இயக்குறுப்பு, விமானச் சுழல்விசிறி.
propensity
n. மனப்பாங்கு, போக்கு, செயற்சார்பு,நிலைச்சார்பு.
proper
n. வழிபாட்டு நாட்கட்டளைமுறை, நான்முறைப்பாசுரம், வேளைமுறை வழிபாடு, வேளைப்பாசுரம், (பெ.) சரியான, பொருள் வகையில் சரிநேரான, பிழைபடாத, நேரான, நேரிய, தன்பெயருக்கொத்த, இயல் எல்லை வரம்புட்பட்ட, தகுதியான, தற்பண்புக்குப் புறமல்லாத, தனக்கேயுரிய, தனிமுறையில் உரிய, பொருத்தமான, தக்க, உகந்த, இசைவான, தனிப்பொருத்தமான, அதற்குத் தகுந்த, தனிப்பட வகுக்கப்பட்ட, சமுதாயத்திற்கு ஒத்த, மதிப்பார்ந்த, நேர்மையான, மெய்யான, ஒத்துக்கொள்ளத்தக்க, இயல்நிலை சார்ந்த, நல்தோற்றம் வாய்ந்த, (பே-வ) முழுநிறைவான, நிறுவகையில் இயல்பாக இயற்கையில் உள்ளபடியேயுள்ள, (இலக்.) பெயர் வகையில் இடுகுறியான, (வள்.) வான்கோள் இயக்கவகையில் தோற்றஞ் சாராத, இயல்பான புடைபெயர்ச்சி குறிக்கிற, (கண.) கீழ்வாய் எண்வகையில் தகுபின்னமான.
properispomenon
n. (இலக்.) கிரேக்கமொழியில் ஈற்றயலசை, வளைபழுத்தச் சொல், (பெ.) (இலக்.) கிரேக்க மொழிச்சொல் வகையில் ஈற்றயலசையில் வளைபழுத்தங் கொண்ட.